ஒரு மாலை நேரத்து காதல்...!
அது ஒரு அழகான தருணம்
ஆவி பறக்கும் தேநீர்க் கோப்பையுடன்
தேங்கி நின்ற உன் புன் சிரிப்பு
அப்போது நேரம் இருந்தது
காதலிக்க
இப்போதும் நேரம் வந்திருக்கிறது
மறக்க!
நாடகம் விடும் நேரம்
திரைச் சீலைகள் கீழே இறங்க வேண்டிய நிமிடம்
விட்டு விலகிய பொழுதுகள்
தூரமாக போய் விட்ட மேகங்கள்
சுட்டெரிக்கும் நினைவுகளுடன்
ஒரு குட்பை சொன்னோம்!

நினைவிருக்கிறதா
உன் முதல் ஹலோ...
என் தலைக்குப் பின் ஹாலோ போல இன்னும் நிலைத்திருக்கிறது
மறந்து விடலாம்..
வருந்துவதற்கு ஏதுமில்லை
அள்ளிப் பருக கிடைத்த ஆயிரம் நினைவுகளைத் தவிர!
உடைந்த கண்ணாடிகளில்
கால் படாமல் நடக்க முயற்சிக்கும்போதெல்லாம்
பட்டுத் தெறிக்கிறது உன் முகமே
வலிகள் இருக்கும்தான்
வேறு வழிகளும் தென்படவில்லைதான்
ஆனால் நடக்க வேண்டுமே!
நான் காதலித்தேன்
காதலிக்கப்பட்டேனா.. தெரியவில்லை
ஆனால் மறுதலிக்கப்பட்டேன்
நீ என் இதயம் துளைத்தாய்
ஆனால் நான் உன்னைத் தொலைத்தேன்
என்னை நானே வெறுத்தேன்
ஆனால் ஒன்றைக் கண்டு கொண்டேன்!
பழைய உலகம் போலவே
புதிய உலகமும் இருக்குமா
தெரியாது..
ஆனால் உலகம் இருக்கும்.. நானும் உலவ வேண்டுமே
இதோ
என் முன்பாகவே நீ போகிறாய்
உன்னைத் தொடர முடியாமல்
கால்கள் கம்மென்று நின்று கொண்டிருக்கின்றன!
நினைவுகள் துணை இருக்கும்
நிழலாகிப் போன நிஜமான நீ .. என்னை விட்டுப் பிரிந்தாலும்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications