ஐப்பசி விசு: குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை
ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
தென்காசி: சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையான குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். விசு திருவிழாவை முன்னிட்டு குற்றாலநாத சுவாமி கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.

திரிகூடநாதர் குற்றாலஎன்றும் நாதர் என்றும் அழைக்கப்படும் இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குழல்வாய் மொழியம்மை சந்நிதியும் சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகார வலமாக வரும்போது அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பராசக்தி பீடம் உள்ளது.
இத்தலத்திலுள்ள தீர்த்தங்களில் வடவருவியும், தேனருவி என்ற சிவமதுகங்கையும் சிறப்புடையவை. வடவருவியில் மூழ்கினாரது பாவம் கழுநீராகப் பிரிந்து ஓடும் என்பது இத்தல ஐதீகம். இத்தலத்தின் தலவிருட்சமாக பலாமரம் உள்ளது. இந்த பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், லிங்கத்தின் வடிவில் அமைந்திருக்கும்.

குற்றாலநாதர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. குற்றாலநாதர் கோவிலில் இருந்து சிறிது தொலைவில் தனிக்கோவிலாக அமைந்திருக்கிறது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் இருக்க நடுவே சித்திர சபை அமைந்திருக்கிறது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபையின் மேற்கூரை சிதம்பரம் நடராஜர் கோவிலின் கூரையை நினைவூட்டுகிறது. இந்த சித்திர சபையில் இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன.
இந்த கூடத்தின் நடுவே ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து எல்லோருக்கும் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன.
சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் அனைத்தும் சித்திரங்களாக அழகுடன் தீட்டப்பட்டிருகின்றன. கிழக்கு நோக்கியுள்ள இந்த சித்திர சபையின் உள்ளே இருக்கும் நடராஜ சிற்பம் தெற்கு நோக்கியுள்ளது.
குற்றால நாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசு, ஐப்பசி விசு திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள், தாண்டவ தீபாராதனை நடைபெற்று வருகிறது.

கொரோனா காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெறுகிறது. திருவிழாவின் 7ஆம் நாளான 15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சிவப்பு சாத்தியும், மாலை 7 மணிக்கு வெள்ளை சாத்தி கோலத்திலும் நடராஜர் எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 8ஆம் நாளான 16ஆம் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் வைத்து நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனை நடைபெற்றது. 18ஆம் தேதி ஐப்பசி விசு திருவிழா தீர்த்தவாரியுடன் திருவிழா முடிவடைகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications