Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2023 : யாருக்கு நல்ல வேலை கிடைக்கும்!..வேலை பறிபோகாமல் தப்பிக்க என்ன பரிகாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் நவம்பர் 23ஆம் தேதியன்று மீன ராசியில் வக்ர நிலையில் இருந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மேஷ ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் குருவின் பயணம் மற்றும் பார்வைகளால் யாருக்கெல்லாம் நல்ல வேலை கிடைக்கும்..வேலை பறிபோகாமல் தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

குரு பகவான் ஒரு ராசி மண்டலத்தை கடக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொள்வார் குருபகவான். ராசி மண்டலத்தின் கடைசி ராசியான மீன ராசியில் ஆட்சி பெற்று இருக்கும் குருபகவான் கடகம், கன்னி, விருச்சிகம் ராசிகளை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் உலகம் முழுவதுமே ஒரு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் இருந்து 2021ஆம் ஆண்டு இறுதி வரை உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியிருந்தது. பலரும் வீட்டிற்குள் முடங்கினர். நிறைய பேருக்கு வேலை பறிபோனது. தொழில்கள் முடங்கின. பலரது தொழில்கள் நஷ்டத்தை சந்தித்தது. கொரோனாவில் இருந்து உலகம் படிப்படியாக மீண்டது. பொருளாதார மந்த நிலையால் பல ஐடி நிறுவனங்கள் சமூக வலைத்தள நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையை விட்டு நிறுத்தி வருகிறது. இதனால் பலரும் சங்கடத்திற்கு ஆளாகி வருகின்றனர். 2023ஆம் ஆண்டில் யாருக்கெல்லாம் நல்ல வேலை கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். உங்களுடைய தசாபுத்தி நல்ல நிலையில் இருந்தால் பயப்பட தேவையில்லை பதற்றப்படாமல் வேலையை பாருங்கள்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே.. 2023ஆம் ஆண்டு உங்களுடைய தொழில் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழிலில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மேலதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. உயரதிகாரியின் பார்வை உங்கள் மேல் விழும். 2023ஆம் ஆண்டு மே மாதம் ராசிக்கு வரப்போகும் ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார். வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றத்தை தருவார் குரு பகவான். அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும். குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும். திருக்கடையூர் சென்று அபிராமி அன்னையை தரிசனம் செய்து வாருங்கள் நன்மைகள் நடைபெறும்.

 ரிஷபம்

ரிஷபம்

குரு பகவான் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் பணவரவு நன்றாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். உங்களுக்கு வரப்போகும் விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். உங்களுடைய தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறும் பண முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு சாதகமான இடங்களில் விழுகிறது என்றாலும் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேலையில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க நீங்கள் திருச்செந்தூர் முருகனை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் உங்களுக்கு வேலையில் சில சங்கடங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். பத்தாம் இடத்து குரு சிலருக்கு வேலையில் குடைச்சலை கொடுக்கும். வேலை பறிபோகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது. அதே நேரத்தில் மே மாதத்தில் நிகழப்போகும் குரு பெயர்ச்சி உங்களுக்கு குதூகலத்தை கொடுக்கப் போகிறது. லாப குருவினால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சொத்து சேர்க்கை ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ராஜ யோகத்தை தரப்போகிறது. புதிய தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

கடகம்

கடகம்

குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்தாலும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். 2023ஆம் ஆண்டு பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கவும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கும்.

சிம்மம்

சிம்மம்

குரு பகவான் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குருவின் பார்வையும் பயணமும் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், இரண்டாம் வீடு மற்றும், நான்காம் வீட்டின் மீது விழுவதால் உங்களுக்கு வீடு வாங்கும் யோகமும் வாகனம் வாங்கும் யோகமும் கைகூடி வரும். மே மாதத்திற்கு பிறகு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. படிப்பில் இருந்த தடை, வேலையில் இருந்த தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் நடைபெறும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

குரு பகவான் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான்அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருக்கவும். சுப விரைய செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். தென் திட்டை குருபகவானை தரிசனம் செய்யலாம். குல தெய்வ தரிசனம் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும்.

துலாம்

துலாம்

குரு பகவான் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்வார். ருண ரோக சத்ரு ஸ்தான குரு உங்கள் ராசிக்கு நிறைய நன்மைகளைத் தரப்போகிறார். மே மாதம் நிகழப்போகும் உங்களுக்கு குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். குருவின் பார்வையால் உங்களுக்கு தொழில் மாற்றமும் வேலையில் நல்ல இடமாற்றமும் ஏற்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு 2023ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். 2023ஆம் ஆண்டு மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுக்கு பண வருமானமும் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். சுக ஸ்தான குரு நிறைய சுகங்களைத் தரப்போகிறார். 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனை வணங்க திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும்.

மகரம்

மகரம்

குரு பகவான் நான்கு மாதங்கள் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு வரப்போகிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருவண்ணாமலை சென்று கிரிவலம் வாருங்கள் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

கும்பம்

கும்பம்

குருபகவான் இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். மே மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு மாறப்போகும் குரு பகவானால் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெற்றிகரமான குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது. குருவின் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வியாழக்கிழமைகளில் குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்


குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, ஜென்ம குரு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரப்போகிறார். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். மே மாதத்தில் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கிடைக்கப்போகிறாது. அஷ்டலட்சுமி யோகத்தை தேடி கொடுக்கும். நிரந்தர வேலை கிடைக்கவும் வேலை பறிபோகாமல் தப்பிக்கவும் வியாழக்கிழமை குரு ஓரையில் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+