For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் காப்பியக்கோ ஜீன்னாஹ் ஷரீபுத்தீனுக்கு பாராட்டு விழா

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக்த்தின் சார்பாக தீரன் திப்பு சுல்தான் காவியத்திற்காக இலங்கை அரசின் உயரிய விருது பெற்றதற்காக காப்பியக்கோ. ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கு பாராட்டு விழா கடந்த 17ம் தேதி மாலை 7:30 மணியளவில் துபாய் அல்தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளி உள்ளரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

காப்பியக்கோ. ஜின்னாஹ் ஷரீபுத்தீன், ஈடிஏ அஸ்கான் மற்றும் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சலாஹூதீன் காக்கா, ஸ்கை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனா. தானா மற்றும் நாசர் சுஹைப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தலைவர் மஹ்ரூப் அவர்களின் கிராத்துடன் நிகழ்ச்சி தொடங்க, தாவூத் மற்றும் குழுவினரின் நபிவாழ்த்தைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் கிளியனூர் இஸ்மத் வரவேற்புரையாற்றினார்.

அதன் பின் கவிஞர்கள் ஜியாவுதீன் மற்றும் காவிரிமைந்தன் ஆகியோர் ஜின்னாஹ் பற்றி வாழ்த்துக் கவிதையை பாட, தொடர்ந்து திருச்சி சையது, தேரிழந்தூர் தாஜுதீன் ஆகியோர் சிற்றுரையாற்றினர். தேரிழந்தூர் தாஜூதீன் பேச்சுக்கு நடுவே தன் காந்தக் குரலால் பாடல்கள் பாடி கூட்டத்தைக் கவர்ந்தார்.

அதைத் தொடர்ந்து அமைப்பின் செயலாளர் ஆசிப் மீரான் தன் கம்பீரக்குரால் தீரன் திப்பு சுல்தான் நூல் பற்றிய ஒரு இலக்கிய உரை நிகழ்த்தினார். பின்பு கீழை சீனாதானா, நாசர் சுஹைப், மஹ்ரூப் ஆகியோர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் மற்றும் திப்பு சுல்தான் பற்றி சிறப்பாக உரையாற்றினர். அதைத் தொடர்ந்து சலாஹுத்தீன் காக்கா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய ஜின்னாஹ் ஷரீபுத்தீன், தீரன் திப்பு சுல்தான் காவியம் எழுதிய காரணத்தையும், அதற்கு தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் விவரித்தார்.

விழாவின் சிறப்பம்சமான பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பாக கீழை ராஸா வடிவமைத்த ஜின்னாஹ் ஷரீபுத்தீன் பற்றிய அறிமுக காணொளி, மற்றும் நிவேதிதா ஆனந்தன், நர்கீஸ் ஜியாவுதீன் நடனம் அமைத்த தப்ஸுடன் கூடிய அரபி நடனம் போன்றவை பார்வையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.

விழாவின் இறுதியாக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பாக ஜின்னாஹ் சரீபுத்தீன், மற்றும் சலாஹூத்தீன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து அமீரகத்தின் பெரும்பாலான அமைப்புகள் சார்பாக அதன் தலைவர் மற்றும் செயலாளர், விழா நாயகன் ஜின்னாஹ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

நிகழ்ச்சியை ஆசிப் மீரான் மற்றும் குற்றாலம் அஸ்ரப் ஆகியோர் தொகுத்து வழங்க, கீழை ராஸா நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

நிகழ்வின் காணொளி ஏற்பாடுகளை மூன் டிவி ஏற்றுக் கொள்ள, நிழல் படங்களை ரியாஸ் மற்றும் சுப்பையா ஆகியோர் கவனித்துக் கொண்டனர். குற்றாலம் அஸ்ரப், சிம்மபாரதி, ஹனிபா, ஆசிப் மீரான் மற்றும் கீழைராஸா ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.

English summary
Pannattu Islamia Ilakiya Kazhagam has arranged for a programme to felicitate Jinnah Sharifuddin who got Sri Lanka's highest literary award for his 'Theeran Tipu Sultan Kaviyam'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X