For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

17ல் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

By Siva
Google Oneindia Tamil News

உடன்குடி: குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வரும் 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

உடன்குடி அருகே உள்ள குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வரும் 17-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி வழிபாடு, விநாயகர் வேள்வி, தீபாராதனையும், செல்வ வழிபாடு, குபேர லட்சுமி வேள்வி, பிரசாதம் வழங்குதல் நிகழ்சசியும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு யானை மீது தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி இடுதல், முதல்கால வேள்வி பூஜை, ஒளி வழிபாடும், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும், இரவு 8 மணிக்கு பரதநாட்டியமும் நடந்தது. இன்று இரண்டாம் கால வேள்விகூடு பூஜைகள், பிரசாதம் வழங்குதல், பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது.

நாளை (16ம் தேதி) காலை 8 மணிக்கு சிறப்பு குரு தூய்மை, நான்காம் கால வேள்வி கூடு பூஜைகள், வேதிகா அர்ச்சனை, திருமறைகள் ஓதுதல், நிறை அலி அளித்தல், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 17-ம் தேதி காலை 11 மணி முதல் 12 மணிக்குள் மூலஸ்தான விமானம், சாலை கோபுர விமானம், முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு திருகுடமுழுக்கு நீராட்டு விழாவும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், பிற்பகல் 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு நந்நீராட்டு, சிறப்பு அலங்காரம், பூஜை பிரசாதம் வழங்குதலும், மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 9 மணிக்கு அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

English summary
Kumbabhishekam will be performed in Kulasekarapattinam Mutharamman temple on april 17. Special poojas will be performed to the deities on that day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X