Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருப்பெயர்ச்சி 2021: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் மின்னல் வேக பலன்கள்

குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகியுள்ளார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி எப்படி என மின்னல் வேக பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குருப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. சில ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். பரிகார தலங்களை நோக்கி சிலர் செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த குருப்பெயர்ச்சி யாருக்கு எப்படி என பார்க்கலாம். இது கோச்சார பலன்தான். ஜாதகம், தசாபுத்திபடி பார்த்தால் பலன்களில் சிறு மாறுதல்கள் ஏற்படலாம்.

மேஷம்

மேஷம்

லாபகுருவினால் வருமானம் கூடும். 3,5,7ஆமிடங்களில் பார்வை உள்ளது. பொன்னான காலம். இந்த காலத்தில் வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்லது நிறைய நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். செய்யும் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

தொழில் ஸ்தான குருவால் நன்மை 2,4,6ஆமிடங்களில் பார்வை உள்ளது. பத்தில் குரு பதவி பறிபோகும் என்று சொல்வார்கள். பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் கவனமும் நிதானமும் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது.

மிதுனம்

மிதுனம்

பாக்ய ஸ்தான குரு பலன் அதிகம் 1,3,5ஆமிடங்களில் பார்வை உள்ளது. அஷ்டம குரு ஆட்டிப்படைத்தார். பாக்ய குரு ஆன்மீக பயணத்தை தருவார். ராகு 11ஆம் வீட்டிற்கு போகிறார். வெளிநாட்டு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

கடகம்

கடகம்

அஷ்டமத்து குரு கவனம் தேவை 2,4,12 ஆமிடங்களில் பார்வை உள்ளது. சஷ்ட அஷ்டக குரு. அஷ்டம ஸ்தானத்தில் பயணிக்கும் குரு திடீர் ராஜயோகத்தை தருவார்கள். திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை தருவார்.

சிம்மம்

சிம்மம்

களத்திர குரு நன்மை செய்யும் 1,3,11 ஆமிடங்களில் பார்வை உள்ளது. உங்கள் ராசியை நேரடியாக பார்வையிடுகிறார். குருபார்வை கிடைத்தாலே வாழ்க்கை பொன்னாக ஜொலிக்கும். 12 ராசிகளில் அதிக பலனை அடையப்போவது சிம்ம ராசிக்காரர்கள்தான். திருமண யோகம் கைகூடி வரும்.

கன்னி

கன்னி

ருண ரோக சத்ரு ஸ்தான குருவினால் பாதிப்பு வரும். 2,12,10 ஆமிடங்களில் பார்வை உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நிதானமும் கவனமும் தேவை. அலுவலகத்தில் உயரதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். சிலருக்கு ஜாதகத்தில் குரு இருக்கும் நிலையைப் பொருத்து வேலை பறிபோகவும் வாய்ப்பு உள்ளது.

 துலாம்

துலாம்

பூர்வ புண்ணிய குருவால் அதிர்ஷ்டம் 1,9,11 ஆமிடங்களில் பார்வை உள்ளது. ஐந்தாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியங்கள் ஏற்படும். ஜாமீன் கையெழுத்துப் போட்டு பணம் கடனாக வாங்கித் தர வேண்டாம். கையில் இருக்கும் பணத்தை சொந்த பந்தங்களுக்கு கடனாகத் தர வேண்டாம்

விருச்சிகம்

விருச்சிகம்

சுக ஸ்தான குருவினால் நன்மை ஏற்படும். 12,10,8 ஆமிடங்களில் பார்வை உள்ளது. பல ஆண்டு காலமாக கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வரும் உங்களுக்கு இனி வரும் காலங்கள் பாதிப்பை குறைத்து சந்தோஷத்தை அதிகரிக்கும். வேலை தொழிலில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

தைரிய ஸ்தான குரு பட்டையை கிளப்பும் 11,9,7 ஆமிடங்களில் பார்வை உள்ளது. பொறுமையும் நிதானமும் தேவை. குரு மூன்றில் மறைவதால் முயற்சிகளை கை விட வேண்டாம். காலம் கடந்தாலும் வெற்றி கிடைக்கும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.

மகரம்

மகரம்

குடும்ப குருவினால் லாபம் அதிகரிக்கும். 6,8,10ஆமிடங்களில் பார்வை உள்ளது. இதுநாள் வரைக்கும் தடை தாமதங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. மன உளைச்சல், நிம்மதியற்ற நிலையினை தந்து கொண்டிருக்கிறது. இனி தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். நல்ல காரியங்கள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

ஜென்ம குரு கவனம் தேவைப்படும். 5,7,9ஆமிடங்களில் பார்வை உள்ளது. இனி நீங்கள் கவனமும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய கால கட்டம். வெளிநாட்டுக்கு வேலை, படிப்புக்காக செல்லலாம். தொழில், வேலையில் கவனம் தேவை. பெரிய அளவில் அகலக்கால் வைக்க வேண்டாம்.

மீனம்

மீனம்

விரைய குருவால் செலவு அதிகரிக்கும் 4,6,8 ஆமிடங்களில் பார்வை உள்ளது. நிலம், சொத்து வகையில் பணத்தை முதலீடு செய்யலாம். தங்க ஆபரணங்கள் வாங்கலாம். கூட்டுத் தொழில் செய்ய சரியான நேரமில்லை. பணத்தை இழக்க நேரிடும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+