Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாங்கனித் திருவிழா : பேயுருவத்தில் வந்த காரைக்கால் அம்மையார்...திருவாலங்காட்டில் ஆட்கொண்ட இறைவன்

கணவனுக்கு தேவையற்ற இந்த சதையும் அழகும் தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார்.

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே தனக்கு அழகு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் செய்யத் துணியாத பேய் வடிவத்தினை கேட்டுப்பெற்றார் காரைக்கால் அம்மையார். பேய்க்கோலம் தாங்கிய அம்மையார், சித்தமெல்லாம் சிவமயமாக திகழ்ந்தார். தன்னை நாடி வந்த அன்னையை ஆட்கொண்டார் இறைவன். இந்த நிகழ்ச்சி வரும் 25ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைக்காலில் நடைபெறுகிறது.

காரைக்கால் நகரத்தில் புனிதவதியாக பிறந்து பரமதத்தரை மணந்து இல்லறம் என்னும் நல்லறத்தை சிறப்பாக நடத்தி வந்தபொழுது, இவரை தெய்வீகப் பெண் என்பதை உணர்ந்த கணவன், உடனேயே இவரை விட்டு விலகி சென்று விடுகிறார்.

பரமதத்தர் பாண்டிய நாட்டில் குலசேகரபட்டினத்தில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகள் பிறக்க புனிதவதி என்று பெயர் வைத்து மகிழ்ந்தார். பரமதத்தர் குலசேகரபட்டினத்தில் இருப்பதை அறிந்த புனிதவதி காரைக்காலில் இருந்து ஓடோடு வந்தார்.

தெய்வமாக வணங்கிய உறவினர்

தெய்வமாக வணங்கிய உறவினர்

புனிதவதியை எதிர்கொண்டு அழைத்த பரமதத்தர், மனைவி-மகளுடன் புனிதவதியின் பாதங்களில் விழுந்து வணங்கினார். உறவினர்கள் அதிர்ந்தனர். அவர்களிடம், ''புனிதவதி மனிதப் பிறவி அல்ல; தெய்வம். நீங்களும் வீழ்ந்து வணங்குங்கள்!'' என்றார்.

பேய் வடிவம் வரமாக கேட்ட புனிதவதி

பேய் வடிவம் வரமாக கேட்ட புனிதவதி

இதைக்கேட்ட புனிதவதியார் கணவனுக்கு தேவையற்ற இந்த சதையும் அழகும் தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். பேயுருவம் பெற்ற காரைக்காலம்மையார் அதன் பிறகு இறைவன் அருளால் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலையைப் பாடிய பிறகு, சிவபெருமானின் தரிசனம் காண விரும்பி கயிலைக்குச் சென்றார்.

மகிழ்ந்த இறைவன்

மகிழ்ந்த இறைவன்

பனி படர்ந்த கயிலாய மலையை காலால் மிதித்து கடக்க விரும்பாமல், தலையால் நடந்து சென்றார். அதைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் 'வாரும் என் அம்மையே' என அழைத்தார். யாது வேண்டும் என்று சிவன் கேட்க அதற்கு அம்மையோ, 'பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னடியை மறவாமை வேண்டும். மகிழ்ந்து வாடி இன்னும் வேண்டும் நான் இறைவா! நீ ஆடும்போது உன்னடியின் கீழ் இருக்க வேண்டும்' என்று வேண்டினார்.

இறைவனின் காலடியில் அம்மையார்

இறைவனின் காலடியில் அம்மையார்

உடனே ஈசன், திருவாலங்காட்டிற்குச் சென்று தனது ஊர்த்துவ தாண்டவமதைக் காணக் காத்திருக்கச் சொல்லி அருளினார். அதோடு, ஆலங்காட்டினை அவர் வந்தடைய, வழியும் காட்டி அருளியுள்ளார். அங்கு காரைக்காலம்மையார் ஈசனின் திருநடனத்தை காணும் பேற்றினைப் பெற அது முதற்கொண்டு, ஆடவல்லானின் சிற்பத் திருமேனியின், திருவடி கீழ் பேயாரும் இடம் பெற வைப்பது சிற்ப மரபாகியது.

திருக்கல்யாண தரிசனம்

திருக்கல்யாண தரிசனம்

ஆனி பவுர்ணமி நாளில் காரைக்காலில் மட்டுமல்ல, குலசேகரபட்டினத்திலும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.
விழாவின் 2ஆம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியாக கைலாசநாதர் கோவிலில் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் சமூக இடைவெளி, முககவசம் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில், குறைந்த அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

 வெள்ளை சாத்தி

வெள்ளை சாத்தி

மாலை நேரத்தில் பிச்சாடனார் வெள்ளை சாத்தி புறப்பட்டார். திருமணமான புதுமணத்தம்பதியர் பரமதத்தரும் புனிதவதியாரும் பல்லக்கில் பவனி வந்தனர். கோவிலுக்குள்ளேயே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவின் 3ஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று மாலை 3 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகமும், நாளைய தினம் காலை 9.30 மணிக்கு பிச்சாண்டவர் வீதியுலா மற்றும் மாங்கனி இறைப்பது, பிற்பகல் 12.30 மணிக்கு அமுது படையல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

காட்சியளித்த இறைவன்

காட்சியளித்த இறைவன்

25ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கிறது.
இறைவனையே நினைத்து உள்ளம் உருகி வழிபட்ட காரைக்கால் அம்மையாரை நினைத்து வணங்க வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள் தொலையும் அன்னைக்கு மாங்கனியும், வளையலும் வைத்து வழிபட குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

பேயுருவம் பெற்ற தலம்

பேயுருவம் பெற்ற தலம்

காரைக்கால் அம்மையார் பேய் உருவம் பெற்ற தலம் திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இல்லங்குடி என்பவர் இந்த ஆலயத்தை நிர்வாகம் செய்து வருகிறார். திருச்செந்தூர் செல்பவர்கள் குலசை சென்று காரைக்கால் அம்மையாரையும் தரிசனம் செய்து வரம் பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+