2023 எப்படி இருக்கும்? யாருக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கும்? எண் கணித நிபுணரின் துல்லிய கணிப்பு
சென்னை: 2023ஆம் ஆண்டு கோலாகலமாக பிறந்துள்ளது. இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பலருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கலாம். 2023ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? நாட்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது 1 முதல் 9 வரை எண்களில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை துல்லியமாக கணித்து நமது ஒன் இந்தியா நேயர்களுக்காக வழங்கியுள்ளார் எண்கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன்.
கடந்த 3 ஆண்டுகாலமாகவே மக்களில் பலருக்கும் பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. வேலையிழப்பு, தொழிற்சாலைகள் மூடல் என பலரது வாழ்க்கையிலும் கசப்பான பக்கங்களை கொடுத்து விட்டது 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு. 2022ஆம் ஆண்டு சற்றே மீண்டு வந்தாலும் பலருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் பலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். வெற்றிகள் தேடி வரும் என்று எண் கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன் கணித்துள்ளார். அவரது துல்லியமான கணிப்பை பார்க்கலாம்.

2023ஆம் ஆண்டை கூட்டினால் 7 வருகிறது. இது நிறைவான ஒன்று என்று கூறப்படுகிறது. இறைவனுக்கு மிகவும் பிடித்த எண். இவர்கள் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். 7ஆம் எண்ணிற்கு நிறைய பெருமைகள் உண்டு. மற்ற எண்களை விட 7ஆம் எண் பிரசித்தி பெற்றது. உலக அதிசயங்கள் 7 1330 குறட்பாக்களை கூட்டினால் 7 வருகிறது. 133 அதிகாரங்களை கூட்டினால் ஏழு வரும். சப்த ரிஷிகள், கிழமைகள் ஏழு என ஏழாம் எண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. ஏழு பிறவிகள், ஏழு கடல்கள், சப்த கன்னியர்கள், ஏழு வள்ளல்கள், சப்த ஸ்வரங்கள், ஏழு மலைகள், பெண்ணின் பருவங்கள் ஏழு,ஆண்களின் பருவங்கள் ஏழு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. வானவில்லின் நிறங்கள் ஏழு என பல்வேறு சிறப்புகளை கொண்டது ஏழு. ஏழாம் எண் கூட்டுத்தொகையை கொண்ட இந்த ஆண்டு பல்வேறு சிறப்புகளை பெறும்.
2023ஆம் ஆண்டில் பூஜை பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். எலக்ட்ரானிக்ஸ் துறை, செல்போன் விற்பனை அதிகரிக்கும். ஜவுளித்துறை அதிக வளர்ச்சியடையும். R,K,B,O, Z ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக கொண்டு பெயரை தொடங்குபவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. இந்த ஆண்டு பலரது வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகிறது.
7ஆம் எண்ணின் பெருமைகள் நிறைய உள்ளன. 2023ஆம் ஆண்டில் யாருக்கெல்லாம் நன்மை செய்யப்போகிறது என்று பார்க்கலாம். 7ஆம் எண் எல்லோருக்கும் பிடித்தமானது. 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. அதே போல 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் தரப்போகிறது ஏழாம் எண். 3,12, 21,30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும், 4,13,22,31ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்த ஆண்டு நிறைய நன்மைகளைத் தரப்போகிறது.
5,14,23ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் 6,15,24ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும், 7,16,25ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் நிறைய மாற்றங்களை 2023ஆம் ஆண்டு தரப்போகிறது. 8,17,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கும், 9,18,27 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் புதிய வளர்ச்சிகள் உண்டாகும். 4,13,22,31ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்த ஆண்டு நிறைய நன்மைகள் நடைபெற்றாலும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. நாவை அடக்கி பேசுவது நல்லது.
1-01-2023 கூட்டுத்தொகை 9 வருவதால் இந்த ஆண்டு ஒன்பதாம் எண் கூட்டுத்தொகை கொண்டவர்கள், இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் அதிர்ஷ்டங்களும் கிடைக்கப்போகிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், ஹார்டுவேர் தொழில் செய்பவர்கள், இரும்பு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சிகள் உண்டாகும். இந்த ஆண்டு புதிய அற்புதங்கள் நிச்சயமாக நிகழப்போகிறது. இனி 1 முதல் 9 வரை தேதிகளில் பிறந்தவர்களுக்கும் என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று தனித்தனியாக பார்க்கலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications