For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சனி பெயர்ச்சி 2020: சந்திர தசையில் ஏழரை சனி, அஷ்டம சனி பாதிப்பு - பரிகாரம் என்ன

சந்திரன் மனோ காரகன் சந்திரன் பலம் இழந்து ஜாதகத்தில் இருக்க , அவருக்கு சந்திர தசை நடக்கும்போது சிலருக்கு புத்தியே பேதலித்து விடுகிறது. எதையோ பறிகொடுத்தவர் போலவே இருப்பார்.

Google Oneindia Tamil News

சென்னை: நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான் ஆவார். சந்திர பகவான் மனோகாரகன். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கும் காரகன் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுப பலன்களையும், தேய்பிறை சந்திரன் பாதக பலன்களையும் தருகிறது. ஒருவருக்கு சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். சந்திர திசையில் ஏழரை நாட்டு சனி காலமாகட்டும் அல்லது சந்திர திசை அஷ்டம சனியாகட்டும் மரணபயத்தை காட்டி விடுவார் சந்திரன். சந்திர தசையால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கேற்ப பரிகாரம் செய்யலாம்.

சந்திரன், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, மிதுனம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார். கும்பம், மகரம், ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சுமாரான பலன்களையே கொடுக்கும். சந்திர தசை - சனி புக்தியோ அல்லது சனி தசை சந்திர புக்தி நடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். மகர லக்னம், கும்ப லக்னகாரர்களுக்கு சந்திரதசை சுமாராகவே இருக்கும் கவனம் தேவை. அதே போல சுக்கிரன் சந்திரன் பகை சந்திரதசை சுக்கிர புக்தி, சுக்கிர திசை சந்திர புக்தி காலங்களில் நன்மை நடைபெறாது. சந்திரனுக்கு மிகவும் பிடித்தமானவர் சூரியன், செவ்வாய், குரு பிடித்தமான கிரகம். சந்திரனுக்கு புதனை பிடிக்கும். ஆனால் புதனுக்கு சந்திரன் பிடிக்காது.

யார் யாருக்கெல்லாம், சந்திர தசை நடக்கும்போது ஏழரை சனி அல்லது அஷ்டம சனி , சேர்ந்து வருகிறதோ அவர்களுக்கு , சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்கள் ஏற்படுகின்றன. குடும்பம், மனைவி, குழந்தைகள் , நண்பர்கள் என எந்த இடத்திலும் உதவி கிடைக்காத அளவுக்கு, அல்லது அவர்களிடம் ஏதாவது தகராறு ஏற்பட்டு தற்கொலை செய்யும் அளவுக்கு விரக்தி எண்ணம் ஏற்படுகிறது.

மனோகாரகன் சந்திரன்

மனோகாரகன் சந்திரன்

சந்திரன் மனோ காரகன் சந்திரன் பலம் இழந்து ஜாதகத்தில் இருக்க , அவருக்கு சந்திர தசை நடக்கும்போது சிலருக்கு புத்தியே பேதலித்து விடுகிறது. எதையோ பறிகொடுத்தவர் போலவே இருப்பார். மனோகாரகன் சந்திரன், அம்மாவை பற்றியும் ஒருவரின் மனநிலையை பற்றி அறிவதற்கும் சந்திரன் உணர்த்தும். சந்திரன் அமரும் இடத்தை வைத்துதான் ராசியை கணக்கிடுறோம். சந்திரன் அமர்ந்திருக்கும் நட்சத்திரத்தை வைத்து ராசிகளை கணக்கிறோம்.

பாசமான பிள்ளைகள்

பாசமான பிள்ளைகள்

ஜோதிடத்தில் சந்திரன் முக்கியமான கிரகம். சூரியன் அப்பா என்றால் சந்திரன் அம்மா இருவரும் நல்ல நிலையில் இருக்க வேண்டியது ஜோதிடத்திற்கு அவசியமானது. சந்திரன் இருக்கும் நிலையை வைத்து அம்மாவின் பாசம், அம்மாவின் சொத்துக்கள் அவரது உடல் நலம் பற்றியவைகளை அறியலாம். சந்திரன் ரிஷபம், கடகம் ராசியில் பிறந்தவர்கள் பாசமாக இருப்பார்கள். அம்மாவின் மீது பாசத்தை பொழிவார்கள்.

சந்திரனுக்கு பிடித்த கிரகங்கள்

சந்திரனுக்கு பிடித்த கிரகங்கள்

சந்திரன், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, மிதுனம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார். கும்பம், மகரம், ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சுமாரான பலன்களையே கொடுக்கும். சந்திர தசை - சனி புக்தியோ அல்லது சனி தசை சந்திர புக்தி நடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

சந்திரன் பாதிக்கும்

சந்திரன் பாதிக்கும்

மகர லக்னம், கும்ப லக்னகாரர்களுக்கு சந்திரதசை சுமாராகவே இருக்கும் கவனம் தேவை. அதே போல சுக்கிரன் சந்திரன் பகை சந்திரதசை சுக்கிர புக்தி, சுக்கிர திசை சந்திர புக்தி காலங்களில் நன்மை நடைபெறாது. சந்திரனுக்கு மிகவும் பிடித்தமானவர் சூரியன், செவ்வாய், குரு பிடித்தமான கிரகம். சந்திரனுக்கு புதனை பிடிக்கும். ஆனால் புதனுக்கு சந்திரன் பிடிக்காது.

சந்திரனால் பாதிப்பு

சந்திரனால் பாதிப்பு

ஜெனன காலத்தில் சந்திர பகவான் தேய்பிறை சந்திரனாக அமையப் பெற்று நீசம் பகையாகி பாவிகள் சேர்க்கை பார்வை பெற்று 6, 8, 12ல் மறைந்து காணப்பட்டாலும் தசா நாதனுக்கு 6, 8, 12ல் காணப்பட்டாலும், சந்திரன் தாய் ஸ்தானமான 4ல் இருந்து திசை நடைபெற்றாலும் தாய்க்கு தோஷமும் மரணத்திற்கு ஒப்பான கண்டமும் உண்டாகும். கலகம், பண விரயம், ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படத் தடை மனக்குழப்பம் சித்த பிரம்மை உண்டாகும்.

சாதகமான பலன்கள்

சாதகமான பலன்கள்

சந்திர பகவானின் தசையானது சில லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலப் பலனை அதிகம் தரும். குறிப்பாக சந்திரனுக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாயின் லக்னமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் அதிபதி என்பதால் அனுகூலமான பலன்களை தருவார். விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதி என்பதால் அனுகூலப்பலனை தரமாட்டார். தனுசு லக்னத்திற்கு 8ம் அதிபதி சந்திரன் என்பதால் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை தருவார். கடக லக்னத்திற்கு சந்திரன் லக்னாதிபதி என்பதால் கடக ராசிக்கு சந்திர தசை மிகவும் சாதகமான பலனை உண்டாகும். சிம்ம லக்னத்திற்கு சந்திரன் 12ம் அதிபதி என்றாலும் அவர் லக்னாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் ஓரளவுக்கு நற்பலனை சந்திரன் தசை காலத்தில் பெறலாம்.

ரிஷபத்திற்கு பாதிப்பு

ரிஷபத்திற்கு பாதிப்பு

மிதுனத்திற்கு 2 ம் அதிபதி என்பதால் ஓரளவுக்கு சாதகப் பலனை தருவார். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதி சந்திரன் என்பதால் சந்திர திசை சாதகமான பலன்களை கன்னி ராசியினருக்கு அதிகம் தரும். ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் அதிபதி என்பதால் ஜாதகத்தில் சந்திரன் அமையும் இடத்தைப் பொருத்து சாதக பலனை உண்டாக்குவார். சந்திரன் பொதுவாக ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு நற்பலன்களை தருவது இல்லை. துலா லக்னத்திற்கு 10ம் அதிபதியாக சந்திரன் வருவதால் சந்திர தசை நடைபெறும் போது தொழில், வியாபாரங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

சந்திரனுக்கு நட்பு

சந்திரனுக்கு நட்பு

மகர லக்னத்திற்கு சந்திரன் 7ம் அதிபதி என்பதால் வாழ்வில் சற்று ஏற்றத் தாழ்வினை ஏற்படுத்துவார். கும்ப லக்னத்திற்கு சந்திரன் 6ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் போது உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். மீன லக்னத்திற்கு சந்திரன் 5ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் காலத்தில் மிகவும் சாதகமான பலன்கள் உண்டாகும்.

தன லாபம் உண்டாகும்

தன லாபம் உண்டாகும்

சந்திரன் லக்னத்தில் அமையப் பெற்று தசை நடைபெற்றால் சிறப்பான ஆரோக்கியம் உண்டாகும் நல்ல சுவையான உணவு வகைகளை சாப்பிடுவார்கள். சந்திரன் லக்னத்திற்கு 2ல் அமையப் பெற்று தசை நடைபெற்றால் அதிகமான பண வரவுகள், சுகமான குடும்ப வாழ்வு, சொன்ன சொல்லை காப்பாற்றும் அமைப்பு உண்டாகும். சந்திரன் லக்னத்திற்கு 3ல் அமையப் பெற்று திசை நடைபெற்றால் நல்ல சுகம், தைரியம் உண்டாகும். சந்திரன் லக்னத்திற்கு 4ல் அமையப் பெற்று திசை நடைபெற்றால் வீடு, பூமி, மனை வண்டி வாகனம் அதிகமாகும். தன லாபமும் கிட்டும்.

தர்ம காரியங்கள்

தர்ம காரியங்கள்

சந்திரன் 5ல் இருந்து திசை நடைபெற்றால் சுபகாரியம் நடைபெறும். சந்திரன் 6ல் இருந்து திசை நடைபெற்றால் வாத நோய், தாயுடன் கோபப்படும் நிலை, புத்தியில் தடுமாற்றம், தாய்க்கு கண்டம் போன்றவைகள் உண்டாகும். சந்திரன் 7ல் இருந்து திசை நடைபெற்றால் ஆலயங்களுக்கு சென்று தெய்வ தரிசனம் செய்யும் அமைப்பு திருமண யோகம் அமையும். சந்திரன் 8ல் இருந்து திசை நடைபெற்றால் உடல்நலம் பாதிப்படையும் சந்திரன் 9ல் இருந்து திசை நடைபெற்றால் அதிகமான தர்ம காரியங்களை செய்வார்கள் சந்திரன் 10ல் இருந்து திசை நடைபெற்றால் தொழிலில் மேன்மைகளும் லாபமும் அதிகரிக்கும். சந்திரன் 11ல் இருந்து திசை நடைபெற்றால் அதிகமான தன லாபம் கிடைக்கும். சந்திரன் 12ல் இருந்து தசை செய்யும் தொழிலில் காரியங்களில் தடை, பெண்களுக்கு உடல் உபாதைகள், வண்டி வாகனம் பழுது படும் சூழ்நிலை, வீடு பூமி மனை வழியில் சாதகமற்ற பலனும் உண்டாகும்.

எதிர்பாராத விபத்துகள்

எதிர்பாராத விபத்துகள்

ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் லக்னத்திற்கு கேந்திர கோணங்களிலும் 3, 6, 11ம் இடங்களிலும் அமையப் பெற்று உச்சம், ஆட்சி, நட்பு போன்ற பலம் பெற்றுக் காணப்பட்டாலும் உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை உதவி உண்டாகும். எடுக்கின்ற காரியங்களில் வெற்றிமேல் வெற்றி ஏற்படும். அதே நேரம் சனி பகவான் 8, 12,ம் இடங்களில், இருந்து புக்தி நடந்தாலும், தசா நாதனுக்கு 8, 12ல் இருந்து புக்தி நடைபெற்றாலும் சனி பகவான் நீசம் பகை பெற்று பாவ கிரக சேர்க்கை, பார்வை பெற்று திசா நடைபெற்றாலும் உடல்நிலை பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களில் சிக்க நேரிடும்.

அஷ்டமத்து சனி பாதிப்புகள்

அஷ்டமத்து சனி பாதிப்புகள்

சந்திர திசையின் போது ஏழரை சனியோ, அஷ்டமத்து சனியோ நடந்தால் விபத்துகள் ஏற்படும். பெண்களின் மூலம் பெயர் கெடுதல் அவமானங்கள் ஏற்படும். ஜாதகத்தில் தேய் பிறை சந்திரனாக இருந்தாலும் வளர் பிறை சந்திரனாக இருந்தாலும் சந்திரன் எந்த ராசியில் நின்றாலும் அதனுடன் ஏழரை நாட்டு சனி நடந்தால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

பாரிகாரங்கள்

பாரிகாரங்கள்

சந்திர தசை நடைபெறும் காலங்களில் சந்திரன் பலமிழந்து பாவிகள் சேர்க்கை பார்வை பெற்று தசை நடைபெற்றால் திருப்பதி ஸ்ரீவெங்கடாசலபதியை வழிபாடு செய்வது நல்லது, பச்சரிசியை தானமாக வழங்கலாம். சோமவார விரதம் மேற்கொள்வதாலும் தீமைகள் நீங்கி நற்பலன்களை ஏற்படுத்தும். திங்களூரில் உள்ள சந்திர பரிகார தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வரலாம். கார்த்திகை சோமவார விரதம் இருந்து மாலையில் சங்காபிஷேகம் தரிசனம் செய்யலாம். சனி பகவான் சாதகமற்று அமையப் பெற்றால் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு செய்தல் சனி விரதம், சனீஸ்வரனுக்கு விளக்கு ஏற்றுவதும் காக்கைக்கு சாதம் வைப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது, திருநள்ளாறு சென்று நளன் குளத்தில் நீராடி வருவது போன்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறையும்.

English summary
Learn about Chandra Mahadasha Sani Bhukthi good and bad Effects One may have bad addictions and pain due to gastric problem.The weak Moon Mahadasha can make the person devoid of friends and maternal happiness
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X