மகாளய அமாவாசை 2021: முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளித்த பொதுமக்கள் - தடையை மீறி புனித நீராடினர்
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு புனித நீர் நிலைகளில் நீராடவும் திதி , தர்ப்பணம் தரவும் தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி மக்கள் குவிந்தனர்.
சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பொது மக்கள் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பொது இடங்களில் தர்ப்பணம் தர தடை இருந்தாலும் தடையை மீறி பலரும் தர்ப்பணம் அளித்து முன்னோர்களை வழிபட்டனர். சென்னை, கடலூர் உள்ளிட்ட பல ஊர்களில் மக்கள் தடையை மீறி தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது. அமாவாசை முந்தைய 14 நாட்களும் மகாளய பட்சமாக கடைபிடிக்கப்பட்டு திதி தர்ப்பணம் அளித்து வழிபடுவது வழக்கம். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. வாரத்தில் மற்ற நாட்கள் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாளய அமாவாசை புதன்கிழமை வருவதால் கட்டுப்பாடு இருக்காது. எனவே தர்ப்பணம் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று பொது மக்கள் கருதினர்.

இன்று மகாளய அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்யவும், புண்ணிய தீர்த்தங்களில் தர்ப்பணம் செய்யவும் அரசு தடை விதித்தது.
மிக முக்கியமான தீர்த்த தலமான ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், சேதுக்கரை தீர்த்தம், தேவிப்பட்டினம் தீர்த்தம், சாயல்குடி மாரியூர் கடற்கரை ஆகிய இடங்களில் நீராடவும், தர்ப்பணங்கள் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட இன்று முதல் 2 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஏராளமானோர் தடையை மீறி புனித நீராடி தர்ப்பணம் அளித்து முன்னோர்களை வழிபட்டனர்.
சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம், மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளம் உள்பட அனைத்து கோவில்களின் திருக்குளங்களிலும் பொதுமக்கள் திரண்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இன்று தர்ப்பணம் கொடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையிலும் ஏராளமானோர் காலை முதலே தர்ப்பணம் அளித்தனர். அதே போல பசுவிற்கு அகத்திக்கீரையும் கொடுத்தனர்.
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். பக்தர்கள் வருவதைத் தடுக்க திருவள்ளூர் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட இடங்களில் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உள்ள சாந்தாரம்மன் கோவிலில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து பலரும் வீடுகளில் தர்ப்பணம் செய்தனர். திருவையாறு அய்யாரப்பர் கோவில், காவிரி படித்துறை, கும்பகோணம் பகவத் படித்துறை ஆகிய இடங்களில் தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்ட நிலையிலும் பல இடங்களில் ஆங்காங்கே தர்ப்பணம் அளித்தனர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு பாயும் வாங்கல், நொய்யல், வேலாயுதம்பாளையம், நெரூர் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி ஆற்றங்கரை, கோபால சமுத்திர கரை, திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகா நதி ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை. கோபாலசமுத்திரம் 108 விநாயகர் கோவிலிலும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும் தர்ப்பணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மாசாணியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை முருகன் கோவில் ஆகிய 4 கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி தாமிரபரணி படித்துறைகளில் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி வரை 6 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும், படித்துறைகளில் திதி, தர்ப்பணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொரிமுத்து அய்யனார் கோவிலிலும், பாபநாசம் கோவில்களிலும் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில், கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு இன்று முதல் 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் கடற்கரையிலும் தர்ப்பணம் கொடுக்க தடை விதித்துள்ளனர். கோடியக்கரை கடற்கரையிலும் பக்தர்கள் புனித நீராட தடைவிதித்து கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். தடையை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மயிலாடுதுறையில் தரங்கம்பாடி, பூம்புகார் கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் பொதுமக்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில் அருகே திறந்தவெளி மைதானத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இன்று முதல் 2 நாட்கள் அந்த மைதானத்தில் பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமத்தில் ஏராளமானவர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுப்பார்கள். அங்கு இன்றுமுதல் பொது மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் தர்ப்பணம் செய்ய தடைவிதித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் மகாளய அமாவாசை நாளில் பொது இடங்களில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். என்றாலும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் அளித்தனர். இதுபோல கெடிலம் ஆற்றின் கரையிலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் அளித்தனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications