• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெறுபேறுகள்

By Staff
|
Childஇரண்டு வயதுக் குழந்தையாக இருந்த அண்ணனின் மகளை இப்போது நினைத்துப் பார்க்கிறான் கரன்.

அண்ணனும், அண்ணியும் தங்கள் முதற் குழந்தை நர்த்தனிக்கு திருப்பதி சென்று மொட்டை போட்டுக் கொண்டு வந்திருந்தனர். இரண்டு மாதங்கள் கடந்த மயிர்மட்டும் குழந்தைக்கு வளர்ந்திருந்தது. உருண்டைத் தலை, முயற்காது, வட்டக் கண்கள், ரோஜா நிறம், பூனையின் மிருதுத் தன்மை.

கரன் எப்போதும் குழந்தையை தூக்கி வைத்திருந்து- தனது மனதில் வருகின்ற ஆசைப் பெயர்களை எல்லாம் குழந்தக்ைகு சூட்டி- அழைத்து, கிள்ளி,அணைத்து, கொஞ்சி விளையாடி மகிழ்வான்.

நர்த்தனியின் சிறிய சிறிய குறும்புகளையும், கெட்டித்தனங்களையும் பார்த்து ரசிப்பான். அதுமட்டுமல்லாமல் தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் எல்லாம்அவற்றைக் கூறி பெருமிதப்படுவான். நர்த்தனி தன்னிடம் மிகவும் பற்றுதலாக இருப்பதாக பலரும் சொல்வார்கள்.

பின்னைய நாட்களில், கரன் வேலைக்குப் போகத் தொடங்கியபோது, அவன் வீட்டை விட்டு புறப்படப் போகிறான் என்பதுதெரிந்ததும் தன் பிஞ்சுக்கரங்களை அசைத்து "டாட்டா சொல்லுவதும் மீண்டும் கரன் வேலை முடிந்து வருகின்ற போது கதவு திறக்கும் ஓசையைக் கொண்டே "பித்தப்பா என்றுமழலை மொழியில் கூப்பிட்டவாறு ஓடிவருவதும்,

தன்னைத் தூக்கச் சொல்லி செல்லமாக அழுவதும்-கரன் வேலைக்களைப்பு மாற குழந்தையை தூக்கி வைத்திருந்து, பின் வேறு போக்குக் காட்டி அவளைஇறக்கி விட்டு மீதிக் காரியங்களை கவனிக்க ஓடுவதும்-இப்போது நினைக்கவும் இனிமை ஓடிவந்து மனதில் நிழலாடும்.

குழந்தை மூன்று வயதாகி, "பிறீ ஸ்கூலில் சேர்க்கப்பட்டதிலிருந்து, பின்னர் அது "நேசரி செல்லும் வரையில் மிக அழகாக தமிழ் பேசினாள். தமிழ்எழுத்துக்களை எழுதவும் பழகியிருந்தாள். பெற்றோர் கூறும் மொழியைப் புரிந்து கொண்டு அனைத்தையும் செய்தாள்.

ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டதிலிருந்து தான் அவள் பேச்சுக்கு நடுவே ஆங்கிலச் சொற்கள் புகுந்து கொள்ளத் தொடங்கின. அது மட்டுமல்ல,இப்போது பள்ளியிலிருந்து வீடு வந்தததும் இந்த தெருவில் விளையாடும் பக்கத்து வீட்டு பாகிஸ்தான் பையன், அடுத்த வீட்டு குஜராத்திப் பெண், முன்னால்வீட்டு ஐரிஷ் பையன், இன்னும் மொரீஷியஸ் பெண் எல்லாருடனும் சேர்ந்து விளையாடப் போய் விடுவாள்.

முன்பு போல பொழுதை ஆனந்தமாக போக்கலாம் என்ற ஆவலோடு வீட்டுக்கு வருகின்ற கரனுக்கு ஏமாற்றமாக இருக்கும். "ஹாய் சித்தப்பாஎன்று ஒரு வாக்கியத்திலேயே அவனை சமாளித்து விட்டு, தன் தோழர், தோழிகளுடன் விளையாடப் போகும் நர்த்தனியை கண் கொட்டாதுபார்த்துக்கொண்டு நிற்பான் கரன்.

உண்மையில் குழந்தை பாவம் தான். அவளோடு கூடி விளையாடுவதற்கு வேறு யார் இங்கே இருக்கிறார்கள். எங்கள் ஊரைப்போல அக்கம் பக்கத்துவீடுகளில் இருந்து உறவுக்கார குழந்தைகளையா இங்கு எதிர்பார்க்க முடியும்?

பொழுது கவிந்த பின்பும் கூட அவளை வீட்டுக்கு அழைத்துக்கொள்வது பெரும் பாடாக இருக்கும். அவளை கையில் பிடித்து இழுத்து வருவதோ அல்லதுதூக்கி வருவதோ பெரிய காரியமல்ல.

ஆனால் தானும் ஒரு குழந்தையாக மாறி விளையாட்டில் இருக்கும் இன்பத்தைப் பற்றி கற்பனை செய்யும்போது கரனுக்கு அது இயலாததாக இருக்கும்.மற்றைய குழந்தைகளின் பெற்றோரும் வந்து அழைக்கின்ற போது தான் நர்த்தனியும் தன் தோழர், தோழியரை விட்டு பிரிந்து வருவாள்.

நர்த்தனி இப்போது தாய், தந்தையர் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்கிறாள். அவளை தனித்தமிழில் கதைக்கச் சொல்லிவற்புறுத்திய போதும் அவளால் அது இயலாது இருக்கிறது.

அவள் சிரமப்பட்டு தனித்தமிழில் கதைப்பதையும் பின்னர் தன்னை அறியாமலேயே ஆங்கிலத்துக்கு அவள் மாறிவிடுவதையும் இதை அவளே உணர்ந்து, தான்தப்புச் செய்துவிட்டதாக நாக்கைக் கடித்துக் கொண்டு பின்னர் தன் தமிழுக்கு வருவதையும் பார்க்க கவலையாக இருக்கிறது.

இப்போது நர்த்தனியும் அவளது தோழிகளும் பருவமடைந்த பெண்களாகி விட்டனர். தோழர்களும் வளர்ந்து விட்டார்கள். நடை, உடை,தோற்றங்களில்சிறுவர்கள் என்று சொல்ல முடியாத மினுமினுப்புடன் கூடிய இளையவர்களின் தோற்றத்துக்கு முகிழ்விடுகிற கவர்ச்சிகள் வரத்தொடங்கி இருந்தது.

கரனது அனுபவத்தில்- ஆண்மையும் பெண்மையும் விழித்துக் கொள்கிற இந்த வயதில், தம் வயது எதிர்பாலினரோடு பழகத் தயங்குகிற பருவத்தில்,இவர்களோ எந்தவித மாற்றமும் இன்றி மிகச் சாதாராணமாக சிறுவர் சிறுமியர் பழகுவது போல பழகி வந்தார்கள். இருந்தபோதும் சிலமாற்றங்கைள அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இப்போது விளையாட்டில் ஈடுபடும் நேரங்களைக் குறைத்து, அதற்குப் பதிலாக உரையாடுவதில், பகிடிகள் விடுவதில், கை கால்களால் தாக்கி சண்டைபிடிப்பதில் அதிக நேரங்களை செலவிட்டார்கள்.

அத்துடன் நர்த்தனியின் உடைகளிலும், வீட்டிலே- பேச்சுக்களிலும் வித்தியாசம் தென்பட்டது. அவள் வளர்ந்துவிட்ட படியாலும் இந்த நாட்டு சட்டங்களைதெரிந்து வைத்திருந்ததாலும் அவை பற்றி தனது பெற்றோருடன் விவாதிக்கத் தொடங்கியிருந்தாள்.

இப்போது சுதந்திரம், உரிமை என்ற சொற்றொடர்களையும் கையாளத் தொடங்கினாள். நல்லது கெட்டது பற்றி தெரிந்து கொள்ளும் அறிவு தனக்குஇருப்பதாக அடிக்கடி பெற்றோரிடம் கூறினாள். அவளது ஆடை அலங்காரங்களில் தாய் கூறும் அபிப்ராயங்களை ஏற்க மறுத்தாள்.

நர்த்தனியின் பொழுதுகள் தோழர் தோழியரோடு அரட்டை அடிப்பதில் கரைவதை கரன் அவளது பெற்றோருடன் அலசுவான். எனினும் பஐப்பில் அவள்இன்னும் தனது திறமையை காட்டி வருவதை பெற்றோர் சுட்டிக் காட்டுகையில் கரன் மெளனமாகி விடுவான்.

மற்றைய புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து-தாங்கள் ஏற்கனவே சேகரித்துக் கொண்ட வசதி வாய்ப்புகளையும் துச்சமாக கருதி தங்கள் பிள்ளைகளின் கல்விமுன்னேற்றத்தை கருத்தில் வைத்து இங்கே வருகிற பலரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறான்.

அந்த வகையில் என்னதான் மனதிற்குவப்பற்றபடி அவள் நடந்தாலும் கல்வி நிலையை பலப்படுத்தி வைத்திருக்கிறாள் நர்த்தனி என்ற வாதம்பெற்றோரிடமிருந்து சந்தோசமாகவே வெளிவருவதை கரன் அவதானித்துக் கொண்டான்.

இன்று, வெளிக்கதவை திறந்து வீட்டினுள் வந்து கொண்டிருந்தாள் நர்த்தனி. நேரம் இரவு 8 மணியைத் தாண்டியிருந்தது. இலை துளிர்கால மாலைக்கீற்றுகள்இன்னும் வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது.

ஒரு பருவமடைந்த பெண் சிறுவர்களைப் போல தெருவிலே நின்று விளையாடி, அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறாளே என்று கரன் மனம் துருதுருத்துக்கொண்டிருக்கையில் " ஹாய் சித்தப்பா என்றாள். தனது சித்தப்பாவுக்கு விருப்பமில்லாத ஒரு செயலை செய்கிறேன் என்பதைப் பற்றி அவள் நினைத்துப்பார்க்கவே இல்லை.

ஆனால் சித்தப்பா கரனுக்கோ, அவள் மேல் ஆத்திரம் அனல் கக்கியது. தனது முகம் சிவந்திருப்பது போலவும், ஒரு வெப்பக் கதிர்வீச்சுவலையத்திற்குள் இருப்பது போலவும் அவன் உணர்ந்தான்.

இவ்வளவு நேரமும் இவளுக்கு வெளியே என்ன வேலை? இவள் ஆணா அல்லது பெண்ணா? இவள் இப்படிக் கட்டுப்பாடில்லாமல் திரிவதை எதற்காகஅனுமதிக்க வேண்டும்? பல கேள்விகள் கரனுக்குள் எழுந்தன.

ஆனால், இவளிடம் இந்த விடயங்களை பற்றி எப்படி ஆரம்பிப்பது..? அவள் இடக்கு முடக்காக சில கேள்விகளை கேட்டுவிட்டால்.. என்னிடம் பதில்இருக்குமா? அல்லது.. இவளை இது பற்றி விசாரிக்கப் போய்- அவளது அப்பழுக்கற்ற சிந்தனையில் சபலம் தெளிப்பதாக ஆகிவிடுமா?

என்னைப் போன்றவர்களுக்குப் பழக்கப்பட்ட மன அழுக்கை நானே அவளுக்கு எடுத்துக்காட்டுவதாக ஆகிவிடுமா? நீ இப்படி நடந்து கொள்வதுசரியல்ல என்று கூறப்போவதனால் அவள் இதுவரை பெரிதுப்படுத்தாத அல்லது ஆராய முற்படாத சில விடயங்களை தனிமையில் இருந்து ஆராய்வதற்குநாமே வழிவகுத்தது போல ஆகி விடுமா?

ஐரோப்பாவில்.. அதிலும் இருபத்தோராம் நூற்றாண்டில் காலடி வைத்திருக்கும் இக்காலத்தில் இவளது நடவடிக்கைகளை பிழை என்று சாதிப்பது என்னால்முடிகிற காரியமா? ஆணுக்கு ஒரு நடைமுறை பெண்ணுக்கு ஒரு நடைமுறை என்ற அடிப்படையில் நான் சிந்திப்பது சரியா? ஆண்களும் பெண்களும் நட்பு வைத்திருக்கக்கூடாது என்றும் நானும் கூட நினைக்கிறேனா?

சரி.. இந்தப் பிள்ளையள் ஆண் பெண் என்று வித்தியாசத்தோட பழகுகிறதாகத் தெரியவில்லையே. அதுகள் தோற்றத்தில் தான் இளைஞன் குமரிகளாகஇருக்குதுகளே தவிர இன்னும் குழந்தைகள் போலத்தான் பழகுதுகள்.

ஆணும் ஆணும் எப்படிப் பழகுவாங்களோ அது மாதிரித்தானே ஆணும் பெண்ணும் பழகுதுகள். இதை நான் மட்டும் தான் தப்பாக நினைக்கிறேனோ? இந்தப்பிள்ளைகளின் பெற்றோர் உறவினர்களும் இப்படித்தான் நினைப்பார்களோ? எனக்கேன் இப்படி மூளை போகுது?

என்னதான் மனதுக்கு ஆறுதல் கொடுக்க முயன்றும் கரனுக்கு அது முடியாதிருந்தது. அவளது நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாகவே தீர்மானித்துக்கொண்டான்.

அவளது எதிர்காலம் பாழாகிவிடக்கூடாது என்று நினைத்த கரன் அவளது வெறுப்பை சம்பாதிக்கக்கூட துணிந்து கொண்டான். அதற்கு வாய்ப்பான ஒருநாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

முன்பென்றால், ஆறு ஏழு பேர் கொண்ட நர்த்தனியின் குழாம் இந்த வீதியிலே தான் எங்காவது நிற்பார்கள். எப்போதும் சத்தமும், இரைச்சலும் வேடிக்கைபேச்சுகளுமாக இருப்பார்கள். இப்போதெல்லாம் இவர்களை இங்கே கூட காணமுடிவதில்லை. எங்கே போய்விட்டார்கள்?

கரனுக்கு முன் எத்தனையோ வருட அனுபவங்களை இங்கே பெற்றுவிட்ட அவனது அண்ணன் அண்ணி இப்போதெல்லாம் அவனோடு நர்த்தனி விடயங்களைகலந்துரையாடுவதாகவும் தெரியவில்லை.

கரன் வழிப்போக்கில் ஒரு நாள், அந்தப் பூங்கா வழியாகப் போய்க் கொண்டிருந்தான். நர்த்தனியின் நண்பி- குஜராத்திப் பெண்ணும் நண்பன் ஐரிஷ் இளைஞனும் அங்கேபோடப்பட்டிருந்த இருக்கையில் தம்மை மறந்து "உல்லாசமாக இருப்பதை பார்த்துக் கொண்டு சென்றான்.

இன்னும் சற்று தூரத்தில் விடலைப் பருவத்தினர் சிலர் சிகரட் புகைத்தலில் இன்பம் கண்டார்கள். கரனின் கண்கள் பரபரத்தது. பூங்கா முழுவதும் அவன் கண்கள்அலைபாய்ந்தது. வெகு தொலைதூரம் கடந்தபோதும் அவன் தேடிய யாரும் கண்களில் படவில்லை.

சிறுவயது, பருவ வயது என்று வளர்ச்சிகள் இயல்பாக வருகிறபோது பொழுதுபோக்குகள் மட்டும் மாறிலியாய் இருந்து விடுதல் சாத்தியமா?வயதுக்கேற்றவாறு பொழுதுகளும் போக்குகளும் வந்து போவது அசாதரணமான விடயமே இல்லையா?

கரன்- அந்தப் பிரமாண்டமான பூங்காவினூடே எத்தனையோ இயற்கைகளை ரசித்தவாறே போய்க்கொண்டிருந்தான்.

மறுநாள் நர்த்தனியின் திறமை வெளிப்பட பரீட்சைப் பெறுபேறுகள் வந்திருந்தன.

- ஹேமராஜ்(Nhemaraj@aol.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

சென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2019
தயாநிதி மாறன் திமுக வென்றவர் 4,48,911 57% 3,01,520
சாம் பால் பாமக தோற்றவர் 1,47,391 19% 3,01,520
2014
எஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841
தயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0
2009
தயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454
முகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more