For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தை பொங்கல்: உற்சாகமாக கொண்டாடிய ஆஸ்திரேலிய தமிழர்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி முருகன் கோவிலில் தைப்பொங்கல் விழாவை தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

தை பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் முருகன் ஆலயத்தில் ஒன்று கூடி வாசலில் பொங்கலிட்டு, சூரியனுக்கு படையலிட்டனர்

ஆஸ்திரேலிய தமிழர்கள்

ஆஸ்திரேலிய தமிழர்கள்

சிட்னி மாநகரில் உள்ள மேஸ் ஹில் எனும் இடத்தில் உள்ள முருகன் செவ்வாய்க்கிழமை காலை 5:30 மணிக்கு மூலவர் முருகனுக்கான அபிசேகத்தினைத் தொடர்ந்து கோபுர வாசலில் 5:45 மணிக்கு பொங்கல் பானை வைக்கப்பட்டது.

சூரிய பூஜை

சூரிய பூஜை

இதனைத் தொடர்ந்து 7:00 மணி காலைப் பூஜையினைத் தொடர்ந்து 7:15 மணிக்கு சூரிய பூஜை இடம்பெற்றது.

தமிழர்கள் கூட்டு வழிபாடு

தமிழர்கள் கூட்டு வழிபாடு

தொடர்ந்து, 11:00 மணிக்கு கூட்டு வழிபாட்டினைத் தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு உச்சிக்காலப் பூஜை இடம்பெற்றது.

கோவிலில் பக்தர்கள்

கோவிலில் பக்தர்கள்

தைப் பொங்கலை ஒட்டி காலையில் இருந்து இரவு வரை சிட்னியில் வாழ்ந்து வரும் இலங்கை, இந்திய, சிங்கப்பூர், பிஜி மற்றும் மலேசிய நாட்டு வாழ் இந்துக்கள் ஆயிரக்கணக்கில் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

பக்தர்களுக்கு அன்னாதானம்

பக்தர்களுக்கு அன்னாதானம்

இதனைத் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிட்னி மாநகரில் இருந்து மேஸ் ஹில் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆண்டு தோறும் இங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

English summary
The festival of Pongal is celebrated in Australia Tamilans over two days. The first day Thai pongal was devoted to the boiling of milk in a pot to which rice, jaggery and the syrup extracted from crushed sugar cane is added. This sweet rice pudding is offered first to the Sun God, and is then eaten at the climax of a family festive meal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X