Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Puthandu Palan 2026: சொந்த வீடு, கார் வாங்கப் போகும் மேஷ ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு மேஷம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டிலாவாது நல்லவை நடக்குமா, பிரச்சனை தீரூமான, கனவுகள் நிறைவேறுமா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக எல்லோருக்கும் இந்த ஆண்டு புதுமை செய்யும் ஆண்டாக இருக்கும். சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது.

new-year-rasi-palan-2026-mesham-rasi-people-will-get-good-benefits-and-fortunes-in-this-new-year

சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

புத்தாண்டு ராசி பலன்

2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.

அந்த வகையில், இந்தப் புத்தாண்டு மேஷம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம் (Mesham new year rasi palan):

மேஷ ராசிக்கு 2 வது ராசியில் 2026 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. யோகாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளதால் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். எங்கு சென்றாலும் ஜெயித்து காண்பீர்கள். தயக்கம், தடுமாற்றம் போன்றவை விலகும். எல்லோர் மத்தியிலும் நீங்கள் பிரகாசமாக திகழ்வீர்கள். ராசிக்கு யோகாதிபதியாக இருக்கக்கூடிய குரு பகவான் இந்த ஆண்டு முழுக்க மாறி மாறி அமரப் போகிறார்.

இப்போது 3 ஆம் இடத்தில் குரு அமர்ந்திருப்பதால் சிறிய சிறிய தடைகளை கொடுத்துக் கொண்டிருப்பார். ஜூன் மாதம் முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை நான்காம் இடத்தில் அமருவதால் வீடு வாங்குவது, வீடு மாறுவது, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகத்தைக் கொடுக்கும். அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை 5ஆம் வீட்டிற்கு குரு வாங்குவதால் உங்களுக்குப் பொற்காலமாக இருக்கும்.

சந்தோஷம் பெருகும்

அந்த காலகட்டத்தில் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் நல்லவை நடக்கும். மகன், மகளுக்கு திருமணம் கூடிவரும். பிள்ளைகள் செட்டிலாவதை கண்கூடாகப் பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த ஆண்டு முழுக்க சனி பகவான் ஏழரைச் சனியில் விரயச் சனியாக இருப்பதால் ஒரு பக்கம் வருமானம் வரும். வசதி வாய்ப்புகள் அதிகமாக வரும். இன்னொரு பக்கம் கடன் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

இஎம்ஐ கட்ட வேண்டியது அதிகரிக்கும். கடனை நினைத்து கவலைப்படுவதா, அடுத்தடுத்து முன்னேறுவதால் சந்தோஷப்படுவதா என்று தெரியாமல் குழப்ப நிலையில் இருப்பார்கள். அதனால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துவிட்டு சிக்கனமாக இருந்தால் கடனை ஓரளவு குறைக்க முடியும். ஏழரை சனி தொடருவதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போடாமல் இருப்பது நல்லது.

கையெழுத்தில் கவனம்

எவ்வளவு தெரிந்தவர்களாக, நெருக்கமானவர்களாக இருந்தாலும் ஏதாவது கொடுத்து உதவ வேண்டும் என்றால் கொடுத்து உதவுங்கள். ஆனால், ஆவணங்களில் கையெழுத்துப் போடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்துடன் வெளியூர் போகிறீர்கள் என்றால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்து விட்டு செல்வது நல்லது. டிசம்பர் 5 ஆம் தேதி முதல் ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது.

கேது உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்திலும், கேது 10 ம் வீட்டுக்கும் வருவதாலும் அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அவர்களுக்கு மருத்துவப் பிரச்சனைகள் இருக்கும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இந்த ஆண்டு முழுக்க வேலைச் சுமை அதிகமாக இருக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

இந்த ஆண்டு முழுக்க வியாபாரம் பரவாயில்லை என்கிற நிலை இருக்கும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக லாபங்களை எடுக்கலாம். ஆகஸ்ட், நவம்பர் மாதத்தில் வண்டி வாகனத்தை கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. மற்றபடி இந்த ஆண்டு முழுக்க உங்களுக்கு யோகமான மாதமாக இருக்க முருகர் வழிபாடு செய்வது நல்லது. துவரம்பருப்பு தானமாகக் கொடுப்பது, கால்களை இழந்தவர்களுக்கு உதவுவது ஏற்றத்தைக் கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+