ஆடித்தபசு 2021: நாகதோஷம் செவ்வாய் தோஷம் நீக்கும் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்
சங்கரன் கோவில் சங்கரநாராயணம் ஆலயத்தில் ஆடித்தபசு திருவிழா செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாகதோஷம் செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது.
சங்கரன்கோவில்: ஹரியும் ஹரனும் ஒன்றுதான் என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகத்திற்கு உணர்த்திய சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஆடித்தபசு விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆடி மாதத்தில் பவுர்ணமி நாளில் ஊசி முனையில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் சங்கரநாராயணராக காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் ஆடித்தபசு விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஆலயங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் வரை நடக்கும். 'சிவனும், விஷ்ணுவும் ஒன்று' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வது வழக்கம்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம் காலசர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும், ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது.

புற்றுமண் பிரசாதம்
தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் ஆகும். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். சங்கன் பதுமன் என்ற இரண்டு நாகங்கள் கோமதி அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம் விஷ ஜந்துக்களினால் ஏற்படும் பயம் போகும்.

ஸ்ரீ சக்கரம்
இது அன்னையின் சஹஸ்ராரம் விழுந்த ஸ்தலமாகையால் அன்னை இங்கே மஹா யோகிநியாக , தபஸ் ஸ்வரூபிணியாக காட்சியளிக்கிறாள். அம்பிகை சன்னதியின் முன்பு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது . இதில் அமர்ந்து வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். மனநிலை சரியில்லாதவர்கள் , பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து குணமடைந்து செல்கின்றனர்.

கோமதி அம்மன்
ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து , வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக, இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள்.

தவக்கோலம் கண்ட அன்னை
அன்னை அம்பிகை ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த , ஸ்ரீ சங்கர நாராயண கோலம் காண இந்த ஸ்தலத்தில் தவம் இயற்றினாள். ஆடி பவுர்ணமி உத்திராட நட்சத்திர தினத்தில் ஸ்ரீ சங்கரநாராயண தரிசனம் அன்னை கோமதிக்கு கிட்டியது. இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடி தபசு பிரம்மோற்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மாலை நேரத்தில் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயண கோலத்தில் காட்சியளிப்பார் சிவபெருமான்.

கை மேல் பலன்
இங்கு அம்பிகையின் புற்றுமண் பிரசாதம் வெகுசிறப்பு. இதை உண்டால் வயிற்றுவலி மற்றும் சரும நோய்கள் நீங்கும். திருமண தடை, குழந்தை பேறு கிடைப்பதில் தடை இருந்தால் அம்பிகையை வேண்டிக்கொண்டு பரிகாரம் செய்தால் கை மேல் பலன் கிடைக்கிறது. இந்த ஆலயம் காளஹஸ்திக்கு அடுத்தபடியாக கால சர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும் , ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது . செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது.

அம்மன் உலா
ஆடித்தபசு திருவிழா செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் கோமதி அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் அம்பாள் சிவிகையில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் காலையும், இரவும் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாமி தரிசனம் எப்போது
பூஜைகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 24ஆம் தேதி வரை 12 நாட்களும் காலை 8 மணிக்கு மேல் தான் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதே போல் இரவு 7.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications