• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிதைந்த கனவுகள்

By Staff
|

அன்று ஞாயிற்றுக் கிழமை. சரியாக ஏழு மணி. சிராங்கூன் சாலையில் விரல் விட்டு விரல் எடுக்க முடியாத அளவுக்கு கூட்டம்.புதிதாக பார்ப்பவர்களை அடேங்கப்பா என்று கூற வைப்பதைப் போல இந்தியா, இலங்கை,பங்களாதேஸ், பாகிஸ்தான் ஆகியநாடுகளிலிருந்து பொருளீட்டுவதற்காக இறக்குமதியாகிய முகங்கள்.

வாரத்திற்கு ஒருமுறை நண்பர்கள், உறவினர்கள சந்தித்து குசலம் விசாரிக்கும் பொழுது கஸ்டங்களை மறந்த முகங்களின் பூரிப்பைவார்த்தைக்குள் அடக்க முடியவில்லை. ஆங்காங்கே ட்ராபிக் போலிஸ் நின்றுக்கொண்டு வழிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். தோசை,இட்லிக்காக சாப்பாட்டு கடைகள் நிரம்பி வழிந்தன. சிங்கப்பூரியர்கள் சிலர் ஜனத்திரளைக் கண்டு முகத்தை சுளித்தும்,திட்டிக்கொண்டும் சாமான்கள வாங்கிச் சென்றனர். பிரிவின் வேதனையை உணர்ந்தவர்களுக்கும், அன்பின் அர்த்தத்தைஅறிந்தவர்களுக்கும் கூடியிருந்தவர்களின் கசமுசா சத்தங்கள் கூட இசையாகத்தான் கேட்கும். பொது தொபைேசிகள் ஓய்வில்லாமல்இயங்கிக் கொண்டிருந்தன.

அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவருமே பிரிவு துன்பத்தை ஒரு வகையில் அனுபவிப்பவர்கள். ஒருபுறம் தான் படித்த அறிவைவெளிநாடுகளில் பயன்படுத்திக் கொண்டவர்கள் பார்க்க லட்சணமாகவும், பகட்டாக, மேலை நாட்டுபாணியில் தங்களைமாற்றிக்கொண்டு பணத்தின் செழுமை உடலில் மின்ன கம்பீரமாக நின்றனர். மற்றொரு புறம் ஓரளவு படித்தும் உழைப்பைமட்டுமே தாரக மந்திரமாக உச்சரித்தப்படி ஒவ்வொரு நாளும் வியர்வையை லிட்டர் கணக்கில் சிந்திக்கொண்டிருக்கும் வர்க்கம்.இந்த இருவருக்கும் இடையில் நின்ற பரிதாபத்திற்குரிய ஒரு வர்க்கம்.

ஆமாம். வாலிப இதயத்தில் கனவுகளை சுமக்க முடியாத அளவுக்கு சுமந்க்துகொண்டு உலவ வேண்டிய வயதில், பொய் வேசம்போட்டு ஏமாற்றும் ஏஜெண்டுகளை நம்பி எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு எண்ணெய் படியாத வறண்ட முடியுடன், துவைத்துபோட்டு வேறு உடுப்பு வாங்கி உடுத்த முடியாத நிலையில் அழுக்கு சட்டையும், முழுகாற்சட்டையுமாக சாப்பாட்டுக்குக் கூட வழித்தெரியாமல் தண்ணிரால் வயிற்றை நிரப்பிக்கொண்டு யாராவது வேலைக்கு அழைத்து செல்லமாட்டார்களா?. குறிப்பிட்ட உயரத்தில்பறக்க தகுதியிருந்தும், மேலும் உயர பறக்கும் ஆசையினால் பிறந்தகத்தை விட்டு வந்தவர்கள்.

கலைந்த தலையுடன் ஆடை குலைந்து பைத்தியக்காரனைப் போல எலும்பும் தோலுமாக அவ்வளவு கூட்டங்களுக்கிடையில் நின்றபடிதெரிந்தவர்களிடம் எல்லாம் அண்ணா வேலையிருக்குமா? மாமா வேலையிருக்குமா? பிச்சைக்காரனை போலகேட்டுக்கொண்டிருந்தான் அகத்தியன். அகத்தியன் மாயையைக் கண்டு மயங்கி மோசம் போனவர்களின் பட்டியலில் ஒருவன்.

ஏண்டா அகத்தி பரமீட்ல வந்துட்டு சட்டவிரோதமா தங்கியிருக்கிற என்கிட்ட வேலை கேட்டு கிண்டல் பண்றீயா?வெடுக்கென்று கேட்டான் முத்து.

எங்கிட்ட பர்மீட்டே இல்லை அண்ணே, அழாத குறையாக பதிலளித்தான். தன் கஸ்டத்தை யாராவது புரிந்துக்கொண்டு ஆறுதல்கூறமாட்டார்களா? மனம் ஏங்கி தவித்தது.

அப்புறம் எப்படிடா வேலைக்கு கூட்டிட்டு போற. ஒண்ணு செய். ஒரு இருநூறு வெள்ளியை நம்ப ராசுக்கிட்ட கொடு, அவன் இரண்டுநாள்ல பர்மீட் கார்ட் வாங்கி தருவான். அதை வைத்து வேலைக்கு அழைச்சிட்டு போகலாமான்னு பார்க்கிறேன். இன்னும்கொஞ்சம் நேரம் நின்றால் செலவுக்கு ஏதாவது காசு கேட்பானோ பயந்தபடி நழுவிய முத்துவை நிறுத்தினான்.

ஏண்ணா.....இங்கேயும் போன்கார்ட் மாதிரி பர்மீட் கார்ட்டும் விக்கிறாங்களா? அவனையும் அறியாமல் கேட்டே விட்டான்.

அடப்பாவி...வாழ வழிக்காட்ட நினைச்சா எங்களையே கம்பி எண்ண வச்சிடுவே போலிருக்கு. வெளியூறு எல்லாம்போயி என்னத்த படிச்சி கிழிச்சியோ. வாத்தியார் பிள்ள மக்குங்கறத நிருபீச்சிட்டே. வரறேன்டாப்பா....உங்கூடநிற்கிற ஒவ்வொரு நிமிசமும் ஆபத்துதான் நண்பர்களுடன் ஏதோ சொல்லி சிரித்தபடி கூட்டத்தோடு கலந்துமறந்தான்.

அகத்தியன் சிங்கப்பூர் வந்து முழுமையாக இரண்டு வாரங்களே ஆகியிருந்ததால் நிலவரம் சரியாக புரியவில்ல.சாங்கி ஏர்போர்ட்ல ஏஜெண்ட் என்று சொல்லி வந்தவன் நூறு வெள்ளியை கொடுத்து தேக்காவில் வீடுபார்த்துக்கொள் . நாளை தேக்காவில் உள்ள பெருமாள் கோயில்கிட்ட சந்திப்போம் நல்லவன் போல்தட்டிக்கொடுத்துட்டு பாஸ்போர்ட்டோடு போனவன் போனவன்தான். திரும்பவேயில்ல. இளமை என்ற தேகத்தில்ஏற்றி வைத்த பொறுப்புகள் அவனை அழக்கூட தெம்பில்லாதவனாக ஆக்கியது. திக்கற்று நின்றவனின் புஜத்தில்கை விழவும் திடுக்கிட்டு திரும்பினான்.

டேய் ரவி....பேச நா எழாமல் அவன் தோளில் சாய்ந்து அழுதான்.

அகத்தியனை நிமிர்த்திய ரவி, நீ முத்துக்கிட்ட பேசினதெல்லாம் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். நீ ஏண்டாசிங்கப்பூர் வந்தே..நீ ஊருல வேலை பார்க்கிறதா சொன்னாங்களே?

ஆமாண்டா. ஆசை யாரை விட்டது சொல்லு. அப்பா இறந்த பிறகு வீட்டு பொறுப்புகள் எல்லாம் என் தலையிலவிழுந்துட்டது. குடும்பத்துல என்ன நடக்குதுன்னு தெரியாம புத்தகமும் கையுமாக இருந்த எனக்கு வாழ்க்கையேமாறிப்போன மாதிரி இருந்தது. நான் வேலைக்கு போகனுங்கிற கட்டாய சூழ்நிலை உருவான போது மேற்படிப்பைநிறுத்துற நிர்பந்தம் உருவானது. ஊர்ல கிடக்கிற இரண்டாயிரம் சம்பளத்தை வைத்து எப்படி பொறியியல்கல்லூரியில இரண்டாம் ஆண்டு படிக்கிற என் தம்பியை தொடர்ந்து படிக்க வைக்க முடியும். கல்யாண நாளைஎதிர்பார்த்துக்கிட்டு இருக்கிற தங்கையை எப்படி கரை சேர்க்கிறது. அதனாலதான் இங்கே வந்தேன். அப்பாதங்கச்சி கல்யாணத்துக்காக சேர்த்து வைச்சிருந்த மொத்த பணத்தையும் கொட்டி கொடுத்துட்டு வந்திருக்கேன்.

அகத்தி நீ வந்ததன் நோக்கம் நியாமானதுதான். நீ வர்றதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்இல்லை என்ற ரவியும் அகத்தியும் சிறுவயதிலிருந்து பள்ளி தோழர்கள். ரவி ஆறாம் வகுப்புக்கு மேல் போகவில்ல.பதினெட்டிலிருந்தே சிங்கப்பூர் வந்து சம்பாதிக்கிறான். படிப்பறிவு இல்லாவிட்டாலும் பட்டறிவு கைகொடுத்துஉதவியது.

இருவரும் கூட்டத்திலிருந்து விலகி சாப்பாட்டு கடைக்கு சென்றனர்.அகத்தியை அமர வைத்துவிட்டு ரவி இரண்டுதோசைக்கும், காபிக்கும் ஆர்டர் செய்விட்டு நண்பனின் அருகில் அமர்ந்தான்.

அகத்தி.... அடுத்து என்ன செய்யலாம்னு இருக்கே?

அது தெரிஞ்சா நாலு பேர் நக்கலா பேசுற அளவுக்கு பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருப்பேனா..என்னைநாலுபேர் அடிச்சி போட்டுட்டு பணத்தை பிடுங்கிட்டு போயிருந்தா கூட நான் இப்படி கவலைபட்டிருக்கமாட்டேன். என்கிட்ட நல்லவன் மாதிரி பேசி நடிச்சி....ச்சே...மனிதப்பிறவியில இப்படியும் கேடுக்கெட்டஜென்மங்களா? என் பணம் போனதைப்பற்றி வருத்தம்தான். ஆனாலும் என்னால சம்மாதிக்க முடியும்ங்கிறநம்பிக்க இருக்கு.

என்னோட கவலையெல்லாம் அறிமுகம் இல்லாத நாட்டுல எல்லோர் முன்னிலையிலும் தலைகுனிந்து கூனி குறுகிநின்னதைப் பற்றிதான்.

நீ யார்கிட்ட பணம் கட்டி வந்தே? தோசையை விழுங்கியபடி கேட்டான் ரவி.

நம்ப ஊர் புது பணக்காரன் வேலுச்சாமி மகன் துரைக்கிட்டதான். இங்கே வந்த பிறகுதான் தெரியுது அவன்என்னை மாதிரி உள்ளவங்ககிட்ட ஏமாற்றி பணத்தை பிடுங்கி போட்டுதான் புது பணக்காரனா திரிஞ்சிட்டுஇருக்காங்கிற விசயம்.

ரவி...பரமீட் கார்ட் இங்கே எப்படிடா விற்கும்? என்றான் அப்பாவியாக.

பணம் மொடை வர்றப்ப பர்மீட்ல இருக்கிற பசங்க பர்மீட் கார்ட்ட சட்ட விரோதமா இருக்கிறவங்ககிட்ட வித்துட்டுகாணாது போய்ட்டதா கம்பெனில சொல்லி வேற கார்ட் வாங்கிப்பாங்க.

ரவி....எனக்கு ஒண்ணு வாங்கி தந்து வேலைக்கு கூட்டிட்டு போடா. தொலைச்ச பணத்தை தேடிக்கிட்டு ஊருக்குபோய்றேன்.

அகத்தி...உனக்கு அட்டை வாங்கி தர்றதிதோ வேலைக்கு கூட்டிட்டு போறதோ எனக்கு பெரிய விசயமேகிடையாது.

தயங்கியவனை அப்புறம் என்னடா?.....என்றான் அகத்தி.

இங்கே உள்ள சட்ட திட்டங்கள் ரொம்ப கடுமயானது. சட்ட விரோதமா தங்கியிருக்கவுங்களை காவலர்கள்பிடிச்சிட்டா ரோத்தான் அடியும், சிறை தண்டனையும் கிடைக்கும். அதான் யோசிக்கிறேன்.

Buildingமனசுல விழுந்த அடியையே தாங்கிட்டேன். உடம்புல வாங்க போற அடிக்காக இப்ப ஏன் கவலைப்படனும். என்குடும்ப சந்தோசத்துக்காக எதையும் இழக்க தயாராயிருக்கேன்.

சரி துரையை என்ன பண்ண போறே? என்றபடி கடையிலிருந்து வெளியே வந்தான் ரவி.

நான் ஊருக்கு போறவரை கடவுள் ஏதும் செய்யாமல் விட்டு வச்சிருந்தா, அவனோட சொத்துக்கு நான்தான் எமன்.படிச்சவன்கிட்டயே அவன் பாமர புத்தியை காட்டினதுக்கு சரியான பாடம் கத்துக்கொடுக்காம விடமாட்டேன்என்றவனை தன்னோடு சேர்த்து தன்னோட அழைத்துச் சென்றான் ரவி.

இரண்டு நாள்கள் கழித்து ரவி அகத்தியனை வேலைக்கு நண்பர்களோடு அனுப்பி வைத்தான். தன் ஒட்டு மொத்தகனவுகளையும் சிதறடித்து, திருடனைப்போல தலைமறைவாகி பயந்து பயந்து சிமெண்ட் குழைத்த போது உயிரேநின்று விடும் போலிருந்தது. தன் தந்தை பிள்ளைகளுக்காக சேர்த்து வைத்த ஓரே சொத்து கல்விச்செல்வம்தான்.அதைக்கூட முறையாக பயன்படுத்த முடியாத தன் தலைவிதியை நினத்தபோது இருதயமே எகிறியது. தான்இளநிலை இயற்பியலில் கோல்ட் மெடல் வாங்கிய போது, என் பிள்ளை வருங்காலத்துல பெரிய ஆளாவருவான்னு அம்மாகிட்ட சொல்லி அடைந்த ஆனந்தத்தை நினைத்தபோது வழிந்த கண்ணீர் கலவையோடுகரைந்தது.

-சுஜாதா சோமசுந்தரம், சிங்கப்பூர். (s_sujathaa@yahoo.com.sg)

இவரது முந்தைய படைப்புகள்:

1. துப்பாக்கி முனையில்......

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more