குரு பெயர்ச்சி 2022: ஜாக்பாட்.. தீபாவளிக்குப் பின் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்
சென்னை: குரு பகவான் தீபாவளி முடிந்து வக்ர நிலையில் இருந்து தனது இயல்பு நிலைக்கு திரும்பப் போகிறார். நவம்பர் 16ஆம் தேதி முதல் குரு பகவான் நேர்கதியில் மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவானின் சஞ்சாரம்,வக்ர நிவர்த்தி, இடப்பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கெல்லாம் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குருபகவான் சுப கிரகம். ஒருவரின் வாழ்க்கையை சுபத்துவமாக்கக் கூடியவர். குருபகவானின் பார்வை எத்தனையோ நன்மைகளை ஒருவரின் வாழ்க்கையில் செய்யும். மனித வாழ்க்கையில் மிக முக்கியமான அம்சங்களாக உள்ள வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவைகளை கிடைக்கக் செய்பவர் குரு பகவான். எனவேதான் குரு பெயர்ச்சி எப்போது நடைபெறும் குரு பலன் வந்து விட்டதா என்று பலரும் கேட்கின்றனர்.
குரு பகவான் ஒரு ராசியை கடக்க ஓராண்டுகள் எடுத்துக்கொள்வார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளை கடக்க 12 ஆண்டுகள் ஆகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தற்போது தனது வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். குரு பகவான் சிலருக்கு ஹம்ச யோகத்தை தேடி தருவார். நவம்பர் முதல் ஆறு மாதங்களுக்கு குரு பகவான் மீன ராசியில்தான் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவான் கடந்த 7 மாதங்களாகவே மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். வக்ர நிலையில் பயணித்த குருவினால் கடந்த சில மாதங்களாக பாதிப்புகளையும் பிரச்சினைகளையும் சந்தித்து வந்தவர்களில் யாருக்கெல்லாம் நல்ல நேரம் வரப்போகிறது. யாருக்கெல்லாம் அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மகரம்
ஜென்ம சனியில் ஆதிக்கத்தில் இருந்தாலும் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். கூடவே செலவுகளும் துரத்தும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வந்து நீங்கும். இளைய சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் வரலாம்.
பண விசயத்தில் கவனம் தேவை. யாருக்காகவும் ஜாமீன், கேரண்டி கையெழுத்திட வேண்டாம். புதியவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்.

கவனம் தேவை
கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது. மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அவசியம்; பயணத்திலும் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். இடைவெளி விட்டு பழகுவது நல்லது

கும்பம்
இனி எதையும் சமாளிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் வரும். பணபலம் கூடும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். தேவையில்லாமல் பேசி சில நல்ல நட்புகளையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் உண்டு.

முயற்சிகளுக்கு வெற்றி
உத்தியோகத்தில், இதுவரை இருந்து வந்த போராட்டம் நீங்கும். மேலதிகாரி உங்களுக்கு ஆதரவாக மாறுவார். உங்களின் சம்பளம் உயரும். சகஊழியர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, கை கால் வலி நீங்கும்.உடம்பில் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவைச் சரிப்பார்த்துக்கொள்வது நல்லது. வேறு சில வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் கூடும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி புதிய முயற்சிகளுக்கு வெற்றி தருவதாக அமையும்

மீனம்
ஜென்ம குரு என்பதால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பது நல்லது. எவருக்கும் வாக்குறுதி அளிக்கவேண்டாம். வாக்கு கொடுத்து விட்டு காப்பாற்ற முடியாமல் போய்விடும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்காதீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். மூத்த சகோதரர் உதவுவார். ஷேர் மூலம் பணம் வரும். நீண்டகால சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

காரியத்தடைகள் நீங்கும்
காரியத் தடைகள் நீங்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நண்பர்கள், உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்களின் உடல் நிலை பாதிக்கும். சிறு சிறு விபத்துகள், வீண் செலவுகள் வந்து நீங்கும். முன்கோபம் தலைதூக்கும். சிலருக்கு ரத்த அழுத்தம் பாதிப்புக்குள்ளாகலாம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தலைச் சுற்றல், உறக்கமின்மை ஏற்படலாம். குல தெய்வ வழிபாடு உங்களுக்கு துணை நிற்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். புதுத் துறையில் கால் பதிக்க வேண்டாம் அகலக்கால் வைப்பது ஆபத்தில் முடியும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications