For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா ...அம்மா...!

Google Oneindia Tamil News

எந்த புள்ளியிலிருந்து எடுத்தாய்
இந்த அவதாரத்தை

பந்தம் தேடிய திருமணத்தில்
பாதம் பதித்து இருப்பாய்

when this motherhood begins

வெட்கங்கள் குடியேறி
கன்னங்கள் சிவந்தே சுற்றி இருப்பாய்

தாய் தந்தையின் திசை நோக்கி
தவித்து இருப்பாய்

அண்டை வீட்டு
பையனையும் பெண்ணையும்
பார்க்கையில் சகோதரப் பாசத்தில்
கரை புரண்டு ஓடி இருப்பாய்

புது உறவுகளின் புது மரியாதையுடன்
புது குணம் பற்றிக் கொள்ள
பிறந்த வீடு புகழ் பாடி இருப்பாய்

அறிவுரைகளின் சுனாமியால்
தாக்கப் பட்டு பயந்தும் நடுங்கி இருப்பாய்

பின்பு எங்கிருந்து புறப்பட்டது
அன்பு சுனாமி

இரத்தம் உறைந்து
உன் இரத்தம் உதித்த செய்தி
கேட்டத் தினத்திலிருந்தா

வாந்தி மயக்கத்தில்
உடல் தளர்ந்து சரிந்து கிடக்க
உறவுகளையும் உலுக்கிய
தினத்திலிருந்தா

இடை அகன்று
மூச்சும் பின் வாங்க
சுமைக்குள் சுகம் உண்டான
தினத்திலிருந்தா

உடல் சூட்டை குறைப்பதிலும்
சுரம் வராமல் தடுப்பதிலும்
நித்தமும் பிரசவ யுத்தம்
போட்ட தினத்தில் இருந்ததா

முகச்சாடையும் நிறமும்
மற்றவர்கள் பார்க்க
பனிக்குடத்து சிறையிலிருந்து
மீட்டெடுத்த போர் வீரனாய்
வெற்றிக் களிப்பில் மிளிர்ந்த
தினத்திலிருந்தா

எதிர்ப்பார்ப்பு வலை கிழித்து
எரிபொருளாய் தீய்ந்து போனாய்

பொறுமை மேகத்தைச் சூடி
அன்பை மழைத் தேடி தவம் கிடந்தாய்

உயிரை உருக்கி ஊன் வளர்த்தும்
பெரும் பேச்சு வாங்கினாய்

பிறந்தோம் என்று இல்லாமல்
தங்கமான நீ உன்னையே
உருக்கி உருக்கி சொலித்து
கொண்டிருந்தாய்

என்னைக் கேட்டா பெற்றாய்
நான் கேட்ட என்ற கேள்விகள்
எதிர்மறையாய் என் முன்னே
விடைத் தெரியாத கேள்வியை கேட்டு
அடம் பிடிக்கிறது

நாலு கைத்தட்டலிலும்
பரிசுகளிலும்
பெருமை பட்டு கொள்ளும்
இந்த முகத்தைப் பார்த்தவர்களுக்கு
தெரியாது
காலம் கடந்து
முகமூடி கழற்றி
அம்மா அம்மா என்ற மந்திரத்தை
உச்சரிக்கையில்
என் அழுகையையும் சிரிப்பையும்
உள்வாங்கும் அட்சயப் பாத்திரம்

இன்றும் தேடுகிறேன்
எந்த புள்ளியிலிருந்து எடுத்தாய்
அம்மா என்ற அவதாரத்தை

-சிவமணி
வத்தலக்குண்டு

English summary
Our reader Sivamani's poem on Mother's day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X