For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னைக்கு நன்றி-ஜனாபதியின் சுகோய் பைலட்!

By Staff
Google Oneindia Tamil News

Sajan with Parents
சென்னை: என் வாழ்க்கையி்ல் சென்னை அனுபவம் இல்லையென்றால் இந்த கவுரவம் கிடைத்திருக்காது என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பயணம் செய்த சுகோய் போர் விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் எஸ்.சாஜன் கூறினார்.

சாஜன், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சென்னையில் தான் முடித்துள்ளார். இவரது பூர்வீகம் கேரளா. 1984ல் சென்னைக்கு வந்தது சாஜன் குடும்பம். பள்ளிப்படிப்பு டவுட்டன் ஆங்கிலோ இந்தியன் ஸ்கூலில். அடுத்தது லயோலா கல்லூரியில் கணிதம் முடித்துள்ளார்.

லயோலாவில் படித்தபோது, என்.சி.சி. விமானப் படை பிரிவில் சேர்ந்துள்ளார். பின்னர், தாம்பரம் ஏர் போர்ஸ் ஸ்டேஷனில் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து மெட்ராஸ் ஃபிளையிங் கிளப்பில் தனியார் பைலட் உரிமம் பெற்றார்.

இதன்பிறகு தனது கல்வித் தகுதி மற்றும் பயிற்சியின் அடிப்படையில், 1992ம் ஆண்டு விமானப்படையில் இணைந்தார். இவரைப்போலவே இவரின் மூத்த சகோதரர் கேப்டன் சாபுவுக்கும் விமானப் படை மீது காதல். ஆனால் அவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. மாறாக ஏர் இந்தியாவில் பைலட் ஆகி விட்டார். ஏர் இந்தியாவின் தென் பிராந்திய பைலட்டுகள் யூனியனின் செயலாளராக இருக்கிறார் சாபு.

குடும்பப் பின்னணியில் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றாலும் எப்படியோ ஏர்ஃபோர்ஸ் மீது ஆசை வந்துவிட்டது என்று இவர்கள் கூறுகின்றனர்.

'குறிப்பாக, சென்னை லயோலாவில் நான் படித்த காலத்தில் தான் எனக்கு விமானப்படை மீது ஆர்வம் உருவானது. அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. இந்திய குடியரசுத் தலைவருடன் விமானத்தை இயக்கிச் செல்லும் அனுபவம் எனக்கு கிடைக்கும் என நான் எப்போதும் நினைத்துப்பார்த்தது கூட இல்லை.

இது என்னுடைய பணி எனபதால், பெரிதாக தெரியாமல் இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் இந்த அனுபவம் எனக்களிக்கப்பட்ட கவுரவமாகவே பார்க்கிறேன். இந்த சமயத்தில் நான் என்னுடைய சென்னை நாட்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். அப்போது எனக்கு இத்துறையில் ஆர்வம் வராமல் போயிருந்தால், இந்த கவுரவம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

சென்னையில் நான் பெற்ற கல்வி, அனுபவம்தான் இன்று இந்த கெளரவம் கிடைக்கக் காரணம். நான் சென்னைக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

குடியரசுத் தலைவர் பிரதீபா மிகவும் கூலாகவும், நம்பிக்கையோடும் காணப்பட்டார். பொதுவாக போர் விமானத்தில் பயணம் செய்வது சற்று கடினம் தான். வேகமாக சிந்திப்பது மட்டுமல்ல, சூழ்நிலை பற்றிய பிரக்ஞை எப்போதும் விழிப்பு நிலையிலேயே இருந்தாக வேண்டும்.

அந்த வகையில், எனக்கு அந்த விழிப்புணர்வைக் கொடுத்த என்னுடைய சென்னை அனுபவத்திற்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன் என்றே தோன்றுகிறது' என்றார் சாஜன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X