• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய் மாமன், கல்வி செல்வம் உங்களுக்கு எப்படி? - புதன் எங்க இருக்கார்?

|

சென்னை: தாய்மாமன் உறவிற்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரண்டிற்கும் புதன்தான் காரகம். புதனின் அதிதேவதையும் தாய்மாமனை குறிக்கும் தெய்வமும் மகா விஷ்ணு. தாய்மாமன் மடியில் அமர்ந்து மொட்டை போட, காது குத்தும் யோகம் அனைவருக்கும் அமைவதில்லை. புதன் ஒருவரின் ஜாதகத்தில் சரியாக இருந்தால் மாமன் உறவு சரியாக அமையும்.

புதன் நக்கோள்களில் மிகவும் சிறிய கிரகம். புதனும் சூரியனும் ஒருவரின் ஜாதகத்தில் சேர்க்கைப் பெற்றிருப்பது புதாதித்ய யோகம். இதனால் கல்வியில் மேன்மை, பெரியவர்களின் ஆசி, வியாபாரத்தில் ஈடுபாடு, அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். புதனும் ஆதித்தன் என்னும் சூரியனும் இணைந்து லக்கினத்திற்கு 1-4-8-ல் இருந்தால் புதாதித்ய யோகம் அமையும்.

Budha Aditya Yoga in Jathagam

புதன் பகவான் தாய் மாமன் மற்றும் உறவினர்களுக்கு காரகன்.விஞ்ஞானி ,மருத்துவ வல்லுநர் ,மந்திரவாதி ,ஜோதிடர் ஆவதற்கு புதன் பகவானே காரணம். புதன் பகவான் வாக்கு வன்மை அதாவது பேச்சு திறமை கொடுப்பார். மனிதனின் தோல் நோய்கள் வர அதிகாரம் படைத்தவர் புதன் பகவான்.

ஒரு ஜாதகத்தில் தாய்மாமனை குறிக்கும் பாவம் ஆறாம் பாவமாகும். ஆறாம் பாவத்ததின் நிலையைக்கொண்டு தாய்மாமனை பற்றியும் அவரின் ஆதரவை பற்றியும் அறிந்துக்கொள்ள இயலும் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். சகோதரியின் குழந்தைக்கு எந்த பிரச்சனை என்றாலும் தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என நினைத்து குழந்தையின் தாய்மாமா ஓடி ஓடி உதவி செய்வதால்தான் ஒருவருக்கு ஆறாம்பாவம் வலுக்க கூடாது என்கிறார்கள்.

புதன் வலிமை பெற்றவர் முக்கியப் பிரமுகராக விளங்குவார். அரசாட்சி, பொது மக்கள் தொடர்பு மற்றையோரைக் கவருகின்ற ஆற்றலைப் பெறுவார்.மனோசக்தி புத்திக் கூர்மையாகவும், சிறந்த பேச்சாற்றல், இரட்டை அர்த்தம் நிறைந்த சொற்களைப் பிரயோகிப் பவராகவும் தடையில்லாமல் பேசுவராகவும்.நகைச்சுவைப் பேசுவர், பிறர் செய்வதை அப்டியே உடன் செய்வர்கள் .

நவ கிரகங்களில் புதன் மிதுனத்தில் ஆட்சியும், கன்னியில் ஆட்சி உச்சமும் பெறுகிறார். ரிஷபம், கடக ராசிகள் நட்பு ராசிகளாகும். மீனத்தில் நீசம் பெறுகிறார். புதனுக்கு சூரியன், சுக்கிரன் இருவரும் நண்பர்கள். செவ்வாய், சனி சமமானவர்கள். சந்திரன் பகையாவார். ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்கு புதன் அதிபதியாவார். புதன் திசை மொத்தம் 17 ஆண்டுகள் நடைபெறும்.

Budha Aditya Yoga in Jathagam

சூரியனுடன் குறிப்பிட்ட பாகையில் புதன் இணைந்திருக்கும் போது அஸ்தமனம் ஏற்படும். அஸ்தங்கத் கதியில் இருக்கும் புதன் நற்பலன்கள் தருவர் என்றாலும் பாதிப்பு இருக்காது. சூரியனுக்கு அருகில் செல்லும் அனைத்துக் கிரகங்களும் தனது சுய இயல்பையும், வலிமையையும் இழக்கும் நிலையில் புதனுக்கு மட்டுமே அந்த தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் உத்தர காலாம்ருதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதனுக்கு வக்கிரகதி ஏற்படுவதுண்டு வக்கிரத்தில் உள்ள கிரகங்கள் உச்ச பலத்தை தரும் என்று ஒரு சாராரும் வக்கிரகதியில் உள்ள பாபக் கிரகங்களுக்கு உச்ச பலம் ஏற்படும். என்று மற்றோரு சாராரும் கூறுவர் புதன் வக்கிரகதியில் இருந்தால் மனக்குழப்பம் ஏற்படுத்துவார்.

புதனும் சூரியனும் இணைந்தால் ஜோதிடத்தில் வல்லுனராவர், வானவியல், வேதசாஸ்திரம், ஞானம் உண்டாகும். சிறந்த விஞ்ஞானியாகவும், பொறியாளர், சட்டவல்லுனர், அனைவரும் பாராட்டுவார்கள். லக்கினத்திற்கு 1-4-8-ல் சூரியனும்,புதனும் இணைந்து 9-10-ஆம் அதிபதிகள் பார்த்தால் அந்த ஜாதகர் உலகில் புகழ் பெற்று பெருஞ்செல்வந்தனாக இருப்பர்கள். அந்த ஜாதகர் செல்வாக்கு, சொல்வாக்கு பெற்றவராக திகழ்வார்.

லக்கினத்தில் சூரியனும் புதனும் இருந்தால் அறிவுடையவர்கள், அழகாய் பேசுபவர்கள் உடல் பலமுடன் இருப்பார்கள், வீரன், தீர்க்கமான சிந்தனையுடையவர்கள் தீர்க்கயுள் உள்ளவர்கள். விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டில் நான்கு ஒன்றில் வளையக் கூடின் மன்னவனாம்

புதனும் சூரியனும் 1-4-8-ல் இணைந்திருந்தால் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை அமையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது. என்பதால் இந்த தோஷமுடையவர் காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவ தூதப் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்க தாய்மாமனுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

ஜாதகத்தில் புதன் சரியான நிலையில் அமையாதவர்கள், புதன் கிழமை விரதம் இருக்க தாய்மாமன் உறவு நன்றாக அமையும். திருவெண்காட்டில்

புத்திக்கும் வித்தைக்கும் காரகனாகிய புதன் தனி சன்னதி கொண்டு வீற்றிருக்கிறார். இந்த தலம் சீர்காழியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புதன் ஈஸ்வரர்களை பூஜித்து வணங்கி துதித்து நவகோள்களில் தானம் இடம் பெற்ற இடங்களில் மற்றொன்று மதுரை. மதுரை மீனாட்சி மரகத நிறமாய் திகழ்கிறாள். அன்னை மீனாட்சியை வணங்க அறிவாற்றல் அதிகரிக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Budha Aditya yoga gives tremendous and miraculous success to the native; be it name, fame, wisdom, wealth, administrative qualities, intelligence, and communication anything. Genuine combination makes the person extraordinary and bestows him with the characteristics of both the planets.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more