டிசம்பர் மாத ராசிபலன் 2021: மேஷம் ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான மாதம்
டிசம்பர் மாதம் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டங்களும், யோகங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: டிசம்பர் மாதத்தில் சூரியன் விருச்சிகம், தனுசு ராசியில் பயணம் செய்வார். கார்த்திகை மாதம் 15 நாட்களும் மார்கழி மாதம் 15 நாட்களும் இணைந்த டிசம்பர் மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரம், கிரகங்களின் பார்வை மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. அதிர்ஷ்டமும் யோகமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் 5 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். விருச்சிக ராசியில் சூரியன், புதன், செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை நடைபெறுகிறது. அதே நேரத்தில் சனியின் பார்வையில் இருந்து செவ்வாய் விலகுவது சிறப்பு.
தனுசு ராசியில் உள்ள சுக்கிரன் டிசம்பர் 8ஆம் தேதி மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 10ஆம் தேதியன்று விருச்சிக ராசியில் உள்ள புதன் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
மேஷ ராசியில் பிறந்தவர்களே,நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் திடீர் வாய்ப்புகள் தேடி வரும் காரணம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது.

மேஷ ராசிக்கு அதிர்ஷ்டம்
செவ்வாய் சந்திரன் இணைந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும் சந்திர மங்கல யோகம் தேடி வரும். டிசம்பர் 5ஆம் தேதி செவ்வாய் கேது, சூரியன, புதனோடு இணைகின்றனர். எட்டாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைகின்றன. சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். 8ஆம் தேதி பத்தாம் வீட்டில் உள்ள சனியோடு இணைந்து மாத இறுதி வரை பயணம் செய்வார். சனி பத்தாம் வீடு குரு 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர்.

நேர்மறை எண்ணங்கள்
இந்த மாதம் உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைக்கு நல்ல மாற்றம் உண்டாகும். அரசு வேலையில் புரமோசன் கிடைக்கும். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். திருமணம் சுப காரியங்கள் கைகூடி வரும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். காதல் வாழ்க்கை திருமணத்தில் முடியும்.

மகிழ்ச்சி அதிகரிக்கும்
வெளிநாட்டு வாய்ப்பு தேடி மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும் குருவின் ஆசி கிடைக்கும். வெளிநாட்டு யோகம் கை கூடி வந்துள்ளது. இல்லத்தரசிகளுக்கு அற்புதமான மாதம். குடும்ப ஸ்தானத்தில் ராகு இருந்தாலும் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் முடிந்து புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

அஷ்டமத்தில் கிரகங்கள்
எட்டாம் வீட்டில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகள் பேச்சில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் நிதானம் தேவை. அஷ்டமத்தில் நான்கு கிரகங்கள் இணைந்திருப்பதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. குடும்பத்திலோ பொது இடங்களிலோ வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். முயற்சிகளில் சில தடைகள் ஏற்பட்டாலும் அதையும் தாண்டி வெற்றிகளை பெறுவீர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications