For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரு பெயர்ச்சி 2019-20: குரு தரும் ஹம்சயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்

பஞ்சமகா புருஷ யோகத்தில் குரு தரும் ஹம்ச யோகம் ரொம்ப முக்கியமானது. காரணம் ஜோதிடத்தில் மகா சுபர் குருபகவான். ஹம்ச யோகம் யாருக்கு வரும் என்றால், குரு பகவான் லக்ன கேந்திரங்களில் ஆட்சி உச்சம் பெற்று வலுக

Google Oneindia Tamil News

Recommended Video

    08-09-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

    சென்னை: குருபகவான் தரும் அற்புதமான யோகங்களில் ஹம்சயோகம் முக்கியமானது. வாழ்க்கையில் அனைத்து அம்சங்கள் நிறைந்திருக்கும்.
    ஜாதக ரீதியாக மேஷம்,கடகம்,துலாம், மகரம் தனுசு, மீனம், மிதுனம், கன்னி ராசிக்காரர்கள், லக்னகாரர்களுக்கும் ஹம்யயோகம் அமைகிறது. ஹம்சயோகம் அமையப்பெற்றவர்களுக்கு தனம், புத்திரபாக்கியம் அற்புதமாக அமையும். ஹம்சயோகம் வலுவாக அமையும் அந்த தசாபுத்தி காலத்தில் பலவித நன்மைகளை கொடுக்கும். லக்ன கேந்திரங்களில் ஆட்சி உச்சம் பெறும் போது இந்த யோகம் அமைகிறது. இந்த குருப்பெயர்ச்சியால் யாருக்கு ஹம்ச யோகம் அமைகிறது என்று பார்க்கலாம்.

    ஜாதக ரீதியாக ஹம்சயோகம் அமையப்பெற்றவர்களுக்கு அம்சமான வாழ்க்கை அமையும். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அவரது சொந்த ராசியான தனுசு ராசியிலேயோ, மீன ராசியிலேயோ இருந்தாலும், குரு பகவான் உச்சம் பெறும் ராசியான கடக ராசியிலே சஞ்சாரம் செய்தாலும் அந்த ஜாதகருக்கு ஹம்ச யோகம் ஏற்படுகிறது.

    கேந்திரங்களான 1, 4, 7,10 ஆகிய நான்கு இடங்களில் ஏதேனும் ஒன்றில் குரு வலுப்பெற்று அமரவேண்டும். இந்த ஹம்ச யோகத்தில் பிறந்த ஜாதகர்களின் குடும்பம் ராஜயோக அம்சத்துடன் இருப்பார்கள். குருபகவான் நவம்பர்மாதம் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார்.

    சனி பெயர்ச்சி 2020-23: சனி தரும் சச யோகம்: எந்த ராசி லக்னகாரர்களுக்கு கிடைக்கும்சனி பெயர்ச்சி 2020-23: சனி தரும் சச யோகம்: எந்த ராசி லக்னகாரர்களுக்கு கிடைக்கும்

    அள்ளிக்கொடுப்பார் குருபகவான்

    அள்ளிக்கொடுப்பார் குருபகவான்

    மேஷ லக்கினத்திற்கு 4ல் குரு கடக ராசியில் உச்சம் பெறுவது. மிதுன லக்கினத்திற்கு 7 மற்றும் 10ல் குரு ஆட்சி பெறுவது. கடக லக்கினத்திற்கு லக்கினத்தில் உச்சம் பெறுவது. கன்னி ராசிக்கு 4 மற்றும் 7ல் குரு ஆட்சி பெறுவது. துலாம் லக்கினத்திற்கு 10ல் குரு ஆட்சி பெறுவது. தனுசுவிற்கு லக்கினம் மற்றும் 4ல் குரு ஆட்சி பெறுவது. மகரத்திற்கு 7ல் குரு உச்சம் பெறுவது. மீனத்திற்கு லக்கினம் மற்றும் 10ல் குரு ஆட்சி பெறுவது ஹம்சயோக அமைப்பாகும்.
    இது ஹம்ச யோக அமைப்பாக இருந்தாலும் கேந்திரஆதிபத்ய தோஷத்தை தரும் என்பதுதான் உண்மை.

    அம்சமான அழகு

    அம்சமான அழகு

    இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல உயரமான தோற்றத்தையும், வெளிர் நிற மேனியையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் முகத்தில் இயற்கையாகவே ஒரு தெய்வீக தேஜஸ் இருக்கும். இயற்கையாகவே பிறரை வசீகரிக்கக்கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். பல விதமான சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்து பண்டிதர்களாக இருப்பார்கள். அதை பிறருக்கு உபதேசிக்கவும் செய்வார்கள்.

    நேர்மையானவர்கள்

    நேர்மையானவர்கள்

    மஞ்சள் நிறம் கொண்ட தங்க நகை வியாபாரம் மஞ்சள் நிற பொருட்களின் வியாபாரத்தில் பெருமளவில் லாபம் பெறுவார்கள். பொன் நகைகளின் சேர்க்கையும் இவர்களுக்கு அதிகம் கிடைக்கும். கல்லூரிகளில் மிகச் சிறந்த பேராசிரியர்களாக மிளிர்வார்கள். அரசியலில் ஈடுபட்டால் மிகப்பெரிய பதவிகளை பெறக்கூடிய அதிர்ஷ்டமும் உண்டாகும். தர்ம நெறி, நேர்மை குணம் தவறாமல் வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் இந்த உலகமே போற்றக்கூட அளவிற்கு ஜெகத் குருவாக உயர்வார்கள். கோவில், மதம் பாரம்பரிய சம்பிரதாயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அக்காரியங்களில் தாமாக ஈடுபட்டு எல்லோருக்கும் நன்மை அளிக்கக் கூடிய காரியங்களை புரிவார்கள்.

    மேஷம் கடகம்

    மேஷம் கடகம்

    மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள்தான் குரு பகவான் தரும் ஹம்ச யோகத்தின் முழுப் பலனையும் அனுபவிப்பவர்கள். அதிலும் குருவின் நண்பர்களான, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகியோரின் ஆட்சிக்குட்பட்ட மேஷம் மற்றும் கடக லக்கினக்கார்களுக்குதான் இந்த யோகம் கூடுதல் நற்பலன்களைத் தரும்.

    ஹம்ச யோகம் கொண்ட குரு பார்வை

    ஹம்ச யோகம் கொண்ட குரு பார்வை

    குரு என்றாலே சுப கிரகம். குரு என்றாலே நன்மை. ஜாதகத்தில் உள்ள கெடுதல்களையும் பார்வையால் நன்மை தரும் அமைப்பாக மாற்றுபவர்.
    குரு லக்னத்துடன் தொடர்பு கொள்ளும் போது அதிக நன்மை கொண்டவராக இருப்பார்கள். ரொம்ப நல்லவராகவும், எளிதில் எதையும் விட்டுக்கொடுப்பார்.
    குரு பகவான் வலுவாக அமர்ந்து பார்க்கின்ற இடங்களை எல்லாம் வலுப்படுத்தி ஜாதகருக்கு நீண்ட புகழ், நிறைவான செல்வம் என அள்ளி அள்ளி கொடுப்பார்.

    முழு யோகம் யாருக்கு

    முழு யோகம் யாருக்கு

    உபய லக்கினங்களான தனுசு, மீனம், மிதுனம், கன்னி ஆகிய லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு இந்த யோகம் அமையப் பெற்றாலும், அவர்களுக்கு யோகம் முழுமை பெறாது. உபய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்கினத்தில் அமர்ந்திருந்தால் மட்டுமே குரு முழுயோகத்தை அளிப்பார்.
    ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்கினங்களுக்கு குரு கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் ஆட்சியோ, உச்சமோ அடைவதில்லை. இதனால், இந்த லக்கினங்களில் பிறந்தவர்கள் ஹம்ச யோகம் பெறும் வாய்ப்பு இல்லை.

    முழுமையான யோகம்

    முழுமையான யோகம்

    குரு ஆட்சி, உச்சம் பெறும் நிலையில் அவருக்கு எதிர்த்தன்மையுடைய கிரகங்களான சுக்கிரன், சனி, புதன் ஆகியோர் அவருடன் சேருவது மற்றும் அவரைப் பார்ப்பது யோகத்தைக் குறைத்துவிடும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் லக்கின சுபர்களாகி குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் வலுப்பெறும். ஹம்ச யோகம் தரும் நிலையில், குரு சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடைந்தால் யோகம் முற்றிலும் வலிமையிழந்துவிடும்.

    சிறப்பான வாழ்க்கை

    சிறப்பான வாழ்க்கை

    குரு வலுவான சுபர். லக்னத்தை பார்க்கும் குரு அற்புதமான பலன்களைத் தருவார். தியாக மனப்பான்மையுடன் இருப்பார்கள். இந்த ஹம்சயோகம் அமையப்பெற்றவர்கள் நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பார்கள். குரு பணத்தை அள்ளிக்கொடுப்பார். எதிலும் நேர்மையாக புகழோடு இருப்பார்கள். முகத்தில் ஒரு பொலிவு தெரியும். குரு பொன்னிற காரகன். எனவே முகத்திலும் களை தெரியும். லக்னத்தோடு தொடர்பு கொண்ட குரு பகவான் அதிக வலுவான ஹம்சயோகம் தருவார்.

    அரசில் உயர்பதவி

    அரசில் உயர்பதவி

    கடக ராசியான நான்காம் வீட்டில் உச்சம் பெற்று அமரும் குருபகவான் தொழில் அதிபராக உயர்த்துவார். 7ஆம் வீட்டில் ஹம்ச யோகம் பெற்ற குருவினால் சிறந்த வாழ்க்கைத்துணையை தருவார். நீடித்த வாழ்க்கைத்துணை அமையும். தாய்வழி உறவுகளில் நல்லது செய்வார்கள். அரசனுக்கு பக்கத்தில் நின்று அமைச்சராக இருந்து ஆலோசனை கூறுவார். மதியூக மந்திரியாக செயல்படுவார். குருபகவான் ஜாதகத்தில் வலுப்பெற்றவர்கள் வாழ்க்கை அற்புதமாக அமையும்.

    குரு பெயர்ச்சியால் யோகம்

    குரு பெயர்ச்சியால் யோகம்

    மிதுனம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். மிதுன ராசியை குரு பார்வையிடுகிறார். இந்த பார்வையினால் பலவித நன்மைகளை அளிக்கப்போகிறார் குருபகவான். குரு பார்வை நேரடியாக இருப்பதால் ஹம்சயோகத்தின் பலனை சில நேரங்களில் தருவார். சனியும், கேதுவும் இருப்பதால் முழு பயனும் தராது. திருமணம், காதல் விசயங்களில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வளர்ச்சியில் நன்றாக இருக்கும். இந்த குருப்பெயர்ச்சி திடீர் மாற்றங்களை ஏற்படுத்தும்.

    ஹம்சயோக காலம்

    ஹம்சயோக காலம்

    நான்குக்கு அதிபன் நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று ஹம்ச யோகத்தை தரப்போகிறார். உங்களின் நிலை உயரும். மிகப்பெரிய வாய்ப்புகளை தருவார். புதிய வேலை கிடைக்கும். சம்பள உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகத்தை தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சனி கேது இணைந்திருந்து தொல்லை கொடுத்தாலும் அதை முறியடித்து நல்ல பலன்களை தருவார். முன்னேற்றத்துடன் கூடிய மாற்றங்களை குருபகவான் தருவார். அம்மாவிற்கு இருந்த கஷ்டங்கள் நீங்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

    பத்தில் குரு தரும் யோகம்

    பத்தில் குரு தரும் யோகம்

    மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பத்தாம் வீட்டில் ஹம்சயோகம் பெற்று அமரப்போகிறார். மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இடம்மாற்றங்களைத் தருவார். ஹம்சயோகம் கொண்ட குருபகவான் சகல அம்சத்தை தரப்போகிறார். வலிமை பெற்று அமரப்போகும் குரு உங்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்கப்போகிறார். குடும்பம் சுபிட்சமடையும். நீங்க நினைத்த காரியகங்கள் நிறைவடையும். தடைகள் சங்கடங்கள் நீங்கும். நல்ல வருமானத்தை அள்ளிக்கொடுக்கும். வீடு சொத்து வண்டி வாகன சேர்க்கை அதிகரிக்கும். நோய்கள் நீங்கும். கடன்கள் குறையும். எதிரிகள் தொல்லை ஒழியும். புதிய தொழில் தொடங்குவீர்கள். பத்துக்கு அதிபனே பத்தில் ஆட்சி பெற்று அமரப்போகும் குருபகவானால் வீழ்ச்சியில் இருந்த உங்களை உயர்த்தி வைக்கும்.

    English summary
    Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam.Hamsa Yoga is one of the Panch Mahapurush Yoga’s which are the five powerful combinations in Vedic Astrology.Hamsa Yoga at birth will be a king, a high political or government dignitary respected by good people.Hamsa yoga for Cancer Jupiter will get directional strength also here. Native will be having good thoughts, kindness, and good attitude.Bhagavan Sri Ramachandra had all the noble qualties and is ever worshipped as Purushothama. He enjoyed all the benefits of Hamsa yoga.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X