2023ஆம் ஆண்டு அதிர்ஷ்டத்தின் சாவி யார் கையில் கிடைக்கப்போகிறது தெரியுமா? எண் கணித நிபுணர் கணிப்பு
சென்னை: 2023ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று பலருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கலாம். 1,2,3,4 கூட்டுத்தொகை கொண்ட எண்களில் பிறந்தவர்களுக்கு இந்த 2023ஆம் ஆண்டில் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். புத்தாண்டில் அதிர்ஷ்டத்தின் சாவி யார் கையில் கிடைக்கப்போகிறது? அமைதியான மன நிறைவான வாழ்க்கை யாருக்கெல்லாம் அமையப்போகிறது என்பதை துல்லியமாக கணித்து நமது ஒன் இந்தியா நேயர்களுக்காக வழங்கியுள்ளார் எண்கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன்.

கடந்த 3 ஆண்டுகாலமாகவே மக்களில் பலருக்கும் பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. வேலையிழப்பு, தொழிற்சாலைகள் மூடல் என பலரது வாழ்க்கையிலும் கசப்பான பக்கங்களை கொடுத்து விட்டது 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு. 2022ஆம் ஆண்டில் பொருளாதார சிக்கல்களில் இருந்து சற்றே மீண்டு வந்தாலும் பலருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் பலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். வெற்றிகள் தேடி வரும் என்று எண் கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன் கணித்துள்ளார். யாருக்கெல்லாம் 2023ஆண்டு வசந்தத்தை தரப்போகிறது?யாரெல்லாம் வம்புக்கு போகாமல் வாயை முடி மவுனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
ஆனந்தமான ஆண்டு 2023
2023ஆம் ஆண்டு 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு AIJQY என்ற முதல் எழுத்தை பெயராகக் கொண்டவர்களும் மிகவும் கவர்ச்சியாக பேசுவார்கள். அடுத்தவர்களுக்கு யோசனைகளை அள்ளி வாரி வழங்குவார்கள். கூடும் கூட்டத்தில் இவர்களே தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவார்கள். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஒன்றாம் எண்காரர்களுக்கு இந்த 2023ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. ஏற்கனவே பட்ட அவஸ்தைகளில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது. ஆன்மீக பயணங்களால் ஆனந்தமான மனநிலையை பெறுவார்கள். இரும்பு, வாகனம், உணவுத்துறை, ரியல் எஸ்டேட் துறையினர் மிகவும் வளர்ச்சியடைவார்கள். இந்த ஆண்டு கறுப்பு நிற ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டத்தின் சாவி கிடைக்கும்
2,11,20,29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் R K B என்ற முதல் எழுத்தை பெயராகக் கொண்டவர்களும் இந்த ஆண்டு ஞானத்தின் கதிர்களாக ஜொலிப்பார்கள். உலக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் இந்த இரண்டாம் எண் காரர்கள். யாரிடமும் எந்த வம்புக்கும் போகவே மாட்டார்கள். யாராவது வம்புக்கு இழுத்தால் கூட விட்டு அடங்கிப்போய்விடுவார்கள். சரியான தருணம் பார்த்து தன்னை வம்புக்கு இழுத்தவர்களை அடக்குவதற்கு காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களை சுவடு தெரியாமல் ஆக்கிவிடுவார்கள். பெண்களை மரியாதையுடன் நடத்துவார்கள் எளிதில் காதல் வலையில் வீழ்ந்து விடுவதும் உண்டு. இவர்களை அறிவு ஜீவிகள் என்று கூறலாம். இந்த 2023ஆம் ஆண்டு பேரதிர்ஷ்டத்தின் சாவியை இவர்களிடம் தரப்போகிறது. நினைத்தது எல்லாம் அதிர்ஷ்டகரமாக நிறைவேறப்போகிறது. கல்வி, வேலை, வீடு வாகனம், இனி எல்லாமே இவர்களுக்கு சாதகமாக கிடைப்பது நிச்சயம்.
அள்ள அள்ள பணம் வரும்
03,12,21,30 தேதிகளில் பிறந்தவர்களும் CGLS என்ற முதல் எழுத்தை பெயராகக் கொண்டவர்களும் சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள். சென்ற வருடம் எத்தனையோ பெரிய முயற்சிகள் செய்தும் எதுவும் கிடைக்காத ஆண்டாக அமைந்து விட்டது. இனிமேல் எல்லா நலமும் வகை வகையாக வந்து வழிகாட்டப்போகிறது. நீதி, நேர்மை,ஒழுங்கு, கட்டுப்பாடு போன்ற உயர்குணங்கள் மேலும் உயர்வடையப்போகிறது. பலரது தன்னம்பிக்கையை வளர்த்த தங்களின் தரம் நிச்சயம் மேலும் உயரும் நம்புக்கள். கல்வி, ஜவுளி, நகை, கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அள்ள அள்ள குறையாத அளவிற்கு ஆஸ்திகள் வந்து குவியப்போகிறது. மொத்தத்தில் இவர்கள் ஒரு அற்புதமான பிறவிகள் என்றே கூறலாம். நாட்டிற்கு இவர்களின் சேவை தேவையாக இருப்பதால் நிச்சயம் நலனடைவார்கள்.
மவுனமே நல்லது
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் D T M என்ற முதல் எழுத்துக்களை பெயராக் கொண்டவர்களும் அடுத்தவர்களிடம் சதுரங்க விளையாட்டு விளையாடுவதில் வல்லவர்கள். சுதந்திரத்தை அதிகமாக விரும்பும் இவர்கள் பிறர் சுதந்திரத்தை விரும்புவதே இல்லை. ஏனெனில் அடுத்தவர்களிடம் அக்கறை காட்டுவதே இல்லை. எப்பொழுதும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் இவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருந்தாலும் இவர்களது பேச்சை கேட்க திராணி இல்லாமல் பலர் ஓடி விடுவார்கள். பொதுமக்களுக்கு அதிகம் உதவி செய்யும் இவர்கள் 2023ஆம் ஆண்டு தேவையில்லாத விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. புதிய தொழில்களை தொடங்கும் முன்பாக ஒன்றுக்கு நான்கு முறை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதே நல்லது. இந்த நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் எதற்கும் முந்திரி கொட்டை போல முந்தாமல் இருப்பதே முதல் தரமான வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications