For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபுதாபியில் நடந்த காயிதே மில்லத் ஆவண பட வெளியீட்டு விழா

By Siva
Google Oneindia Tamil News

அபுதாபி: முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை வெளியீட்டில் ஆளூர் ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழா கடந்த 4ம் தேதி மாலை 7.30 மணியளவில் அபுதாபியில் உள்ள அரப் உடுப்பி ஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி தலைமை தாங்கினார். அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத், அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிரை தவ்சீஃப் ரஹ்மதுல்லாஹ் இறைமறை வசனங்களை ஓதினார்.

பேரவையின் பொதுச் செயலாளர் முஹம்மது தாஹா வரவேற்புரையாற்றினார். பேரவையின் பொருளாலர் கீழக்கரை எஸ்.கே.எஸ். ஹமீதுர்ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார்.

அபுதாபி நோபல் குழும நிர்வாக இயக்குனர் சமுதாய புரவலர் ஷாஹுல் ஹமீத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், மாநில துணைச் செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், மாநில ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். எஸ்.டி. கூரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ் கனி கருத்துரை வழங்க, ஆவணப்பட இயக்குனர் ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார்.

காயிதே மில்லத் பேரவை சர்வேத ஒருங்கிணைப்பாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினருமான முன்னாள் எம்.பி. அப்துர்ரஹ்மான் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தின் சிடியை அப்துல் ரஹ்மான் அவர்கள் வெளியிட அதன் முதல் பிரதியை சமுதாய புரவலர்களான நோபில் மரைன் நிர்வாக இயக்குனர் ஹாஹுல் ஹமீத், எஸ்.டி. கூரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ் கனி ஆகியோரும், இரண்டாம் பிரதியை அய்மான் சங்கத்தின் முன்னாள் தலைவர் கீழை சையது ஜாஃபர், மூன்றாம் பிரதியை அய்யம்பேட்டை வாலன் ஜெய்லான் பாட்ஷா ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் திரையிடப்பட்டது. அய்மான் சங்கப் பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீத் நன்றியுரை நிகழ்த்த, அமீரக காயிதேமில்லத் பேரவை அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

திண்டுக்கல் ஜமால் முகையத்தீன் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகிகளான ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, வழுத்தூர் ஜே.முஹையத்தீன் பாட்ஷா, தஞ்சை பாட்ஷா கனி, இராமநாதபுரம் பரகத் அலி, கீழக்கரை ஹமீத் யாசின், கும்பகோணம் சாதிக், அய்மான் சங்க நிர்வாகிகளான கீழக்கரை முஹம்மது ஜமாலுத்தீன், திருவாடுதுறை அன்சாரி பாஷா, ஆடுதுறை முஹையத்தீன் அப்துல் காதர், லால்பேட்டை முஹம்மது அப்பாஸ், கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மற்றும் அமீரகத்தில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சகோதர சமுதாய பெருமக்களும் திரளாக பங்கேற்றனர்.

A documentary on Kaithe Millath released in Abu Dhabi

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதே மில்லத் பேரவையும், அபுதாபி அய்மான் சங்கமும் இணைந்து சிறப்பாக செய்திருந்தது.

English summary
A Documentary film on Kaithe Millath has been released in Abu Dhabi on december 4th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X