For Daily Alerts
Just In
வெளிநாட்டில் வாழ்வதால் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?: பாஸ்டன் விவாத மேடையில் கோபிநாத்

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் சித்திரை விழா 2013 என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா மசாசுசெட்ஸ், ஃபிராமிங்ஹாமில் உள்ள கீபே டெக் ஸ்கூலில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நீயா நானா புகழ் கோபிநாத் கலந்து கொண்டு விவாத மேடையை நடத்துகிறார். வெளிநாட்டில் வாழ்வதால் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா? என்ற தலைப்பில் நடக்கும் இந்த விவாத நிகழ்ச்சியில் பலர் கலந்து கொள்கின்றனர்.
கோபிநாத் முதன்முறையாக பாஸ்டனில் விவாத மேடை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.