Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி மாத ராசி பலன் 2022 : மேஷ ராசிக்கு ராஜ யோகம், ரிஷப ராசிக்காரர்கள் கவனம்

ஜனவரி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம், பார்வைகளைப் பொறுத்து மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனவரி மாதத்தில் சூரியன், தனுசு ராசியிலும் மகர ராசியிலும் பயணம் செய்வார். புத்தாண்டு பிறந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் மாதம் இந்த மாதத்தில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும். நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வை, கூட்டணியைப் பொருத்து மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்த மாதம் நிறைய கிரக மாற்றங்கள் உள்ளன. சூரியன் 15 நாட்கள் தனுசு ராசியிலும் பிற்பகுதியில் மகர ராசிக்கும் செல்கிறார். செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்வார். புதனும், சுக்கிரனும் வக்ர நிலையில் பயணம் செய்கின்றன. கும்ப ராசியில் குருவும், ரிஷபத்தில் ராகுவும் விருச்சிகத்தில் கேதுவும் பயணம் செய்கின்றன.

மேஷ ராசிக்காரர்களுக்கு புது வருடத்தின் முதல் மாதத்தில் கிரகங்கள் சஞ்சாரம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், இரண்டாம் வீட்டில் ராகு, ராசி நாதன் செவ்வாய் எட்டாம் வீட்டில் கேது, சந்திரன் உடன் இணைந்து பயணம் செய்கிறார். ஒன்பதாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், பத்தாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் ராசி நாதன் கேது உடன் இருக்க புத்தாண்டு பிறக்கிறது. மாதத்தின் முதல் நாள் சந்திராஷ்டமத்துடன் தொடங்குவதால் நிறைய சிக்கல்களை எதிர்கொள்வீர்கள். மன கலக்கம் இருக்கும் என்றாலும் குருவின் பயணமும் பார்வையும் உங்களின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.

நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்

நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்

மாத பிற்பகுதியில் சூரியன் பத்தாம் வீட்டிற்கு பயணம் செய்து சனியோடு பயணம் செய்கிறார். ராசி நாதன் செவ்வாய் கேது உடன் இருந்து விலகி ஒன்பதாம் வீட்டிற்குச் சென்று சுக்கிரன் உடன் இணைகிறார். பாக்யங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. குருவின் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் இணைந்துள்ளனர். ராஜயோகம் கை கூடி வரப்போகிறது. தடைகள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பத்தாம் வீட்டில் சனி சூரியன் இணைவால் தொழில் விருத்தியடையும். கௌரவமான பதவிகள் தேடி வரும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை தேடி வரும்.

திருமண யோகம்

திருமண யோகம்

லாப குரு நிறைய நன்மைகளைத் தருவார். எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். லாப குருவினால் திருமணம் கை கூடி வரும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். நினைத்த பலன்கள் கை கூடி வரும். வீடு சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல மாதம், கிரகப்பிரவேஷம் செய்யலாம். சொத்து வாங்க முதலீடு செய்யலாம். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றாலும் குளிர் காலத்தில் அலர்ஜி, சளி தொந்தரவு ஏற்படும்.

ஆரம்பமே அமர்களம்

ஆரம்பமே அமர்களம்

மாணவர்களுக்கு அற்புதமான வாரம். அரசு வேலைக்காக தேர்வு எழுத நினைப்பவர்களுக்கு இது நல்ல ஆண்டு. ஆரம்பமே அமர்களம் என்பது போல நல்ல செய்திகள் தேடி வரும். ஜனவரி மாதமே அதற்கான முன்னேற்பாடுகளை செய்யலாம். குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேரலாம். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். எதிர்காலம் நன்றாக இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் வெற்றிகள் நிச்சயம். இந்த மாதம் புத்துணர்ச்சி தரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது.

பதவியில் மாற்றம்

பதவியில் மாற்றம்

ரிஷப ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசியில் ராகு, ஏழாம் வீட்டில் கேது செவ்வாய், எட்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் புதன் சனியோடு பயணம் செய்கிறார் பத்தாம் வீட்டில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சனிபகவான் ஒன்பதாம் வீட்டில் புதனோடு இருப்பதால் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நல்ல வேலை கிடைக்கும். சூரியன் சுக்கிரன் இணைந்து எட்டாவது வீட்டில் இருப்பதால் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாத பிற்பகுதியில் புதன், சூரியன், சனி இணைந்து ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்வது சிறப்பு. உங்கள் பதவியில் சில மாற்றம் வரும். பத்தில் குரு பதவியில் மாற்றத்தை தருவார். சூழ்நிலைகள் புதிய மாற்றத்தை தருவார்.

ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் கவனம்

சுக்கிரன் செவ்வாய் எட்டாம் வீட்டில் இணைவதால் அதிக வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. முக்கிய முடிவுகள் எதற்கும் வர முடியாத மாதமாக உள்ளது. வார்த்தைகளில் நிதானம் தேவை. நெருப்பு, மின்சாதனங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனப் பயணங்களில் நிதானம் தேவை. காதல் விசயங்கள் காவை வாரி விடும். மாணவர்களுக்கு நல்ல மாதம் கல்விக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு மன அழுத்தம் வர வாய்ப்பு உள்ளது. வேலைப்பளு அதிகரிக்கும். கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பெரிய அளவிலான முயற்சிகளை எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்கள் வாங்குவதை தவிர்க்கவும். வீடு, மனை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை சொத்துப்பத்திரங்களை சரிபார்த்து வாங்குவது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+