For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முண்டாசுக் கவிஞன் பாரதி .. பார் போற்றும் மகாகவி!

Google Oneindia Tamil News

எட்டயபுர மண்ணிலே பிறந்த தமிழ்மகன்
எழுச்சி மிக்க கவிதைகளாலே சுதந்திர வேட்கையை ஊட்டிய தியாகி
எங்கெங்கு காணிணும் சக்தியடா என்று தமிழ்த்தாயைப் போற்றியவன்
அஞ்சாநெஞ்சமுடையவன்
கண்ணன் பாட்டு குயில் பாட்டு எழுதியவன்
காவிரி தென்பெண்ணை பாலாறு தினம் கண்டதோர் வைகை என
ஆறுகளின் புகழ் பாடியவன்
சாதிகள் இல்லையடி பாப்பா என அன்றே சாதிகளை அடியோடு அழித்தவர்
சுதந்திரமே உன் மூச்சு

poem on mahakavi bharathiyar

சாதிக்கத் தூண்டுமே உன் பேச்சு
வீரத்தையும் தீரத்தையும்
தமிழ்மண்ணில் விதைத்த தலைவன்
தாய்நாடே எனது குடும்பம் என வாழ்ந்தவன்
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என உழைப்பின் மகத்துவத்தையும்
கூடி வாழுதலின் நன்மையையும்
ஆங்கிலயரைக் கண்டு அஞ்சாதவன்.
பேனா முனையின் சக்தியை உலகறியச் செய்தவன்
பத்திரிகையாளனாய் கவிஞனாய் சுதந்திர போராட்ட தியாகியாய் பன்முகம் கொண்டவன்
பாடல்களால் மக்கள் மனதைக் கொள்ளை கொண்டவன்
பாரதம் போற்றும் பாடல்களைப் பாடியவன்
முண்டாசுக்கவிஞன் பாரதி
பார் போற்றும் மகாகவி
நீ இல்லாவிட்டாலும் இவ்வுலகில் எக்காலத்துக்கும் உம் கவிதைகள் வாழும்.

- ஜி. உமா

English summary
A reader's poem on Mahakavi Bharathiyar on his 98th death anniversary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X