For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கரநாராயண சாமி கோயிலில் இன்று சித்திரை திருவிழா தேரோட்டம்

By Siva
Google Oneindia Tamil News

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது.

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் தினமும் சுவாமி அமபாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை, சுவாமி, அம்பாள் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் தங்க பல்லக்கு, புஷ்ப பல்லக்கு, வெள்ளி பூத வாகனம், 63 நயன்மார்களுக்கு சுவாமி, அம்பாள் காட்சி கொடுத்த நிகழ்ச்சி நடந்தது.

திருவிழாவின் 7-ம் நாளான நேற்று காலை சுவாமி, அம்பாள் தந்தபல்லக்கிலும், இரவு முதலாவது சேவையாக நடராஜர் சிவப்பு சாத்தியும், 2-ம் சேவையாக இரவு 12 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் நடராஜர் ருத்ர தரிசனத்தில் வெள்ளை சாத்தி வீதி்யுலா நிகழ்ச்சி நடந்தது. இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.

English summary
Car festival will be celebrated tomorrow in Sankarankovil Sankaranarayana Swamy temple as part of Chithirai festival. Chithirai festival has begun there on april 8th and it is a 10 day celebration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X