சந்திர கிரகணத்தால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

இன்றைக்கு நிகழும் சந்திர கிரகணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களும் 12 ராசிகளை ஆளுகின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் தவிர நிழல் கிரகங்களான ராகு கேதுவும் மனிதர்களின் வாழ்க்கையில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சூரியன், சந்திரன் உடன் ராகு கேது இணைந்திருக்கும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இன்றைக்கு நிகழும் சந்திர கிரகணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 19ம் தேதி வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஆளக்கூடிய ரிஷப ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இந்த கிரகணம் ஐரோப்பாவின் வட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் நன்றாகத் தெரியும். வட கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா போன்ற பகுதிகளில் மிகவும் தெளிவாக பகுதி சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி சந்திரகிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியன மிகவும் முக்கியமான வானியல் நிகழ்வுகளாகும். கிரகணம் நிகழும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பரிகாரங்கள் சொல்லப்படுவதுண்டு.
இன்றைய தினம் பரிகாரம் செய்யத் தேவையில்லை என்றாலும் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன் நிகழும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான ரிஷப ராசியில் சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பானது. பண நெருக்கடிகள் நீங்கும். நீண்ட நாட்களாக வராத பணம் கைக்கு வந்து சேரும்.

ரிஷபம்

ரிஷபம்

ராசியில் உள்ள ராகுவால் மன குழப்பம் ஏற்பட்டாலும் சந்திரன் உங்கள் ராசியில் இணைந்திருப்பதால் பணத்தை பத்திரமாக வைத்திருக்கவும். உடல் ரீதியான சில பாதிப்புகள் ஏற்படலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் கிரகண நேரத்தில் வெளியே சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. மகான்கள் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நன்மையை ஏற்படுத்தும். மவுன இருப்பது மன அமைதியை ஏற்படுத்தும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசி அதிபதி கிரகணத்தின் பிடியில் சிக்கியிருப்பதால் வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் கடன் வாங்க நேரிடலாம்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே கவனம் அவசியம், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படலாம் கவனம்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உடல் உழைப்பு அதிகரிக்கும் உடலுக்கும் மனதுக்கும் சற்றே ஓய்வு கொடுப்பது அவசியம்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. இன்றைய தினம் உங்களின் நிதி நெருக்கடிகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்களின் குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினை ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

மகரம்

மகரம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்கள் ராசிக்கு திடீர் யோகங்கள் கை கூடி வரும். நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்களுக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவார்கள். அதே நேரத்தில் பண வரவும் அதிகரிக்கும் சேமிப்பும் கூடும்.

மீனம்

மீனம்

சந்திர கிரகணம் நிகழும் இந்த நாளில் நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வரும். மிகப்பெரிய காரியத்தை சாதிக்கப்போகிறீர்கள். அதற்கான நல்ல நேரம் இன்றே ஆரம்பித்து விட்டது. அனுபவிக்கத் தயாராகுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+