உதயநிதி அமைச்சரா? துணை முதல்வரா... குரு, சனி, ராகு கேது கிரக பெயர்ச்சிகள் சொல்வதென்ன

உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தில் இருக்கும் யோகம் கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. அதே நேரத்தில் அவர் துணைமுதல்வராக வேண்டும் என்றும் சமீபத்தில் ஒரு அமைச்சர் கூறியுள்ளார். நிகழ்ந்துள்ள ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, நிகழப்போகும் சனிப்பெயர்ச்சி உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தில் கிரகமாலிகா என்ற யோக அமைப்பு உள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ரிஷப ராசியில் பிறந்த உதயநிதிக்கு குரு லாப வீட்டில் அமர்ந்துள்ளார். சனி பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். பதவியில் மாற்றத்தை தரக்கூடிய ராகு 12ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் 1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்திருந்திருக்கிறார். மேஷ லக்னம் ரிஷப ராசி. மேஷம் லக்னம் ரிஷபம் முதல் தனுசு வரை எட்டு கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன. இந்த யோகம் ஒரு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும் என்பது ஜோதிடர்களின் கருத்தாகும்.

ரிஷபம் சந்திரன், மிதுனம் குரு கடகம் செவ்வாய் சிம்மத்தில் சனி கன்னியில் ராகு துலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரன் விருச்சிகத்தில் சூரியன் தனுசு ராசி புதன் என கிரகங்கள் ராசிகளில் வரிசையாக அமர்ந்துள்ளன.ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் மாலை போன்ற அமைப்பில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமைந்திருப்பது கிரக மாலிகா யோகம் என்று சொல்லப்படுகிறது. இந்த யோகங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவியைப் பெற்றுத்தருமா என்று பார்க்கலாம்.

யோகங்கள் சொல்வதென்ன

யோகங்கள் சொல்வதென்ன

நிழல் கிரகங்களாக ராகு, கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களும் வரிசையாக ஏழு வீடுகளில் இருந்தால் அது கிரகமாலிகா யோகம் எனப்படும். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் நாற்பது வயதிற்கு மேல் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும். ஒருவரிடம் மனிதநேயம், ஆளுமைத்திறன், திறமை, மக்கள்செல்வாக்கு, வசியம், ராஜ தந்திரம், முற்போக்குச் சிந்தனை, தொண்டர்கள் இவையெல்லாம் சேர்ந்தால்தான் தலைவனுக்கு உரிய தகுதியைப் பெறமுடியும். சூரியன் ஆளுமைத்திறனுக்கும், செவ்வாய் மனிதநேயத்திற்கும், குரு சந்திரன் மக்கள் செல்வாக்கிற்கும் புதன் ராஜ தந்திரத்திற்கும் சனி தொண்டர்களின் ஆதரவையும் பெற்றுத்தரும்.

உதயநிதியின் வசீகரம்

உதயநிதியின் வசீகரம்

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சந்திரன், புதன், சனி ஆகிய கிரகங்களை அரசு கிரகங்கள் என்பார்கள். இந்த கிரகங்கள் அனைத்தும் ஜாதகத்தில் முழுமையான பலம் பெற்று இருந்தால், உலகம் போற்றும் உத்தமத் தலைவன் என்ற பெயர் எடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியும்.நாலாம் பாவம் நாலாம் அதிபதி குரு சூரியன் செவ்வாய் பதவி பற்றி சொல்லும். நாலாம் பாவத்தில் சூரியன் இருந்தால் 40 வயதுக்கு மேல் ஜாதகர் நல்ல வளர்ச்சி அடைவார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

மக்கள் ஆதரவு

மக்கள் ஆதரவு

சினிமாவில் கால் பதித்து மக்களிடம் அறிமுகமான உதயநிதிக்கு நாற்பது வயதிற்கு மேல் கட்சியில் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்தது. தொடர்ந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார். தற்போது அமைச்சராகவேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. குருவின் பயணமும், குரு பார்வையும் உதயநிதிக்கு சாதகமாக இருப்பதாகவே ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

லாப குரு லாபத்தை தருவாரா?

லாப குரு லாபத்தை தருவாரா?

குருபகவான் பத்தாம் வீட்டில் இருந்து லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகியுள்ளார். குருவின் பார்வை மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. குரு பயணம் செய்யும் இடமும் பார்க்கும் இடங்களும் ரிஷப ராசியில் பிறந்த உதயநிதி ஸ்டாலினுக்கு சாதகமாகவே உள்ளது.

சனி திசையில் வெற்றி

சனி திசையில் வெற்றி

உதயநிதி ஸ்டாலினுக்கு சனி மகாதிசை தற்போது நடைபெறுகிறது. திமுகவில் பெரிய தலைவர்கள் பலரும் இருக்கின்றனர். உதயநிதியின் வயதை விட அனுபவசாலி தலைவர்கள் திமுகவில் இருக்கின்றனர். என்றாலும் ஸ்டாலின்குப் பிறகு உதயநிதிதான் என்று இப்போதே பலரும் பேசத் தொடங்கி விட்டனர். குருவின் பார்வை ரிஷப ராசிக்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளின் மீது விழுகிறது. பதவி யோகம் தேடி வரும் என்று சொல்வது போல அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.

தொழில் சனி

தொழில் சனி

ரிஷப ராசியில் பிறந்த உதயநிதிக்கு சனி தற்போது ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். விரைவில் அதிசாரமாக பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். தொழில் சனி பதவியில் மாற்றத்தை தரப்போகிறார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஒருவரின் ஜாதகம் எத்தனை யோகமானதாக இருந்தாலும் அவருக்கு தசா புத்தி சரியானதாக இருக்க வேண்டும். கோச்சார ரீதியாகவும் கிரகங்கள் சரியாக அமைய வேண்டும். உதயநிதி ஸ்டாலினுக்கு கிரகங்களின் பெயர்ச்சி பார்வை சாதகமாக இருந்தாலும் அவர் அமைச்சராக பதவியேற்பது அவரது தந்தையும் முதல்வருமான மு.க ஸ்டாலின் கையில்தான் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+