For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திகை தீபத்திருநாள்: அண்ணாமலையார் கோவிலில் 10ல் கொடியேற்றம்,19ல் பக்தர்கள் இன்றி மகாதீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் பங்கேற்பின்றி நவம்பர் 19ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் என்றும் மகாதீபத்திருவிழா நாளன்று பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 10ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. வருகின்ற 19ஆம் தேதி அதிகாலையில் 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும். தீபத்திருவிழா நாளன்று பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Karthika Deepam Festival: Flag hoisting at Annamalaiyar temple on the 10th, Mahadeepam on the 19th 2021

நினைத்தாலே முக்தி தரும் ஆலயம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்சபூதத்தலங்களில் நெருப்பு தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை ஆலயம். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

 கண்ணகி சிலை அருகே குடிபோதையில் அரைநிர்வாணமாக பெண் மறியல்.. மெரினாவில் பரபரப்பு கண்ணகி சிலை அருகே குடிபோதையில் அரைநிர்வாணமாக பெண் மறியல்.. மெரினாவில் பரபரப்பு

Recommended Video

    அண்ணாமலையார் மகா கார்த்திகை தீபத் திருவிழா.. பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

    கொரோனா பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டாக திருக்கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற உள்ளது. காலை மற்றும் இரவு வேளைகளில் நடைபெறும் பஞ்சமூர்த்தி ஊர்வலங்கள் அண்ணாமலையார் திருக்கோயிலின் 5ஆம் பிரகாரத்தில் நடைபெறும் என்றும், மேலும் பரணி தீபம் மற்றும் மகாதீப நாளான 19ம் தேதி அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வர அனுமதியில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டு தீபத்திருவிழா நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருக்கோயில் அதிகாரிகள், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாதம் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை மற்றும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தினமும் 10,000 பக்தர்கள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 10ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. வருகின்ற 19ம் தேதி அதிகாலையில் பரணி 4 மணிக்கு தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.

    தொடந்து இரண்டாவது ஆண்டாக திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் காலை மற்றும் இரவு வேளைகளில் நடைபெறும் பஞ்சமூர்த்தி ஊர்வலங்கள் அண்ணாமலையார் திருக்கோயிலின் 5ஆம் பிரகாரத்தில் நடைபெறும் என்றும், மேலும் பரணி தீபம் மற்றும் மகாதீப நாளான 19ம் தேதி அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வர அனுமதியில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தீபத்திருவிழா நாளன்று கோவிலின் உள்ளே பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அதனால் வீட்டில் இருந்தபடி விழா நிகழ்வுகளை பக்தர்கள் காண தொலைக்காட்சி, யூடியூப், கோவில் இணைய தளம், அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    English summary
    The Thirukarthikai Deepam Festival is scheduled to begin on the 10th with the flag hoisting at the Annamalaiyar Temple. The Bharani lamp will be lit on the 19th at 4 am and the Maha Deepam will be mounted on the 2668 feet high Annamalaiyar hill behind the temple at 6 pm. Devotees are advised not to come to the temple on the day of the fire festival.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X