For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெங்கு காய்ச்சலா? கவலை வேண்டாம்! வேப்பிலைக்காரி சமயபுரத்தாள் கைவிடமாட்டாள்!

By Staff
Google Oneindia Tamil News

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

டெங்கு காய்ச்சல் என்பது மிக மோசமான டெங்கு வைரசால் , கொசுவின் மூலமாக பரவக் கூடியது! இந்த காய்ச்சல் வந்தால் தோன்றும் முதல் அறிகுறிகள் , தலைவலி , கை , கால் மற்றும் உடம்பு வலி ,மற்றும் மிக கடுமையான காய்ச்சல்! இக்காய்ச்சல் வந்த சிலருக்கு , தோலில் ஆங்காங்கே, தட்டம்மை போது வரும் தடிப்புகள் போல தடிப்புகள் உண்டாகும். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால் , மிக கொடூரமான , இரத்தபெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலாக மாறி ,உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும்! முறையாக நோயாளிகளை , கவனிக்காத பட்சத்தில், இரத்தபெருக்கு உண்டாகும்! இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை , மிக குறைந்து போகும்.

ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர். ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:

டெங்கு காய்ச்சலின் போது ஒரேயடியாக ஏற்படும் கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் பின்புறக் கண்களில் வலி, மூட்டுக்களிலும் தசைகளிலும் வலி என்பன பெரும்பாலும் ஏற்படுவதுடன் சில நோயாளர்களுக்கு சிவப்பு நிற பரந்துபட்ட தன்மையில் கொப்புளங்கள் மற்றும் சில வேளைகளில் குருதி கசியும் நிலைமைகள்

பருவமழை தொடங்கிவிட்டதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்க ஆரம்பித்ததும் கொசுவின் உற்பத்தி பெருகி வருகிறது. இதன் மூலமாக டெங்கு பாதிப்பு அதிக அளவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை தொடர்ந்து எச்சரித்துவருகிறது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நாமும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியமாகும். டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பிக்க இரவில் தூங்குவதற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை நமது முழங்காலில் இருந்து பாதம் வரை தடவிக்கொள்வது நல்லது.

பொதுவாக , டெங்கு காய்ச்சலால் அவதி படுபவருக்கு , மருந்து என்று எதுவும் கிடையாது! மிதமான டெங்கு காய்ச்சலால் அவதிபடுபவருக்கு , வாய் வழியாக அல்லது நரம்பு வழியாக நீர்சத்து உடம்பின் உள்ளே ஏற்றப்படும்! அவ்வாறு நீர்ச்சத்து ஏற்றப்படுவதனால் , உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்! மிக கடுமையான டெங்குவால் பாதிக்க பட்டவர்களுக்கு , உடம்பில் நரம்பு வழியாக , நீர்ச்சத்து ஏற்றப்படுவதோடு , இரத்தமும் ஏற்றப்படும்

நீர் ராசிகள்:

நீர் ராசிகள்:

டெங்கு காய்ச்சல் நீரினாலும் கொசுவினாலும் பரவும் நோய் என்பதால் நீர் ராசிகள் எனப்படும் கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளின் தொடர்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர் ராசிகளை சர நீர் (ஓடிகொண்டே இருக்கும் நீர்), ஸ்திர நீர் (தேங்கும் நீர்), உபய நீர் (ஒடும் மற்றும் தேங்கும் தன்மை கொண்டது) என பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடகம் சர நீர் ராசியாகவும் விருச்சிகம் ஸ்திர நீர் ராசியாகவும் மீனம் உபய நீர் ராசியாகவும் ஜோதிட சாஸ்த்திரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேங்கும் நீரில்தான் கொசுக்களின் உற்பத்தி அதிகம் என்பதாலும் மற்ற நீர் ராசிகளை விட விருச்சிக ராசி மற்றும் அதன் அதிபதியின் தொடர்பு டெங்கு ஜ்வரத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும். மேலும் பன்னிரண்டு ராசிகளில் விருச்சிக ராசி கீட ராசி என்றும் நச்சு ராசி என்றும் அழைக்கபடுகிறது. விருச்சிகம் விஷத்தன்மை மற்றும் நோய் பரப்பும் தன்மையுள்ள ராசியாகவும், அசுத்த நீரினையும் விஷ ஜெந்துக்களையும் குறிக்கும் ராசி கால புருஷனுக்கு எட்டாவது ராசியான விருச்சிக ராசியாகும்.

விஷக்கிருமிகளை பெருக்கும் ராகு-கேது:

விஷக்கிருமிகளை பெருக்கும் ராகு-கேது:

விஷக்கிருமிகளின் உற்பத்தி செய்வது அதிலும் முக்கியமாக கண்ணுக்கு தெரியாத நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகளை பரப்புவதும் ஸர்ப கிரஹங்களான ராகு-கேதுவின் முக்கிய காரகமாகும். மேலும் கிருமிகளை வேகமாக காற்றில் பரவ செய்வதில் ராகுவின் பங்கு முக்கியமானதாகும்.

காய்ச்சலுக்கான காரக கிரஹங்கள்:

காய்ச்சலுக்கான காரக கிரஹங்கள்:

மருத்துவ ஜோதிடத்தில் காய்ச்சல் எனப்படும் ஜ்வரத்தை மூன்று வகையாக பிரித்து கூறுகின்றனர். அவை:

வாத ஜ்வரம் - உடல் வலியுடன் கூடிய காய்ச்சல்

பித்த ஜ்வரம் - தலைவலி மற்றும் வாந்தியுடன் கூடிய காய்ச்சல்

கப ஜ்வரம் - ஜலதோஷம், சளி, இருமளுடன் கூடிய காய்ச்சல்

வாத ஜ்வரத்திற்கு சனைச்வர பகவானும், பித்த ஜ்வரத்திற்கு செவ்வாய் மற்றும் சூரியனும், கபஜ்வரத்திற்கு சந்திரனும் காரகதுவம் வகிக்கின்றனர்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை கொண்டு பார்க்கும் போது அம்மை நோயின் தன்மையும், கை கால் வலிகளும் ஏற்படுவதால் செவ்வாய் மற்றும் சனியின் காரகங்கள் இங்கு அதிகமாக செயல்படுகிறது. மேலும் ஊசி போன்ற ஆயுதங்களுக்கும் ரத்தத்திற்கும் செவ்வாய் காரகராகும். கொசு கடித்து கிருமிகள் ரத்தத்தில் பரவி டெங்கு காய்ச்சல் உருவாகிறது என்பது குற்ப்பிடத்தக்கது.

மேலும் ரத்ததிலுள்ள வெள்ளை அனுக்களுக்கு காரகரும் செவ்வாயாகும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் வெள்ளை அணுக்கள் ரத்தத்தில் வேகமாக குறைவது கருத்தில் கொள்ளவேண்டும்.

மருத்துவமனை வாசம்:

மருத்துவமனை வாசம்:

ஒருவர் மருத்துவ மனையில் தங்கி மருத்துவம் பெறுவதற்க்கு கால புருஷ பன்னிரெண்டாம் பாவம், அதன் அதிபதியான குரு, சுக்கிரன், ஜென்ன ஜாதக

பன்னிரண்டாம் பாவம் மற்றும் அதன் அதிபதியின் தொடர்பு ஜாதகத்தில் அமைந்திருந்தால் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறுவார்கள். மேலும் ஜாதகத்தில் 6/8/12 அதிபதிகள் அவர்களுக்குள் வீடு மாறி அமர்ந்து விபரீத ராஜயோகத்தை பெற்றிருந்தாலும் மருத்துவமனை வாசம் ஏற்படும்.

டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கிரஹ நிலைகள்:

டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கிரஹ நிலைகள்:

1. உடல் பலம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றிற்கு லக்னம் மற்றும் லக்னாதிபதி பலமாக இருக்க வேண்டும். லக்னம் அல்லது லக்னாதிபதி 6/8/12 தொடர்பு, ராகு/கேது மற்றும் மாந்தி சேர்க்கை, லக்னாதிபதி நீசம் அடைவது, சந்திரன் நீசம் அடைவது ஆகியவை உடல் ரீதியான பிரச்சனைகளையும் அதனால் உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வினை ஏற்படுத்தும்.

2. ஜெனன ஜாதகத்தில் ஆறாம்பாவத்தில் காய்ச்சலை தரும் செவ்வாய், சந்திரன், சனி போன்ற கிரஹங்களின் சேர்க்கை பெற்று நிற்பது.

3. ஜெனன ஜாதகத்தில் ஆறாம்பாவதிபதியோடு சந்திரன், செவ்வாய் மற்றும் சனி பார்வை சேர்க்கை பெறுவது.

4. ஜெனன ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் மற்றும் சனி வீடுகள் மாறி பரிவர்தனை பெற்று 6/8/12 அதிபதிகளுடன் தொடர்பு கொள்வது.

5. கால புருஷ எட்டாவது ராசியான விருச்சிகத்தில் சந்திரன் நீசமாகி, செவ்வாய், மற்றும் சனியுடன் சேர்க்கை பெறுவது.

6. நீர் கிரஹங்களில் ராகு/கேது நின்று, சந்திரன், செவ்வாய், சனி ஆகிய கிரஹங்களை பார்ப்பது.

6. சந்திரன், செவ்வாய், சனி ஆகிய கிரஹங்களின் வீடுகள் 6/8/12 வீடுகளாகி விபரீத ராஜயோகம் ஏற்படுவது.

8. நோய் எதிர்பினை தரும் குரு பகவான் 6/8/12 தொடர்பு மற்றும் வக்ர நிலையில் நிற்பது, தனது வீட்டிற்கு 12 ல் நிற்பது.

டெங்கு காய்ச்சல் எப்போது வரும்?

டெங்கு காய்ச்சல் எப்போது வரும்?

1. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் மேற்கண்ட கிரஹ நிலைகளை கொண்டு தசா புத்தி அந்தரங்களை நடத்துவது

2. ஸர்ப கிரஹங்களின் தசைகளில் சந்திரன், செவ்வாய், சனி ஆகிய கிரஹங்களின் புத்தி அந்தரங்கள் நடைபெறுவது.

3. கோசாரத்தில் நீர் கிரஹங்களில் ராகு/கேது நிற்பது மற்றும் திரிகோண பார்வையில் சனி மற்றும் செவ்வாயை பார்ப்பது.

4. விருச்சிகத்தில் கோச்சார சனி பயணம் செய்வது.

கடந்த மூன்று ஆண்டுகளாக கால புருஷனுக்கு எட்டாவது ராசி, கீட ராசி, நீர் ராசி மற்றும் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் சனி பயணம் செய்தது அதனை கடந்த சில மாதங்களாக சந்திரனின் வீடான கடகத்தில் ராகு நின்று அதனை திரிகோண பார்வையாக பார்த்ததும் சமீப கால டெங்கு காய்ச்சலின் தீவிரத்திற்க்கு காரணமாகும்.

தற்போது திருக்கணித பஞ்சாங்க படி 26/10/2017 அன்று விருச்சிகத்தில் இருந்து தனுர் ராசியில் சஞ்சாரம் செய்ததை தொடர்ந்து டெங்கு காய்ச்சலின் தீவிரம் குறைந்து வருகிறது என்றால் மிகையாகாது. என்றாலும் நீர் ராசியான கடகத்தில் ராகு நிற்பதால் டெங்கு காய்ச்சலின் பயம் இன்னும் சில காலம் தொடரும் என்றே தோன்றுகிறது. எந்த காய்ச்சல் என்றாலும் டெங்குவாக இருக்கலாம் என்ற நிலை தொடரும்.

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் மற்றும் பரிகாரங்கள்:

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் மற்றும் பரிகாரங்கள்:

1. டெங்கு காய்ச்சல் நீரினால் ஏற்படும் நோய் என்பதால் நீர் தேங்கி நிற்கும் இடங்களில் சந்திரனின் காரகம் பெற்ற உப்பினை தூவுவது நோய் கிருமிகள் பரவுவது மற்றும் கொசு உற்பத்தியை குறைக்கும்.

2. சந்திரனின் அம்சமான குடிநீரை செவ்வாயின் அம்சத்தோடு சேர்த்து வெந்நீராக்கி பருகுவது.

3. பொதுவாக காய்ச்சலுக்கு காரகர் செவ்வாய் தான் மருத்துவத்திற்கும் காரகர் என்கிறது மருத்துவ ஜோதிடம். செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயிலில் உள்ள ஜ்வரஹரேஸ்வரரை ப்ரார்த்திக்க ஜ்வரங்கள் (காய்ச்சல்) நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஜ்வரஹரேஸ்வருக்கு ரஸம் சாத நிவேதனம் செய்வதாக ப்ரார்த்திப்பதும் ஜ்வரங்கள் நீங்கியப்பின் அவருக்கு ரசம் சாதம் நிவேதனம் செய்வதும் ப்ரசித்திபெற்ற ப்ரார்தனையாகும்.

4. டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கிடையாது என்று கூறப்படுகிறது. என்றாலும்

டெங்கு ஒரு வாத சுரம் என்பதாலும் சனியின் காரகம் பெற்ற "யுபடோரியம் பெர்போலியேட்டம்" எனும் ஹோமியோ மருந்து டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக மருத்துவ ஜோதிடம் பரிந்துரைக்கிறது. இதனை தகுந்த மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது நன்மையளிக்கும்.

5. காய்ச்சலின் தீவிரத்தை குறைக்கவும் எதிர்ப்பு சக்தி ஏற்படவும் சில மருந்துகள் பரிந்துரை செய்யப்படுகிறது. பொதுவாக கசப்பு சுவைக்கு காரகர் சனைச்சர பகவானகும். வாத ஜ்வரமான டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருந்தான நிலவேம்பு குடிநீர், ஆயுர்வேத மருந்தான பாரங்யாதி கஷாய சூர்னம், ஷடங்க பானியம் போன்ற மருந்துகளை கஷாயமாக செய்து பருகுவது டெங்கு காய்ச்சலை குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

6. செவ்வாயின் காரகம் பெற்ற பப்பாளி ரத்தசுத்தியாக விளங்குகிறது. பப்பாளி இலையினை அரைத்து அதன் சாற்றினை பருகுவது ரத்ததிலுள்ள கிருமிகளை கொன்று ரத்ததிலுள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது.

7. செவ்வாய் மற்றும் சனியின் காரகம் பெற்ற சுதர்சன மாத்திரை காய்ச்சலின் தீவிரத்தை குறைக்கிறது.

8. நோய் ஏற்பட்டவரின் அருகில் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுபடை, சுதர்ஸனாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி நரசிம்ம மந்த்ர ராஜ பத ஸ்லோகம் ஆகியவற்றை பாராயணம் செய்வது.

9. மிகவும் தீவிரமான நிலையில் சுதர்ஸன ஹோமம் மற்றும் ஜெபம் செய்வது

10. ரத்தத்தின் காரகரான செவ்வாய் பலமிழந்த நிலையில் ஏற்படும் டெங்கு காய்ச்சலுக்கு ரத்ததிலுள்ள வெள்ளையணுக்களை அதிகரிக்க ரத்தம் ஏற்றுவது கூட செவ்வயிற்கான பரிகாரமே என்பதை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.

11. மாரியம்மனை செவ்வாய் மற்றும் ராகுவின் அம்சமாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது, அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு

பிரார்த்தனை மிகவும் மகத்துவம் நிறைந்த ப்ரார்தனை மற்றும் பரிகாரமாகும்.

English summary
Dengue fever is caused by a virus, and there is no specific medicine or antibiotic to treat it. For typical dengue fever, the treatment is directed toward relief of the symptoms.Papaya leaf extract can be used to treat dengue fever. The acute phase of the illness with fever and muscle pain lasts about one to two weeks. The prevention of dengue fever requires control or eradication of the mosquitoes carrying the virus that causes dengue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X