வானத்தில் அதிசயம்... சந்திரன், செவ்வாய்,சுக்கிரன் ஒரே நேர் கோட்டில் வெறும் கண்ணால் பார்த்து ரசிங்க

வான மண்டலத்தில் அரிய நிகழ்வாக சந்திரன், செவ்வாய், சுக்கிரன் கிரகங்கள் இன்று ஒரே நேர் கோட்டில் தோன்றுகின்றன. செவ்வாயும் சுக்கிரனும் அருகருகே இருக்கும் அற்புத காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காலை நேரத்தில் கிழக்கே விடி வெள்ளியை பார்ப்பது சிறப்பானது. அது போல மாலை நேரத்தில் மேற்கே ஒளிரும் வெள்ளி கிரகத்தை பார்க்கலாம். சுக்கிரன் எனப்படும் வெள்ளி கிரகமும். செவ்வாய் கிரகமும் இன்று அருகருகே வரும் நிகழ்வை வானத்தில் பார்த்து ரசிக்கலாம். சந்திரன், செவ்வாய்,சுக்கிரன் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நிகழ்வினை இன்று வானத்தில் பார்த்து ரசிக்கலாம்.

வானத்தில் பல அதிசயங்கள், அற்புத நிகழ்வுகளை நாம் பார்த்து ரசித்துள்ளோம். சூரிய கிரகணம், சந்திரகிரகணம், வால் நட்சத்திரங்கள் என வானத்தில் பல அரிய நிகழ்வுகளை ரசித்திருக்கிறோம்.
பல அற்புத நிகழ்வுகளை நாம் வெறும் கண்ணால் பார்த்து ரசிக்க முடியும். சில நிகழ்வுகளை தொலை நோக்கியின் மூலம் பார்த்து ரசிக்கலாம்.

இன்று மாலை மேற்கு வானத்தில் ஒரே நேர்கோட்டில் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் அருகருகே இருப்பதை கண்டு ரசிக்கலாம். மேற்கே சூரியன் மறைந்த பிறகு அரை மணி நேரம் கழித்து இந்த நிகழ்வை காணலாம் . அப்போது சந்திரன், செவ்வாய், சுக்கிரன் கிரகங்கள் அருகருகே இருப்பது போல தோன்றும்..

நவ கிரகங்கள்

நவ கிரகங்கள்

ஜோதிட ரீதியாக சூரியன்,சந்திரன், செவ்வாய், புதன்,குரு, சுக்கிரன், ராகு, கேது ஆகிய நவ கிரகங்கள் 12 ராசிகளை ஆட்சி செய்கின்றன. இப்போது கடக ராசியில் செவ்வாய் சுக்கிரன் இணைந்திருக்க நேற்று வரை கடக ராசியில் இந்த இரண்டு கிரகங்களுடன் இணைந்து பயணித்த சந்திரன் இன்று சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார்.

கோள்களின் தூரம்

கோள்களின் தூரம்

பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தை ஒட்டியே கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கோளுக்கும் இடைப்பட்ட தூரம் மாறுபடும். அவ்வாறு தத்தமது பாதைகளில் கோள்கள் பயணித்து கொண்டிருக்கும்போது பூமிக்கு அருகில் உள்ள கோள் தொலைவில் உள்ள கோளை முந்தி செல்வது போல் இருக்கும். அந்த நேரத்தில் அந்த இரு கோள்களும் அருகருகே இருப்பது போல் தெரியும்.இன்று மாலையில் சுக்கிரனும், மிகத் தொலைவில் இருக்கும் செவ்வாய் கோளும் அருகருகே இருப்பது போல் தெரியும். அப்போது அவற்றிற்கு இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியை விட குறைவாக இருக்கும்.

அற்புத காட்சி

அற்புத காட்சி

இன்றைய தினம் மாலையில் சூரியன் மறைந்த பிறகு மேற்கு திசையை பார்த்தால் அங்கு ஒளி பொருந்திய சுக்கிரன் தெரியும். தொலைதூரத்தில் இருக்கும் செவ்வாய் கிரகம் ஒளி குறைவாக சுக்கிரன் கோளுக்கு அருகிலேயே இருப்பது போல் தெரியும். இந்த அற்புத காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம்.

கிரகங்கள் இணைவு

கிரகங்கள் இணைவு

செவ்வாய் மற்றும் சுக்கிரன் இரண்டும் மேற்கு அடிவானத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சாதாரண கண்களுக்குத் தென்படும். கிரகங்கள் நெருங்கி இருப்பது போல தோன்றினாலும் இவை வெகு தொலைவில் உள்ளன என்பதுதான் உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+