For Daily Alerts
Just In
என்னில் அவர்...
-அனாமிகா பிரித்திமா
என் செல்களை எல்லாம் மாற்றினால்...
அவரை மறந்து விடுவேனா?
என் ரத்தத்தை எல்லாம் மாற்றினால்...
அவர் மறைந்து விடுவாரா?
என் இதயத்தை மாற்றினால்...
அவரைப் பற்றிய நினைவுகளும் மாறிவிடுமோ?
என் மூளையை மாற்றினால்...
அவர் முற்றிலும் தொலைந்து போவாரோ ?
மன்னிக்கவும்...
இவற்றில் எது...
எது நடந்தாலும்...
மாறாதது ஒன்று...
ஒன்று மட்டுமே...
என்னில் அவர் ...
என்றும்...
என்றென்றும்...
-அனாமிகா பிரித்திமா anamikapritima@yahoo.com)