• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிவெள்ளிக்கிழமை : தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 16 அம்மன்களுக்கு 1008 நெய் தீப வழிபாடு

தீபம் ஏற்றினால் தேவியின் அருள் கிட்டும். சகலவித மகிழ்ச்சி வீட்டில் ஏற்படும். வீட்டில் உள்ள பீடை, தோஷம் விலகும் பெயர், புகழ், கீர்த்தி வீட்டில் செல்வம் சேர்க்கை உண்டாகும். வறுமை நீங்கி சகல சந்தோஷம் ஏ
Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: ஆடி வெள்ளிக்கிழமைகளில் வாலாஜபேட்டை ஆரோக்கிய பீடத்தில் அம்பாளுக்கு 1008 நெய் தீபங்கள் தீபத்தில் துர்கை, சரஸ்வதி, லட்சமி என்ற மூன்று சக்தியும் அருள் புரிந்து இருப்பதால் அவள் நம்முடைய இருள் என்னும் மாயயை அகற்றுகின்றாள் தீப பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்கி உள்ளத்தின் இருளை நீக்கி மன அமைதி பெறலாம். மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும். ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

Aadi Friday 1008 gee lamp prayer at arokya peedam

ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள 16 அம்மன்களுக்கும் ஆடி வெள்ளிக்கிழமை நாட்களில் மட்டுமல்லாது ஆடி அமாவாசை. ஆடிப்பூரம், ஆடி பெருக்கு, வரலட்சுமி விரதம். நாக பஞ்சமி, கருட பஞ்சமி, போன்ற தினங்களில்.நெய் தீபம் வைத்து அந்த அந்த தெய்வங்களுக்கு. யாகங்கள், அபிஷேகங்கள் செய்து எலுமிச்சை மாலை மலர் மாலை,புடவை சாற்றி வழிபாடு நடைபெற உள்ளது.

Aadi Friday 1008 gee lamp prayer at arokya peedam

வியாபாரம் செய்யும் இடங்களில் விளக்கேற்றி வழிபட்டால் வறுமை நீங்கி வியாபாரம் பெருகும். தீபம் ஏற்றினால் தேவியின் அருள் கிட்டும்.
சகலவித மகிழ்ச்சி வீட்டில் ஏற்படும். வீட்டில் உள்ள பீடை, தோஷம் விலகும் பெயர், புகழ், கீர்த்தி வீட்டில் செல்வம் சேர்க்கை உண்டாகும். வறுமை நீங்கி சகல சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும் குடும்பத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தீரும்.

குலதெய்வத்தின் அருள் கிடைக்கும் நம் குலத்தை காத்து நன்மை தரும். நவக்கிரஹங்களை சாந்தப்படுத்தும் பாவங்கள், தொல்லைகள், துயரங்கள் நீங்கும். கடன் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறலாம். பங்காளி பகை, சண்டை, சச்சரவு, கிரகங்களின் தோஷம் நிவர்த்தியாகும். கல்வியில் தடை விலகும், செல்வம் பெருகும், திருமண தடை நீங்கள், வியாபாரத்தில் லாபம் பெருகும்.

Aadi Friday 1008 gee lamp prayer at arokya peedam

இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த தீப வழிபாட்டை ஆடி மாதத்தில் செய்து அம்பிகையின் அருளை பெற வேண்டி தன்வந்த்ரி பீடத்தில் ஸ்ரீ சாக்த தெய்வங்களான அருள்பாவித்து வருகின்ற ஸ்ரீ ஐஸ்வர்ய பிரத்யங்கிரா,ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி,ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி, ஸ்ரீ மரகதாம்பிகை,ஸ்ரீ பஞ்சமுக வாராஹி,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி, அன்னபூரணி, நவகன்னிகைகள், ஸப்த மாதாக்கள்,நாககன்னி, ஸ்ரீ ஆரோக்கிய லக்ஷ்மி, லக்ஷ்மி குபேரர், காயத்திரி தேவி, அனுசுயா தேவி, சரஸ்வதி தேவி,என்று 16 அம்மன்களுக்கும் ஆடி வெள்ளிக்கிழமை நாட்களில் மட்டுமல்லாது ஆடி அமாவாசை. ஆடிப்பூரம், ஆடி பெருக்கு, வரலட்சுமி விரதம். நாக பஞ்சமி, கருட பஞ்சமி, போன்ற தினங்களில்.நெய் தீபம் வைத்து அந்த அந்த தெய்வங்களுக்கு. யாகங்கள், அபிஷேகங்கள் செய்து எலுமிச்சை மாலை மலர் மாலை,புடவை சாற்றி வழிபாடு நடைபெற உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் : தடையை மீறி வழிபட்ட பக்தர்கள்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் : தடையை மீறி வழிபட்ட பக்தர்கள்

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் பொது மக்கள் யாரும் நேரில் கலந்து கொள்ள அனுமதியில்லை. இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.சங்கல்பம் செய்து கொள்ள விரும்புபவர்கள் மற்றும் மேலும் தகவல் வேண்டுபவர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. இராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203 என்ற எண்களில் தொடர்பு கொண்டு சங்கல்பம் செய்யலாம்.

English summary
Aadi Friday 1008 gee lamp prayer at dhanvantri arokya peedam in Walajapet, Ranipettai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X