For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேய் பயம் போக்கும் காரைக்கால் அம்மையார் குருபூஜை!

சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரை குருபூஜை நாளில் தரிசித்தால் பேய் பயம் போகும் என்பது நம்பிக்கை.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பேய் பயம் கொண்டவர்கள் பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தில் குருபூஜை காணும் பேய்வுறு கொண்ட காரைக்காலம்மையை திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காட்டில் வணங்கி ஆடலரசனையும் வணங்கி அங்குள்ள மந்தனின் புதல்வன் மாந்தியையும் வணங்க பேய் பயமெல்லாம் நீங்கும்.

டிவியோ சினிமாவோ இன்றைக்கு பேய் கதைகள்தான் ஹிட் அடிக்கின்றன. பாம்பும், பேயும்தான் கதைகளாக உருவாகி வீடுகளில் உலா வருகின்றன. பேய் மீதான பயமே இன்றைக்கு மக்களை ஆட்டிவைக்கிறது. மனதைரியம் மிக்கவர்களை பேயோ பூதமோ எதுவும் செய்வதில்லை.

அழகிய பெண்ணாக இருந்த புனிதவதியின் காலில் கணவர் விழுந்து தெய்வமே என்று கூறிய உடன் அவர் இறைவனிடம் பேய் உருவம் வேண்டி நின்றார். அவர் வேண்டியபடியே எலும்புக்கூட்டையே உடலாகப் பெற்றார். இதனால்தான் அவரை பேயார் என்று சுந்தரர் பாடியுள்ளார்.

பேய் ஆன காரைக்கால் அம்மையார்

பேய் ஆன காரைக்கால் அம்மையார்

சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையில் `பேயார்` எனக் குறிக்கப்படுபவர் இவ்வம்மையார். இவர் தாம் அருளிச் செய்த பிரபந்தங்களாகிய மூத்த திருப்பதிகங்களின் திருக் கடைக் காப்புக்களிலும் அற்புதத் திருவந்தாதியின் இறுதிச் செய்யுளிலும்`காரைக்கால் பேய்` என உரைப்பதால் இவர் தம் ஊர் காரைக்கால் என்பதும் பேய் வடிவம் வேண்டிப் பெற்றபின் பாடியன ஆதலால் தன்னைப் பேய் எனக் குறித்துரைத்துள்ளார்.

தலைகீழாக நடந்த அம்மையார்

தலைகீழாக நடந்த அம்மையார்

பேய் உருவம் எடுத்த காரைக்கால் அம்மையார், சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார். அப்போது சிவன் அவரை, அம்மையே என்றழைத்தார். பின்னர் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது, ‘பிறவாமை வேண்டும். பிறந்தாலும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்' என்றார் காரைக்கால் அம்மையார். சிவபெருமான் அப்படியே அருள்செய்தார். அதன்பிறகு ஆலங்காடு வந்த காரைக்கால் அம்மையார், அங்கும் தலைகீழாகவே நடந்து வந்து தரிசனம் செய்தார்.

தெய்வமான அம்மையார்

தெய்வமான அம்மையார்

சிவபெருமான் `தென்னாட்டில் திருவாலங்காட்டில் யாம் ஆடி அருளும் திருக்கூத்தினைக் கண்டு எம்மைப் பாடிப் போற்றி இன்புற் றிருப்பாயாக` என அருளினார்.
இன்று குருபூஜை கானும் காரைக்கால் அம்மையாரின் புனித சரித்திரத்தில் இருந்து பேய்கள் தெய்வத்தன்மை பெற்று இறைவனுடன் ஐக்கியமானவர்களையே நினைவுபடுத்துகிறது. ஆனால் இன்று பலரும் குறிப்பிடும் பேய் முற்றிலும் மாறுபட்ட தன்மை கொண்டதாகவே காணப்படுகிறது.

பேய் பற்றிய அச்சம்

பேய்க்கும் ஜோதிடத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என காண்பதற்கு முன் பேயை பற்றி சில குறிப்புகளை காண்போம்.

•பேய் எப்போதும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோதான் இருக்கிறது. அதிலும் பேய் எப்போதும் இளைமைகவே இருக்கிறது. வயதான பேய்கள்
இருப்பதாக யாரும் குறிப்பிட்டதில்லை.

•ஆண் எப்போதும் பெண் பேயை தான் காண்கிறான். பெண்ணின் மேல் பிடித்ததாக கூறப்படுவதெல்லாம் ஒரு ஆணின் காரணமாக ஒரு பெண் பேயோ அல்லது ஒரு ஆண் பேயோ தான் இருக்கும்.

• பேய் எப்போதும் மல்லிகைப்பூ, வெள்ளை ஆடை, கொலுசு அணிந்துதான் வருகின்றன.

•எத்தனை மிருகங்களை கொன்று தின்றாலும் அவையெல்லாம் பேயாவதில்லை.

•எந்த ஒரு படித்த மருத்துவரையோ அல்லது ஆசிரியரையோ அல்லது வழக்கறிஞரோஅல்லது ஐஏஎஸ் அதிகாரியோ பேயால் பாதிக்கப்பட்டதில்லை.

•எந்த ஒரு அந்தணரையும் பேய் தாக்கியதாக சரித்திரமில்லை. சரி! அப்படியென்றால் பேய் இருக்கிறதா? இல்லையா? அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என ஒரு சொலவடை உண்டு.

பேயை காண்பதற்காண கிரக நிலைகள்:

பேயை காண்பதற்காண கிரக நிலைகள்:

•மேலே பேய் பற்றி குறிப்பிட்ணவைகளிலிருந்து பேய் என்பது காதல் நோக்கமோ அல்லது பழிவாங்கும் நோக்கமோ கொண்டதாக தெரிகிறது. இது இரண்டிற்குமான கிரக நிலை செவ்வாய் மற்றும் சுக்கிர கிரக சேர்க்கையாகும்.

• கௌமார மற்றும் யவன அவஸ்தையின் காரணமாகவே பேய் வருவதாக அறியப்படுகிறது. கௌமார அவஸ்தைக்குறிய கிரகம் செவ்வாயாகும். யவன அவஸ்தைக்குறிய கிரகம் சுக்கிரன் ஆகும். வெள்ளை நிறத்திற்க்கும் மல்லி வாசத்திற்கும் அதிபதி சுக்கிரன்.

•தைரியகாரகன் செவ்வாய். செவ்வாய் பலமிழந்தவர்களுக்கு தைரிய குறைவினால் பேயை பற்றிய பயம் ஏற்படுகிறது.

•மூன்றாம் பாவத்தை தைரியத்தை குறிக்கும் பாவமாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மூன்றாம் பாவத்தில் சனி, கேது போன்ற கிரகங்களோ அல்லது மூன்றாம் பாவாதிபதி பலமிழந்தாலோ பேயயை பற்றிய பயம் ஏற்படுகிறது.

•சந்திரன் மனோ காரகன் என்பதால் சந்திரனின் நிலை மனதின் பாதிப்புகளை பிரதிபளிக்கிறது. மிதுன ராசிகாரர்கள், கன்னி ராசிகாரர்கள் மற்றும் விருச்சிக ராசி காரர்கள் தைரியமற்றவர்களாக இருப்பார்கள் இவர்கள்தான் பெரும்பாலும் பேயை பார்ததாக கூறுவார்கள்.

•லக்னத்தில் மாந்தி, சந்திரனோடு மாந்தியை ஜாதகத்தில் இருக்க பெற்றவர்களும் தைரிய குறைவினால் பேய்பயம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பேய் பயம் தீர பரிகாரம்:

பேய் பயம் கொண்டவர்கள் பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தில் குருபூஜை காணும் பேய்வுறு கொண்ட காரைக்காலம்மையை திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காட்டில் வணங்கி ஆடலரசனையும் வணங்கி அங்குள்ள மந்தனின் புதல்வன் மாந்தியையும் வணங்க பேய் பயமெல்லாம் நீங்கும்.

English summary
Karaikkal Ammaiyarர், which means "the revered mother from Karaikkal", one of the three women amongst the sixty three Nayanmars.I am a servitor to Peyar”. Sundarar called Karaikal Ammaiyar as as a Peyar (ghost) because that is how she transformed herself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X