மேஷம் முதல் மீனம் வரை குருபார்வை இப்போ எப்படி இருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஏழரை.. அட்டம சனியா? சனி பகவான் அருள் கிடைக்கும் மந்திரம்- வீடியோ

  சென்னை: நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். 12 ராசிக்கும் இப்போது குருவின் பார்வை பலம் எப்படி என பார்க்கலாம்.

  ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் எந்த கஷ்டம் வராது. ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

  ஜாதக ரீதியாக குரு பகவான் பாதிக்கப் பட்டால், நரம்புக் கோளாறுகள், தோல் மற்றும் வயிற்று நோய்கள், மூட்டு வலி, இதய நோய்கள் ஏற்படும். இதனால் ரத்தம் அசுத்தம் அடைதல், கவலை, பதற்றம் போன்றவை ஏற்படும் பாதிப்புகள் ஏற்படும்.

  கோச்சாரப்படி குருபகவான் இப்போது துலாம் ராசியில் விசாகம் நட்சத்தில் சஞ்சரிக்கிறார். 5வது பார்வையாக கும்பம் ராசியையும், 7வது பார்வையாக மேஷம் ராசியையும், 9வது பார்வையாக மிதுனம் ராசியையும் பார்க்கிறார். 12 ராசிக்கும் பலன்களை பார்க்கலாம்.

  மேஷம்

  மேஷம்

  மேஷ ராசிக்காரர்களே. குருபகவான் இந்த ஆண்டு அக்டோபர் 3 வரை உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான துலாம் ராசியில் அமர்ந்து பலன்களை தருகிறார். உங்களின் ராசிக்கு 3வது ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். இளைய சகோதரர்கள் உறவு அதிகரிக்கும். 11வது இடத்தை பார்க்கிறார் 5ஆம் பார்வையாக பார்க்கிறார். மூத்த சகோதர்கள் ஆதரவாக இருப்பார்கள். 7ஆம் பார்வையாக ராசியை பார்ப்பதால் தோற்றப்பொலிவு அதிகரிக்கும். ராசியை சம சப்தம பார்வையாக பார்ப்பதால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தனவரவு அதிகரிக்கும்.

  ரிஷபம்

  ரிஷபம்

  துலாம் ரிஷபத்திற்கு ஆறாம் இடம். கடன் ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளதால் நீங்கள் கடன் வாங்கக் கூடாது. உடல்நலத்தில் அக்கறை தேவை. ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ள குரு 10வது ஸ்தானத்தை பார்க்கிறார் வேலையில் இதமான சூழ்நிலை ஏற்படும். 12 இடமான விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். 2வது இடமான குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். கணவன் மனைவு ஒற்றுமை அதிகரிக்கும். தனகாரகன் தன ஸ்தானத்தை பார்க்கிறார். வரவை தாண்டி செலவு அதிகரிக்கும். சுப செலவாக மாற்றலாம். வியாழக்கிழமை மஞ்சள் நிற ஆடை அணிந்து தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மை நடக்கும்.

  மிதுனம்

  மிதுனம்

  குரு பகவான் உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியை 9ஆம் பார்வையாக பார்க்கிறார். 11வது இடத்தை பார்க்கிறார். 9வது இடத்தை பார்க்கிறார். பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் தோற்றப்பொலிவு அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும். முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.

  கடகம்

  கடகம்


  கடக ராசி காரர்களே குருபகவான் உங்களின் ராசிக்கு 4வது இடத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் தொல்லைகள் விலகும். ராசிக்கு 8வது இடத்தை பார்க்கிறார். 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். 12 இடமான விரைய ஸ்தானத்தை இடத்தை பார்க்கிறார். தடைகள் விலகும். கண்டங்கள் விலகி உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
  நல்ல தொழில் அமையும். நல்ல வேலை அமையும். வரவை அறிந்து செலவு செய்யவும். சுப விரையமாக செய்யவும். குரு பெயர்ச்சி நன்மையை அள்ளி வழங்கும்.

  சிம்மம்

  சிம்மம்

  குருபகவான் உங்கள் ராசிக்கு 3வது இடத்தில் அமர்ந்துள்ளார். தொடர்புகள் வெற்றி கிடைக்கும். இளைய சகோதர்கள் மீது அக்கறை தேவை. ராசிக்கு 7, 9வது இடத்தை பார்க்கிறார். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும் பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தையின் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். 11வது இடத்தை பார்ப்பதால் நீண்ட தூர பயணம் உண்டாகும். ஆன்மீக பயணம் உண்டாகும். தன லாபத்தை தரும். வியாழக்கிழமை மவுன விரதம் இருப்பது அவசியம்.

  கன்னி

  கன்னி

  குரு பகவான் 2வது இடத்தில் இருப்பதால் வாக்கு வன்மை பெருகும். பணவரவு அதிகரிக்கும்.
  கணவன் மனைவி விட்டுக்கொடுக்க வேண்டும். 6 வது இடத்தை பார்க்கிறார் எதிரிகள் தொல்லை நீங்கும். குடும்ப ரகசியம் காக்க வேண்டும். 8வது இடம் அஷ்டம ஸ்தானத்தை பார்க்கிறார். நோய் நொடிகள் விலகும். 10வது இடம் தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். வெளிநாட்டு பயணம் ஏற்படும்.

  துலாம்

  துலாம்

  துலாம் ராசியில் அமர்ந்து 5, 7,9ஆம் இடத்தை பார்க்கிறார். மாற்றங்களும், ஏற்றங்களும் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற உயர்வு வரும்.வெற்றி கிடைக்கும். பஞ்ச ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் இந்த ஆண்டு குவா குவா சத்தம் கேட்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். சுக்கிரன் வீட்டில் குரு அமர்வதால் புதிய வண்டி வாகனம் வாங்கலாம். சகோதர உறவு சிறப்பாக இருக்கும்.

  விருச்சிகம்

  விருச்சிகம்

  குரு 12வது இடமான விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். குருவின் பார்வை 4வது இடம், 6வது இடம் 8ஆம் இடங்களின் மீது படுகிறது. தடைகள் விலகும். நிறைய செலவுகள் ஏற்படும். விரைய செலவுகளை சுப விரையமாக மாற்றலாம். கடன் வாங்கி வீடு வாங்குங்கள். மூட்டுவலி விலகும். நோய்கள், கடன் நெருக்கடிகள் விலகும்.
  கணவரின் வருமானம் அதிகரிக்கும். பட்டமங்கலம் அனுக்கிரக தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

  தனுசு

  தனுசு

  தனுசு ராசி காரர்களே 11 வது இடமான லாப ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளார். நல்ல வேலை அமையும், உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். குரு பகவான் 3வது இடம், 5வது இடம், 7வது இடத்தை பார்க்கிறார். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன் மனைவி உறவு அதிகரிக்கும். திருமணம் நடைபெறாமல் இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும்.

  மகரம்

  மகரம்

  குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ளார். 2வது 4வது 6வது இடங்களில் பார்வை படுகிறது. தனச்செழிப்பை அள்ளி வழங்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  4வது ஸ்தானத்தில் குருவின் பார்வை படுவதால் உயர் கல்வி கற்பதில் இருந்த தடைகள் விலகும். பட்டம் பெற்று சிறப்படைவீர்கள். வீடு, வாகனம் வாங்கலாம். இந்த ஆண்டு 6வது இடத்தை குருபகவான் பார்ப்பதால் நோய்கள் விலகும்.

  கும்பம்

  கும்பம்

  குரு 9வது இடத்தில் வந்து அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். சோர்வு நீங்கி மகிழ்ச்சி தென்படும். தோற்றத்தில் பொலிவு ஏற்படும். வாழ்க்கைக்கு தேவையானவை கிடைக்கும். நஷ்டங்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். குரு பகவான் 5ஆம் பார்வையாக உங்களின் ராசியை பார்க்கிறார். ராசிக்கு 3வது இடத்தை பார்க்கிறார். 5வது இடத்தை பார்க்கிறார். இளைய சகோதரர்களுடன் உறவு மேம்படும். அக்கம்பக்கத்தினர் உறவு மேம்படும். தொடர்புகள் அதிகரிக்கும். மிகப்பெரிய பாராட்டு கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். நோய்நொடிகள் அற்ற வாழ்க்கையும், தாய், தந்தையரின் உறவு மேம்படும். இது யோக காலமாகும்.

  மீனம்

  மீனம்

  மீன ராசிக்காரர்களே குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து 12வது இடமான விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். 2வது இடமான தன ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தன வரவு ஏற்படும். ஆனால் விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் சுப விரையம் ஏற்படும். 4வது இடத்தை குரு பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் சீராகும். கல்வி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு, வண்டி வாகனம் வாங்கலாம். வியாழக்கிழமைகளில் மஞ்சள் வண்ண ஆடை அணியுங்கள். தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Jupiter transit Kanni to Tulam on September 2017. An astrological proverb "Guru parthal kodi nanmai" meaning that the aspection of Guru graha brings billion benefits.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற