ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இன்று மாசி தெப்ப உற்சவம்: நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் கோயிலில் மாசி தெப்ப உற்சவத்தின் ஏழாம் நாள் நிகழ்வாக நம்பெருமாள் தேவியர்களுடன் நெல்லளவு கண்டருளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று மாலை நடைபெறுகிறது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் மாசித்திருவிழாவின் ஏழாம் திருநாளான்று தேவியர்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள் நெல்லளவை கண்டருளினார். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று, நமக்கு உணர்த்துவதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் 7ஆம் திருநாளன நெல்லளவு திருநாளன்று ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளினார் நம்பெருமாள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று மாலை நடைபெறுகிறது.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் மாசி தெப்ப உற்சவம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெறும் இவ்விழா வருகிற நம்பெருமாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.
இந்த ஆலயத்தில் சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவைத் திருநாள் நடைபெற்று வருகிறது. மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன் ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது.

மாசி வெள்ளி கருட சேவை
ஸ்ரீரங்கத்தில் மாசி மாதம் மட்டும் நடைபெறும் வெள்ளி கருடசேவை சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீரங்க ஸ்தலமானது சுக்ர ஸ்தலம் என்பதால் இங்கு வெள்ளி உலோகம் மிகவும் விசேஷமானது. இத்தகைய சிறப்பு வாய்ந்தது மாசி கருடன். இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் மிக விசேஷமான காட்சி. இந்த வெள்ளி கருட சேவையின் சிறப்பைக் கூறும் மாசி கருடன் காசியிலும் கிடைக்காது என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது. 4ஆம் திருநாளன்று வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார் நம்பெருமாள். ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாச மண்டபத்திலிருந்து வெள்ளி கருடவாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

மாசி கருடன் தரிசன புண்ணியம்
நான்கு உத்திர வீதிகள் வழியாக வலம் வந்து வாகனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நம்பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கத்தில் தை, மாசி, பங்குனி மாதங்களில் கருடசேவை நடைபெற்று வந்தாலும் மாசிமாதம் நடைபெறும் கருடசேவையில் நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளுவது சிறப்பாகும். மற்ற மாதங்களில் தங்ககருட வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிப்பார். 'காசிக்குச் சென்றுவந்த புண்ணியம் மாசிக் கருடனைத் தரிசித்தால் கிட்டும்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கஜவாகன சேவை
ஆறாம் நாள் நிகழ்வாக நம்பெருமாள் கஜ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் வாகன மண்டபத்திலிருந்து கஜ வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், நான்கு உத்திர வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். தொடர்ந்து ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று இரவு பத்து மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ஏழாம் திருநாள்
ஏழாம் திருநாளான்று தேவியர்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள் நெல்லளவை கண்டருளினார். கணவனின் சரிபங்கான மனைவிக்கு, எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று, நமக்கு உணர்த்துவதற்காக 7ஆம் நாள் நெல்லளவு திருநாளன்று ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளினார் நம்பெருமாள்.

வரவு செலவு எவ்வளவு
இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு. செலவு எவ்வளவு மீதி இருப்பு எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்க்க தன்னுடன் இரண்டு தேவியரையும் சேர்த்தழைத்துக் கொண்டு வருகிறார் நம்பெருமாள். பட்டு வேஷ்டி; அங்கவஸ்திரம் அணிந்து, ஸ்ரீதேவி - பூதேவியர் இருவரும் பட்டாடை உடுத்தி உடன் வர, பக்தர்கள் புடைசூழ, வெளிப்பிரகாரமான இராஜமகேந்திரன் திருச்சுற்றில் பவனி வந்தார் நம்பெருமாள். ஆர்யபட்டாள் வாசல் வழியே வந்து, செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு, நாலு கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது பாசிப் பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டது.

பெருமாளுக்கு நெல் கணக்கு
செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிச்சாரகம் செய்பவர், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து நம்பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்விக்கப்படுகிறது. கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல் அளந்து கொட்டி பெருமாளுக்கு கணக்கு கூறுகிறார். 'திருவரங்கம்' எனச் சொல்லி, முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார்.

கட்டளையிடும் பெருமாள்
அடுத்து 'பெரிய கோயில்' எனக் கூறி, இரண்டாவது மரக்கால் நெல்லை அளக்கிறார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது, 'நிரவி விட்டு அள' என்று. ஸ்தானி கர்தான் குரல் கொடுக்கிறார். 'சரியாக அளந்து போடு' என்று பெருமாளே கட்டளையிடுவதாக ஐதீகம்.

நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்
உலகம் யாவுக்கும் படியளப்பவர் பெருமாள். மரக்கால் மூலம் நெல் அளந்து கூறப்படுகிறது. ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி. எனக் கூவிக் கூவி அளந்து போடப்படுகிறது. தன் நேரடிப் பார்வையில் நெல் அளவை கண்ட நம்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் இணைந்து உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த ஆண்டு மாசி தெப்ப உற்சவ திருவிழாவின் ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருக்கொட்டாரத்தில் எழுந்தருளி நெல்அளவை கண்டருளினார்.

தானிய உற்பத்தியும் சேமிப்பும் முக்கியம்
அந்தக் காலத்திலிருந்து எல்லாமே எம்பெருமாளின் நேரடிப் பார்வையில் நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் திருக்கொட்டாரத்திலிருந்துதான் எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக் கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன. நாடு செழிக்கவும், மக்கள் ஆரோக்கியத்துக்கும் தானிய உற்பத்தியும் சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள்.

மாசி தெப்ப உற்சவம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 4.30 மணியளவில் வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

பந்தக்காட்சி விழா
நாளைய தினம் பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு காலை 8 மணிக்கு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்தக்காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மாசி தெப்பத்திருவிழா உற்சவம் இத்துடன் நிறைவடைகிறது.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications