For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆனி திருமஞ்சனம் - நடராஜர் அபிஷேகத்தை தரிசித்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்

சிதம்பரம் என்றதும் நம் நினைவிற்கு வருவது நடராஜப் பெருமான் தான். சிவாலயங்களில் நடராஜப் பெருமான், நடனக் கோலத்தில் காட்சி தருவார்.

Google Oneindia Tamil News

சிதம்பரம்: அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்த பின்னரும் ஆனி மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வெப்பத்தில் தகிக்கும் நடராஜர் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சிவனாரின் அனைத்துத் தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம், முக்கியமான வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்

மகா அபிஷேகத்தை திருமஞ்சனம் என்றும் சொல்லலாம். நமக்கு ஒரு வருடம். அதுவே தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி, காலைப் பொழுது மாசி, உச்சிக்காலம் சித்திரை, மாலைப்பொழுது ஆனி, இரவுப் பொழுது ஆவணி, அர்த்த ஜாமம் புரட்டாசி என்று கணக்கிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில், சந்தியா காலங்களான ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டிற்கு உகந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன.

நமக்கு ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒரு நாள். ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும். ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகமும், புராட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்
மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம். இந்த அபிஷேகங்கள் நடைபெறும் போது நடராஜரை தரிசனம் செய்து குடும்பத்தோடு வழிபடுவது மிகவும் நல்லது விசேஷமானது.

தீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்கதீராத கடனை தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் - இந்த நேரத்தில் பணத்தை திருப்பி கொடுங்க

சிதம்பரம் ஆனி திருமஞ்சன விழா

சிதம்பரம் ஆனி திருமஞ்சன விழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனத் திருவிழாவும் சிறப்பாக பத்து நாட்கள் நடைபெறும். பங்குனி உத்திரத்தைப் போலவே ஆனியில் வரும் உத்திரமும் விசேஷம். இந்த ஆனி உத்திரமே, ஆடல்வல்லானுக்கான விழாவாக, ஆனித் திருமஞ்சன வைபவமாகப் போற்றப்படுகிறது. ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனத் திருவிழா இந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்க இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மகா அபிஷேகம்

மகா அபிஷேகம்

ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில் தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழா. ஈசனின் திருநட்சத்திரம் திருவாதிரை. மிக உஷ்ணமான நட்சத்திரம் இது. தவிர, ஆலகாலம் உண்ட நீலகண்டன் அல்லவா ஈசன். சாம்பல் தரித்தவன். அக்னியை ஏந்திக் கொண்டிருப்பவன். ஆக மொத்தம் உஷ்ணாதிக்கத்துடன் இருப்பவன். எனவே, அவனுக்குக் குளிரக் குளிர அபிஷேகம் செய்யச் சொல்கிறது ஆகம விதி. இதனால்தான் சிவபெருமானை அபிஷேகப் பிரியன் என்று கொண்டாடுகிறோம். பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கின்றனர்.

நடராஜர் அபிஷேகம்

நடராஜர் அபிஷேகம்

திருமஞ்சனம் என்றால் மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு என்று பொருள். சாதாரணமாக குளியலுக்கு காரகர் நீர் ராசி அதிபதியான சந்திரன் ஆகும். ஆனால் திருமஞ்சனம் என்பது பலவித வாசனை பொருட்கள் மற்றும் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படுவதால் திருமஞ்சனத்தின் காரகர் சுக்கிரன்தான்.

திருமண வரம் தரும் ஆனி திருமஞ்சனம்

திருமண வரம் தரும் ஆனி திருமஞ்சனம்

நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும் தம்பதிகளுக்கு சுகமான வாழ்வும் கிடைப்பதாகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்றும் ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், வளமும் கூடும் என்பது நம்பிக்கை.

நடராஜர்

நடராஜர்

ஆனியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். வைகாசியில் அக்னி நட்சத்திர காலம் முடிந்து, வெப்பத்தில் தகிக்கும் திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக, ஆனியில் நடைபெறும் திருமஞ்சனத் திருவிழாவைத் துவக்கி வைத்தவர் யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி மகரிஷி.

நடராஜரின் நடனம்

நடராஜரின் நடனம்

சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவம், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலையும் உணர்த்துகிறது. சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது. இதேபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் கொண்டது. இந்த இரண்டு பெருமான்களின் நடனத்தையும் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் தரிசிப்பதாக ஐதீகம். ஸ்ரீநடராஜரையும், அன்னை ஸ்ரீசிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்வார்கள். அங்கே அவருக்கு திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகங்கள் நடைபெறும். பிறகு இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சியைத் தரிசிப்பார்கள் பக்தர்கள். ஆனந்த நடனம் ஆடியபடியே, சித்சபையில் எழுந்தருள்வார்கள். இதைக் காணக் கண்கோடி வேண்டும்!

English summary
Aani Uthiram is an auspicious day in the Tamil Month of Aani and is dedicated to Lord Nataraja . Aani Uthiram 2020 date is June 28. The festival is also known as Aani Thirumanjanam and is observed on the Uthiram Nakshatra day in Aani Masam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X