For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திராட்சை, ஆப்பிள் சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு கட்டுப்படும்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தினசரி ஆப்பிள், திராட்சை, ப்ளுபெரி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்து குறைகிறது என்று சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடலில் சேருகின்ற சர்க்கரை முறையாக பயன்படுத்தப்படுவதிலும், சேமிக்கப்படுவதிலும் கோளாறு ஏற்படுவதால் நீரிழிவு நோய் வருகிறது. இன்றைக்கு உலகிலேயே மிகவும் முதன்மையான நோயாக நீரிழிவு கருதப்படுகிறது.

இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுடைய வாழ்க்கையின் உணவுப்பழக்கத்தைக் கொண்டு புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது

2 லட்சம் மக்கள்

2 லட்சம் மக்கள்

சுமார் இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான 25 வருட தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் ஆச்சரியப்படத்தக்க முடிவு தெரியவந்துள்ளது.

திராட்டை, ஆப்பிள்

திராட்டை, ஆப்பிள்

பழங்கள் அதிலும் குறிப்பாக, திராட்சை, ஆப்பிள், புளூபெர்ரி போன்றவற்றை சாப்பிட்டு வருபவர்களுக்கு நீரிழிவு வரும் ஆபத்து 25 சதவிகிதம் குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்டிராபெரி, எலுமிச்சை

ஸ்டிராபெரி, எலுமிச்சை

ஸ்டிராபெர்ரி, எலுமிச்சை போன்ற சில பழங்களால், இந்த ஆபத்து பெரிதாகக் குறையவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

ஜூஸ் குடிக்காதீங்க

ஜூஸ் குடிக்காதீங்க

அதேசமயம் ஆப்பிள், திராட்சை, ப்ளூபெரி போன்ற பழங்களை ஜூஸ் ஆக குடிக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு டைப் 2 டயபடீஸ் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

English summary
Eating more fruit, particularly blueberries, apples and grapes, is linked to a reduced risk of developing type-2 diabetes, suggests a study in the British Medical Journal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X