முழங்கால் தாண்டிடும் சேற்றில்தான் நடவு..!!
மழையை எளிய கிராம வாசிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த கவிதைத்தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மழையை எளிய கிராம வாசிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த கவிதைத்தொகுப்பை வாசகர் ஒருவர் எழுதியுள்ளார்.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் க.தங்கமணி. ஒன் இந்தியா வாசகரான இவர் மழை கிராம மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கவிதை வடிவில் எழுதியுள்ளார். இதோ அந்தங்க கவிதை உங்களுக்காக..

முழங்கால் தாண்டிடும்
சேற்றில்தான் நடவு
தொடையை கிழிக்கும்
பயிர்க்கிடையில்தான்
களையெடுப்பு
நாள்முழுதும்
நனைந்தபடியேதான்
நாற்றடிப்பு
நெஞ்சைத்தொடும் நீருள்ள
வாய்க்காலைத் தாண்டிதான்
வயல்வெளி வேலை
பாலமற்ற ஆற்றிடை நீரை
நீந்திதான் கடக்கிறோம்
வீதியில் மட்டுமல்ல
எங்களின் வீட்டிற்குள்ளும்
மழை பெய்யும்
வெள்ளம் வரும்
சேதமடையும்
ஆனால்
செய்தியாகாது
அதீத பயம்
அற்றவர்கள் நாங்கள்
நிற்போம்
நீந்துவோம்
ஓடுவோம்
உழைப்போம்
அனலும் புனலும்
எங்களுக்கு
அன்றாட வாழ்க்கை












Click it and Unblock the Notifications