• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரியங்கா சோப்ரா நிக் ஜோனாசை விட்டு பிரிகிறாரா? நெட்டிசன்களின் சந்தேகம் - என்ன நடந்தது?

By BBC News தமிழ்
|

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தமது சமூக ஊடக கணக்கில் தமது பெயருடன் சேர்க்கப்பட்டிருந்த கணவர் நிக் ஜோனாசின் பெயரை நீக்கியிருப்பது, அவர் விவாகரத்துக்கு தயாராகி வருவதாக ஓர் சந்தேகத்தை சமூக ஊடகங்களில் எழுப்பியிருக்கிறது.

பிரியங்காவின் இந்த செயல், சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் பட்டியலில் அவரது பெயரை சில மணி நேரம் இடம்பெற வைத்தது.

Is Priyanka chopra nick jonas wedding coming to end

இன்று காலையில் தமது இன்ஸ்டாகிராம் கணக்கில் இடம்பெற்ற தமது அழைப்புப் பெயரில் இருந்த கணவர் நிக் ஜோனாசை திடீரென நீக்கி விட்டு 'பிரியங்கா சோப்ரா' என்று மட்டும் அவர் வைத்துக் கொண்டார்.

இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் "என்ன உங்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா?" என்று கேள்வி எழுப்பினர். சிலர் அதை ஒரு சந்தேகமாகவே எழுப்பி இடுகைகளை பதிவு செய்திருந்தனர்.

https://twitter.com/Ashutosh_jha4/status/1462824098476683268

https://twitter.com/varadr_tistic/status/1462835958001254402

https://twitter.com/GautamGada/status/1462826529516244994

இதே வேளை, கணவர் நிக் ஜோனாஸ் இரவு உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டார்

https://twitter.com/nickjonas/status/1462861404940083202

அதற்கு பதில் பதிவிட்ட பிரியங்கா சோப்ரா ("Damn! I just died in your arms...") உன்னிடத்தில் என்னை தொலைத்து விட்டேன் என காதல் ரசம் சொட்டும் எமோஜி போட்டு கமென்ட் செய்துள்ளார்.

ஆனாலும், திருப்தியடையாத பல பிரியங்காவின் ரசிகர்கள் மற்றும் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடருவோர், கணவர் பெயர் நீக்கத்தை பல விதங்களில் பொருள்படுத்தி கேள்விகளை எழுப்பினர்.

மறுபுறம் இந்த விவகாரம், பாலிவுட் செய்திகளை அதிகளவில் ஒளிபரப்பும் வட மாநில தனியார் தொலைக்காட்சிகளிலும் விவாதப்பொருளாயின.

ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிருபர் பிரியங்காவின் தாய் மதுவிடம் இது பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் "அவை வீண் தகவல்கள், அவற்றை எல்லாம் நம்பாதீர்கள்," என்று கூறினார்.

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை…

2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, 2002இல் தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல இந்திப் படங்கள் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். பாலிவுட் திரையுலகில் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ள அவர், ஹாலிவுட் பட உலகில் நுழையும் முன்பாக, குவான்டிகோ என்ற அமெரிக்க டி.வி தொடரில் நடித்து உலக அளவில் பிரபலமானார்.

பே வாட்ச், எ கிட் லைக் ஜேக், போன்ற படங்கள் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வருகிறார் .

விவாகரத்து வதந்தி முதல் முறை அல்ல...

2018ஆம் ஆண்டு, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனாசை காதல் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. திருமணம் முடிந்த மூன்று மாதங்களிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்றும் வதந்திகள் பரவின. அதற்கு தனது செய்தித் தொடர்பாளர் மூலம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கமளித்தார் பிரியங்கா.

இந்த நிலையில், தற்போது மீண்டும் நிக் ஜோனாசை அவர் விவாகரத்து செய்ய ஆயத்தமாகி வருவதாக வதந்தி பரவியிருக்கிறது.

உலகளவில் பிரபலமான கீனு ரீவ்ஸின் மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, அந்த படத்தின் வெளியீடு தொடர்பான பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில், கணவர் பெயரை நீக்கிய

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Priyanka chopra nick jonas divorce. Bollywood celebrity couples latest news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X