February month rasi palan 2022 tamil: கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த மாதம்
பிப்ரவரி மாதம் கன்னி ராசி, துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் பரிகாரங்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சென்னை: பிப்ரவரி மாதத்தில் கன்னி துலாம் ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. புதிய வேலையும் புரமோசனும் கிடைக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் கை கூடி வரும். இந்த மாதத்தில் சூரியன்,செவ்வாய்,சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
பிப்ரவரி மாதத்தில் சூரியன் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் சஞ்சரிக்கப்போகிறார். மகர ராசியில் உள்ள சனி, சூரியன், புதன் கூட்டணி மாத பிற்பகுதியில் பிரியப்போகிறது. பிப்ரவரி 13ஆம் மகர ராசியில் உள்ள சூரியன் கும்ப ராசிக்கு சென்று குருவோடு இணையப்போகிறார்.
தனுசு ராசியில் உள்ள செவ்வாய், சுக்கிரன் மாத இறுதியில் இடப்பெயர்ச்சியாகி மகர ராசியில் உள்ள சனியோடு இணையப்போகிறார். இந்த மாதத்தில் சூரியன்,செவ்வாய்,சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, மாத முற்பகுதியில் மூன்றாம் வீட்டில் கேது, சுக்கிரன், செவ்வாய் இணைந்து நான்காம் வீட்டில் உள்ளது. சூரியன், புதன், சனி இணைந்து ஐந்தாம் வீட்டிலும் உள்ளது. ஆறாம் வீட்டில் குரு, ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் இணைந்துள்ளன. கன்னி ராசிக்கு பிப்ரவரி மாதம் கிரகங்கள் வலுவான நிலையில் பயணம் செய்கின்றன. சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வலுவான நிலையில் சூரியன் உடன் இணைந்துள்ளார். ராசி நாதன் புதனின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுகிறது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொந்த பந்தங்களின் வருகை அதிகரிக்கும்.

வேலையில் புரமோசன் கிடைக்கும்
வேலை விசயமாக எடுக்கும் முயற்சி வெற்றியைத் தேடித் தரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். வளர்ச்சி அதிகரிக்கும் மாதம். நான்காம் வீட்டில் சுக்கிரன் மகிழ்ச்சியை அதிகரிப்பார். ருசியான உணவு கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குரு ஆறாம் வீட்டில் இருப்பதால் சில தடைகள் வரலாம். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் அதிக பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். மாணவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.

நிம்மதி சந்தோஷம் நிறைந்த மாதம்
குடும்ப வாழ்க்கையில் நிம்மதி சந்தோஷம் அதிகரிக்கும். சிக்கல்கள் நீங்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்த மாதம். ஆடம்பர பொருட்கள் வாங்க பண வரவு அதிகரிக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக இடையூறுகள் எட்டிப்பார்க்கும். கல்யாண வயது வந்தும் கை கூடாமல் தள்ளிப்போகும். புத்திர பாக்கியம் கிடைப்பதில் தடைகள் வரலாம். பண வருமானம் அதிகரிக்கும். யாருக்கும் கடன் வாங்கி பணம் தர வேண்டாம் பிறகு திரும்ப வர வாய்ப்பு இல்லாமல் போய் விடும். மொத்தத்தில் இந்த மாதம் சந்தோஷம் அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசிக்கு இரண்டாம் வீட்டில் கேது, சுக்கிரன் செவ்வாய் கூட்டணி இணைந்து மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். நான்காம் வீட்டில் சனி சூரியன், புதன், ஐந்தாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. வேலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. வேலைப்பளு அதிகரிக்கும். புதன் பார்வையும் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் அறிவும் திறமையும் அதிகரிக்கும். வேலையில் புரமோசன், பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்துடன் சிறு பயணங்கள் செல்வீர்கள். சகோதர சகோதரிகளின் உறவு சந்தோஷத்தை தரும்.

சுப காரியங்கள் நடைபெறும்
ஐந்தில் குரு பலமான பார்வையைத் தருகிறது. சுப காரியங்களில் ஈடுபடலாம். வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சளி தொந்தரவுகள் வரலாம். நிறைய சந்தோஷங்கள் அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவீர்கள். உறவினர் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டில் உள்ள சூரியன் இடப்பெயர்ச்சியாகி ஐந்தாம் வீட்டில் உள்ள குரு உடன் இணைகிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண சுப காரியங்கள் கை கூடி வரும். எதிர்காலத்தைப் பற்றி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications