ஓட்டுப் போடத் தயாராகும் 760 குண்டர் தடுப்புச் சட்ட கைதிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள 750 பேருக்கு ஓட்டுப் போடும் உரிமை உள்ளது. இதையடுத்து இவர்கள் தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர்.

தமிழகத்தில் பாளையங்கோட்டை,கோவை, மதுரை, திருச்சி, கடலூர், வேலூர், சேலம், சென்னை புழல் ஓனறு, புழல் இரண்டு, திருச்சி பெண்கள் மத்திய சிறை உள்பட என மொத்தம் 10 மத்திய சிறைகள் உள்ளன. இதுதவிர 5 மாவட்ட சிறைகள், 145 கிளை சிறைகள் உள்ளன.

இவற்றில் தண்டனை மற்று்ம் விசாரணை கைதிகள் என 25 ஆயிரம் கைதிகள் உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரு்ம் 13ம் தேதி நடக்கிறது. தேர்தலில் ஓட்டு போட பொதுவாக கைதிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் கடந்த 1996 சட்டமன்ற தேர்தலின்போது குண்டர் சட்ட கைதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்ட கைதிகள் பட்டியல் அவர்களின் தேர்தல் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவண நகல்களை சிறை கண்காணிப்பாளர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளித்தனர்.

தமிழகத்திலுள்ள 10 மத்திய சிறைகளில் இப்போது குண்டர் தடுப்பு கைதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு கைதிகள் 840 பேர் உள்ளனர். இவர்களின் ஆவண்ங்களை சரிபார்த்து நேற்று இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 750 கைதிகள் தேர்தலில் தபால் ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு கைதிகள் 75 பேர் உள்ளனர். இதில் தபால் ஓட்டு போட 70 பேர் தகுதி பெற்றுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
750 prisoners arrested under Goondas act have been declared qualifed for voting in Assembly polls. They will cast their votes by post.
Please Wait while comments are loading...