For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தைகள் தின ஸ்பெஷல்: துபாயில் 11 வயது சிறுமி தலைமையில் நடந்த கவியரங்கம்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் "தாலாட்டு" மற்றும் "மை" ஆகிய சிற‌ப்பித‌ழ்கள் வெளியீட்டு விழாவும், கவியரங்கமும் 16.11.2012 அன்று காலை 10.30 மணியளவில் துபாய் கராமா சிவ்ஸ்டார் பவனில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்தினை செல்வி ஆனிஷா பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. பொதுச் செயலாளர் சிம்மபாரதி வரவேற்புரையாற்ற, நிகழ்ச்சிக்கு விருதை மு.செய்யது உசேன் தலைமையேற்று உரையாற்றினார்.

Dubai
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 11 வயதே நிரம்பிய செல்வி ஆனிஷா தலைமையில் தாலாட்டு மற்றும் மை ஆகிய தலைப்புகளில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது.

விருதை மு.செய்யது உசேன், திண்டுக்கல் ஜமால், குத்புதீன் ஐபக், ஜெயராமன் ஆனந்தி, கீழை ராஸா, சிம்மபாரதி, ஜியாவுதீன், காவிரிமைந்தன், முகவை முகில், ஜெயாபழனி, நர்கீஸ் பானு ஆகியோர் பங்கேற்று தம் கவிதைகளை வழங்கினர். செல்வி ஆனிஷா, தாலாட்டுப் பாடல்களாய் வெளியான பல பாடல்களை அன்றும் இன்றும் என்கிற வகையில் தேர்ந்தெடுத்து அவற்றைப் பாடி ஒவ்வொரு கவிஞரையும் மேடைக்கு அழைத்த விதம் புதிய பாணி மட்டுமின்றி இனிமையாகவும் அழகாகவும் அமைந்தது. தாலாட்டின் மகத்துவம், தாலாட்டின் பெருமைகள், தாய்மையின் மொழியது என்று பல்வேறு கோணங்களில் கவிஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

வாழ்த்துரை வழங்கிய பொற்செல்வி கண்ணன் தமிழுக்கு ஆற்றிவரும் இனிய இத்தொண்டு மேன்மேலும் பெருகிட வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஷார்ஜா நகரத்தார் சங்க முன்னாள் தலைவர் திரு.அழகப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார். அசத்தப் போவது யாரு புகழ் தேவகோட்டை ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வழக்கறிஞராகப் பணியாற்றும் அவர் தம் துவக்கம் பேச்சாளராகவே பரிணமித்ததென்றும் பிறகு நகைச்சுவையாளராய் புகழ் பெற்றதையும் நினைவு கூர்ந்தார்.

அமைப்பின் தலைவர் திரு.கோவி்ந்தராசு அவர்கள் கவியரங்கத் தலைமை ஏற்ற சிறுமி ஆனிஷாவை வெகுவாகப் பாராட்டினார். மேலும் திரு.ராமநாதன் அவர்களின் அருமையான பேச்சைக்கேட்டு அக மகிழ்ந்து பாராட்டினார்.

சிறப்பு விருந்தினர் தேவகோட்டை ராமநாதன் அவர்களுக்கு திரு.கோவிந்தராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். நினைவுப்பரிசினை தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் திரு.ஜியாவுதீன் அவர்களும், திருமதி. நர்கீஸ் பானு அவர்களும் இணைந்து வழங்கினர்.

நிகழ்ச்சியில் முதலில் 'தாலாட்டு' இதழ் வெளியிடப்பட்டது.

'தாலாட்டு' சிறப்பிதழின் முதல் பிரதியை தேவகோட்டை ராமநாதன் வெளியிட திருமதி. பொற்செல்வி கண்ணன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை திரு.அழகப்பன் வெளியிட சுந்தர் அவர்களும், மூன்றாம் பிரதியை திரு.சையது உமர் வெளியிட திரு.நாகராஜ் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

'மை' சிறப்பிதழின் முதல் பிரதியை தலைவர் கோவிந்தராஜ் வெளியிட திரு.இராம பழனியப்பன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை திரு. கீழைராஸா வெளியிட திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்களும், மூன்றாம் பிரதியை திருமதி. ஜெயா பழனி வெளியிட திரு.ஹெல்த் கணேசன் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

அடுத்த மாத தலைப்புகளான 'தியாகம்' மற்றும் 'பிறந்த நாள்' ஆகிய தலைப்புகளில் கவிதைகளை 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்ட்டது.

தமிழ்த்தேர் இதழ்களின் அட்டைப்படங்களின் மூலம் அழகு சேர்ப்பதுடன் தலைப்பின் பொருளையும் பொதித்து வைக்கும் பொதுச் செயலாளர் திரு.சிம்மபாரதி அவர்களுக்கு நினைவுப்பரிசினை அழகப்பன் வழங்கினார். மாதம் இரண்டு இதழ்களை அழகுற பதிப்பிக்கும் திரு.ஜியாவுத்தீன் அவர்களுக்கு நினைவுப்பரிசினை திரு.தேவகோட்டை ராமநாதன் வழங்கினார். செல்வி. ஆனிஷாவிற்கு நினைவுப் பரிசினை தலைவர் கோவிந்தராஜ் வழங்கினார்.

ஏழாம் ஆண்டாகத் தொடர்ந்து தமிழ்த்தேருக்கு முழுமையான ஆதரவு நல்கிவரும் தலைவர் திரு.கோவிந்தராஜ் அவர்களுக்கு நிர்வாகிகள் அனைவரும் இணைந்து ஒரு நினைவுப்பரிசினை வழங்கினார்கள்.

அமைப்பின் ஆலோசகர் கவிஞர் காவிரிமைந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வ‌ழங்கினார். திருமதி. நர்கீஸ் பானு அவர்கள் நன்றியுரையாற்றினார். பின் மதிய உணவுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

கோவிந்தராஜ், காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழைராஸா, சிம்மபாரதி, ஆதிபழனி மற்றும் முதுவை ஹிதாயத்துல்லா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

English summary
Vanalai valar tamil organisation conducted kaviarangam and released two magazines on november 16 at Karama Sivestar Bhavan restaurant in Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X