For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா வைரஸ் நுரையீரலை தாக்கி மனிதர்களின் சுவாசத்தை நிறுத்தும் - பரிகாரங்கள்

கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தின் செல்களை தாக்குகிறது. ஜலதோஷம், தும்மல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஆகியவைதான் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி. தொடர்ந்து நுரையீரலை தாக்கும் வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படு

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனா எதையோ மறைக்கிறது.. இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை !

    சென்னை: நுரையீரலை பாதிக்கும் சளி காய்ச்சல் சாதாரணமாக மழை காலங்களில் வருவதுதான். ஆனால் சீனாவின் பல மாகாணங்களை அலற வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தின் செல்களை தாக்கி உயிரை பறிக்கிறது. சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 56 ஆக அதிகரித்துள்ளது. 2000 பேர் வரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாகவும், அவர்களில் 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் சில ஜோதிட ரீதியான காரணங்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

    ஜலதோஷம், தும்மல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஆகியவைதான் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி. தொடர்ந்து நுரையீரலை தாக்கும் வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கிறது. நுரையீரல் உள்பட சுவாச மண்டலத்தின் செல்களிலும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிக்க முடியாமல் மரணம் நிகழ்கிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் விரைவாக இறக்க நேரிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை பாதிக்கும் இந்த கொரோனா எதுவும் செய்வதில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    காற்றில் பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் வுகான் மாகாணத்திலிருந்து சீனாவின் பிற மாகாணங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருவதாகவும் இதுவரை 14 நகரங்களில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மேலும் பரவுவதைத் தடுக்க வுகான் உட்படப் பல நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அனைத்து போக்குவரத்துகளும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. வுகான் மகாணத்தை விட்டு வெளியே வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

    எலி புத்தாண்டில் தாக்கிய கொரோனா

    எலி புத்தாண்டில் தாக்கிய கொரோனா

    சீனாவில் எலி புத்தாண்டு பிறந்துள்ளது ஆனாலும் கொண்டாட்டங்கள் எதுமின்றி கவலையடைந்துள்ளனர் சீனர்கள் காரணம் கொரோனா வைரஸ் பாதிப்புதான். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பரவிய சார்ஸ் வைரஸ் பாதிப்புக்குப் பிறகு இப்போதுதான் சீனா மிகப் பெரிய வைரஸ் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த கொரோனா வைரஸானது விலங்குகளிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதுவரை வுஹான் மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சார்ஸ் வைரஸை பொறுத்தவரை வவ்வாலிலிருந்து அது மனிதர்களுக்குப் பரவியது. அதே போலத்தான் இப்போதும் வவ்வாலிலிருந்து இந்த கொரானா வைரஸ் பரவியிருப்பதாக சொல்கிறார்கள்.

    கொரோனோவின் தாக்குதல்

    கொரோனோவின் தாக்குதல்

    வவ்வாலிலிருந்து பாம்புகளுக்குப் பரவி பாம்புகள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருப்பதாக கூறுகின்றனர். சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டுமே கொரோனா வைரஸ் என்ற குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் வகையாகும். இரண்டுமே விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவிய வைரஸுமாகும். இறந்து போன நாய்கள், கோழி, பன்றி, பாம்பு உள்ளிட்டவற்றின் உடலிலிருந்து இவை பரவுகின்றன. இங்கிருந்து மனிதர்களிடம் தாவுவது இந்த வைரஸ்களுக்கு மிகவும் சுலபமானதும் கூட.

    சுவாச பிரச்சினை

    சுவாச பிரச்சினை

    சீனா முழுவதும் 880 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பாதிக்கும் அதிகமானோர் 80 வயதை தாண்டியவர்கள் என சீன அரசு தெரிவித்துள்ளது. 2019-nCoV வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது. சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

    உயிரை குடிக்கும் கொரோனா

    உயிரை குடிக்கும் கொரோனா

    கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தின் செல்களை தாக்குகிறது. ஜலதோஷம், தும்மல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஆகியவைதான் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி. தொடர்ந்து நுரையீரலை தாக்கும் வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கிறது. நுரையீரல் உள்பட சுவாச மண்டலத்தின் செல்களிலும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிக்க முடியாமல் மரணம் நிகழ்கிறது.

    மருந்து இல்லை

    மருந்து இல்லை

    இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை. இந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும். மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    அவசர நிலை

    அவசர நிலை

    சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்கா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளும் அச்சத்திற்குள்ளாகி உள்ளன. கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் மருத்துவ அவசரநிலையை அறிவிப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் பரிசீலித்து வருகிறது. பன்றிக் காய்ச்சல், எபோலா வைரஸ் பரவிய காலங்களில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டது

    ஜோதிட ரீதியான காரணங்கள்

    ஜோதிட ரீதியான காரணங்கள்

    ஒருவர் ஜாதகத்தில் சூரியன் நீர் ராசிகளில் நின்று பலமிழக்கும்போது சூரியன் பலமிழந்து நீச புதன் சேர்க்கை பெறும்போது காய்ச்சல் சளி தொந்தரவுகள் ஏற்படும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. தொண்டை மற்றும் நுரையீரலின் காரக கிரஹமான புதன் ஒரு ஜாதகத்தில் 6 அல்லது 8 அல்லது 12ஆம் பாவ தொடர்புகள், செவ்வாய், சனி, ராகு கேதுவுடன் சேர்ந்து பலமிழந்து நிற்பது போன்றவை ஜாதகருக்கு நுரையீரல் தொற்றை ஏற்படுத்துகிறது.

    சுவாசக்கோளாறுக்கு காரணங்கள்

    சுவாசக்கோளாறுக்கு காரணங்கள்

    காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் 6 அல்லது 8 அல்லது 12 தொடர்புகள், சனி, ராகு, கேது தொடர்புகள் பெறும்போது மூச்சுகோளாறுகள், சுவாச உறுப்பில் பாதிப்பு ஏற்படுகின்றது. நுரையீரலின் காரகரான புதனுடன் சனி தனித்தோ அல்லது கபகிரஹங்களான சந்திரன் மற்றும் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று நிற்கும் போது தொண்டையில் கிருமி தொற்று, சளி மற்றும் நிமோனியாவை ஏற்படுத்துகிறது.
    கால புருஷனுக்கு இதயத்தை குறிக்கும் வீடு நான்காம் பாவம் எனப்படும் கடக ராசி. கடக ராசி மற்றும் அதன் அதிபதியான சந்திரன் அசுபத்தன்மை பெற்று புதனுடன் தொடர்பு கொள்ளும்போது நிமோனியா காய்ச்சல் ஏற்படும் சாத்திய கூறுகள் உள்ளதாக மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

    துளசி, தூதுவளை கசாயம்

    துளசி, தூதுவளை கசாயம்

    செவ்வாயின் காரகம் நிறைந்த துளசியில் செய்த மருந்துகள், தூதுவளை, துளசி, பனங்கற்கண்டு சேர்ந்த கசாயம் தொண்டை நோய் மற்றும் இருமலுக்கு சிறந்த பலனளிக்கும். நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் விரைவாக இறக்க நேரிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை பாதிக்கும் இந்த கொரோனா எதுவும் செய்வதில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    தன்வந்திரி பகவான்

    தன்வந்திரி பகவான்

    நோய் ஏற்பட்டவரின் அருகில் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுபடை, சுதர்ஸனாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி நரசிம்ம மந்த்ர ராஜ பத ஸ்லோகம் பாராயணம் செய்வது நன்மை தரும். எனவேதான் நம் உடலில் ஏற்படும் நோய் என்னும் அசுரனை சம்ஹாரம் செய்ய நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து காக்கிறார் தமிழ் கடவுள் முருகன். சூரிய பகவானுக்கான ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யலாம். வைட்டமின் ஏ நிறைந்த சத்தான உணவுகளை சாப்பிடலாம்.
    புதன் மற்றும் விஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி பகவானை புதன் கிழமைகளில் புதன் ஹோரையில் வணங்கி வருவதன் மூலம் பாதிப்புகளை தடுக்கலாம் என்கின்றனர் ஜோதிடர்கள்.

    English summary
    A coronavirus is a kind of common virus that causes an infection in your nose, sinuses, or upper throat. Most coronaviruses are not dangerous.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X