• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஹா சிவராத்திரியும் சிவ பக்தர்கள் அணியும் விபூதியும்...

By Mayura Akilan
|

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

மகா சிவராத்திரி இன்று சிவ ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு கூருகிறது. இந்த நாளில் சிவ பக்தர்கள் அணியும் விபூதி எனப்படும் திருநீரு தயாரிக்கும் முறையை அறிந்து கொள்வோம். விபூதி தயார் செய்ய உபயோகிக்கும் சானத்தின் தன்மையை கொண்டு விபூதியை நான்கு வகைகளாகவும் அந்த சானத்தை தரும் பசுக்களின் தன்னையை கொண்டு ஐந்து வகைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு எப்பவுமே விட்டுக்கொடுக்கும் குணம் கொஞ்சம் ஜாஸ்தி என்பது கடவுள் விஷயத்திலும் நிருபணம் ஆகிறது. எப்படி என்கிறீர்களா? பெண்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் சிறப்புமிக்க தினங்களா ஒன்பது இரவுகளை கொண்ட நவராத்திரியை கொண்டாடுகின்றனர். ஆனால் ஆண்களும் ஆண் தெய்வங்களும் எல்லாம் இந்த விஷத்தில் ஒரே ஒரு இரவை மட்டும் தங்களுக்கு வைத்துக்கொண்டு விட்டு கொடுத்துவிட்டனர். அதுதான் சிவராத்திரி என போற்றப்படுகிறது.

Mahashivratri: The Spiritual science and the Divine Knowledge

மாசி மாதம் க்ரு‌ஷ்ண பக்ஷம் சதுர்தசி திதி திருவோணம் நக்ஷத்திரம் ஒன்று சேரும் நாள் சிவராத்திரி. இது வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் வரும் சிவராத்திரி. மாசி மாத சதுர்த்தசி திதியினை நாம் மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். எண்ணிய எல்லாம் நிறைவேற ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி பணியும் நேரமும் அதுவே. அப்படி பணிந்து பேருபெற்றவர்களில் சிலர்.

மகாபாரதத்தில் அர்ஜூ தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றது,கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது, பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது,என்றும் பதினாறு வயதுடையோன் மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது,அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது, இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.

கோடி ஸூர்ய ப்ரகாசத்துடன் பரமேஸ்வரன் லிங்க வடிவில் மஹாலிங்கமாக இன்று தான் முதன்முதலில் தோன்றினார் என்கிறது நாரத புராணம். சிவபெருமானின் அடி முடி காண முடியாது நான்முகன் திகைத்த நாள். சிவபஞ்சாக்ஷர மந்திர உபதேசம் குரு மூலம் உபதேசம் பெற சிவ பஞ்சாக்ஷர மந்திர ஜபம் ஹோமம் செய்து ஸித்தி பெற சிறந்த நாள்.

சிவராத்ரியன்று உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பதாலும் முயற்சியுடன் பகலிலும் இரவிலும் தூங்காமல் கண் விழிப்பதாலும் சிவ லிங்கத்தை பூஜை செய்வதாலும் குறைவற்ற அனைத்து யோகங்களும் அனுபவித்து விட்டு இறுதியில் சிவ லோகம் அடையலாம். சக்தியற்றவர்கள் பால் பழம் மட்டும் சாப்பிடலாம். சிவன் கோவிலில் சிவன் சன்னதியில் மண்ணாலான அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைக்கலாம்.

மஹா சிவராத்ரியன்று விபூதி தயாரிக்கும் முறை.

விபூதி எனப்படும் சைவர்கள் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐசுவரி்யம் என்றும் கூறப்படும். விபூதி தயார் செய்ய உபயோகிக்கும் சானத்தின் தன்மையை கொண்டு விபூதியை நான்கு வகைகளாகவும் அந்த சானத்தை தரும் பசுக்களின் தன்னையை கொண்டு ஐந்து வகைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

Mahashivratri: The Spiritual science and the Divine Knowledge

நான்குவகை திருநீறு:

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை கல்பம், அணுகல்பம், உபகல்பம்,அகல்பம்

கல்பம்:

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம

மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும்.

அணுகல்பம்:

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

உபகல்பம்:

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து

எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

அகல்பம்:

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும். திருநீறு ஐந்து வகைப்படும் அவை, இரட்சை,சாரம்,பஸ்மம்,பசிதம்,விபூதி. சிவராத்திரி அன்று ருத்ர ஜபத்துடன் தயாரிக்கப்படும் வீபூதியே முதல் தரமானது மற்றும் விஷேஷமானது ஆகும்.

சிவராத்திரியன்று காலை நித்ய கர்மாக்களை முடித்துவிட்டு வீட்டின் நடுவிலோ அல்லது கொல்லை புறத்திலோ அல்லது திறந்த வெளியில் முன் சேகரித்து வைத்த நெல்பதர் (கருக்காய்)- பச்சரிசி தவிடு,உமி, வைக்கோல் பசுமாட்டு காய்ந்த சாணி உருண்டைகள் .வரிசையாக அடுக்கி குவித்து விட வேண்டும். தினந்தோறும் பசு மாட்டு சாணியை சிறிய அளவில் தட்டையாக தட்டி வெய்யலில் காய வைக்க வேண்டும் பிறகு ஸ்வாமி சன்னிதியில் எரியும் தீபத்திலிருந்து கற்பூரம் ஏற்றிக்கொண்டு வந்து அதை ஹோமகுண்டத்தில் வைத்து அந்த அக்னியில் ருத்ர ஜபம் மற்றும் விரஜா ஹோமம் என்னும் தைத்தரீய உபநிஷத்திலுள்ள மந்திரங்களால் அல்லது பஞ்சாக்ஷர மந்திரத்தால் பசு நெய்யால் ஹோமம் செய்ய வேண்டும்.

பிறகு இந்த அக்னியை குவித்து வைத்துள்ள சாணி உருன்டைகளில் போட்டு அது நன்கு எரிந்து ஸுமார் ஒரு நாள் முழுவதும் எரிந்து அதன் கறுப்பு நிறம் மாறி வெண்மையாக மாறும். அதை சலித்து சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதுவே விபூதி தயாரிக்கும் முறை. சிவனுக்கு இந்த வீபூதியை அபிஷேகம் செய்து விட்டு உபயோகிகலாம்.

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

சிவராத்திரி மற்றும் விபூதிக்கான ஜோதிட விளக்கங்கள்

ஆக்கல், காத்தல், அழித்தல் எனும் படைப்பின் சுழற்சியில் ப்ரம்ம தேவர் ஆக்கல் தொழிலையும் ஸ்ரீ விஷ்னு பகவான் காத்தல் பணிகளையும் ருத்ர மூர்த்தியான சிவ பகவான் அழித்தல் தொழிலையும் செய்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். எனவேதான் அவரை கால சம்ஹார மூர்த்தி என்றும் புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றது சிவபெருமான் அணிவது விபூதி என்பதும் சிவ பெருமான் இருக்கும் இடம் மயானம் ஆகும். காசியே ஒரு மயான பூமிதானே!

விபூதி கூறும் வாழ்க்கை தத்துவம்:

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தைஉணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

விபூதி எனும் சாம்பலுக்கு ஜோதிட காரகர் யார் தெரியுமா? ஞான காரகன் என்றும் மோட்ச காரகன் என்றும் வர்ணிக்கப்படும் கேது பகவான்தான்.கேதுவை ஞான காரகன் எனவும் மோட்ச காரகன் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. கேது தான் இருக்கும் இடங்களையும் (பாவங்கள்) பார்க்கும் இடங்களையும் அழித்து அந்த பாவ காரகங்களின் மூலமாக ஞானத்தை வழங்கி பின் மோட்சத்தையும் வழங்கி விடுகிறார்.

கேதுவின் அதிதேவதை ருத்ரன் ஆகும். அதாவது சிவனின் மிக ஆக்ரோஷமான ஸ்வருபம் ஆகும். எனவேதான் கேதுவும் அழிக்கும் தன்மையை பெற்றிருக்கிறார் போலும்! கேதுவின் தன்மை நெருப்புத்தன்மை ஆகும். தேவையற்ற அனைத்தையும் அழித்து பிடி சாம்பலாக்கி படைப்பின் மறுசுழற்சிக்கு உதவுபவர் கேதுவாகும். மேலும் கேதுவின் காரகங்களில் மயானம், கல்லரை, சுடுகாடு, பிணவரை, பிண ஊர்தி, கழிவு அகற்றுதல், முடி, முடி திருத்துதல், பிணம் எரித்தல்/அடக்கம் செய்தல், பிரளயங்கள், குரூர சம்பவங்கள், கொத்து கொத்தான மரணங்கள், தீ விபத்துகள், எரிந்து நாசமாகுதல் போன்றவை அடங்கும்.

ஆக்கத்திற்க்கு உபயோகிக்கும் நெருப்பிற்க்கு சூரியனும் செவ்வாயும் காரகனாகின்றனர். ஆனால் அழிவை தரும் நெருப்பு, தீ விபத்துகள், பிணத்தை எறிக்கும் நெருப்பு, எரிமலை, தூமகேது எனப்படும் எரிகற்கள் (தூமகேது கேதுவின் மகனாவார்) ஆகியவை கேதுவின் ஆதிக்கமும் காரகமும் கொண்டவையாகும்.

இன்று சிவராத்திரியில் சிவ பூஜை செய்யும் ஆகோரிகளும் கேதுவின் ஆதிக்கம் பெற்றவர்களே. அவர்கள் அறைகுறையாக வெந்த பிணந்தின் மாமிசத்தையும் கஞ்சா போன்ற போதை வஸ்துவின் பிடியில் யோக நிஷ்டையில் இருப்பதும் கேதுவின் ஆதிக்கமே.எனவே கேதுவை அழித்தல் மற்றும் மறுபிறப்பிற்க்கு வழிவகுத்தல் என கூறப்படுகின்றது. ஜோதிடத்தில்

அஸ்வினி,மகம் மற்றும் மூலம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு கேதுவை அதிபதி என்கிறது ஜோதிடம். இதை சற்று கூர்ந்து கவனித்தால் கேது அழிவிற்க்கும் மறுஉற்பத்திக்கும் இடையில் இருப்பது புலனாகும்.

விம்சோத்தரி தசா வரிசையில் ஓருவரின் கடைசி நிலையை (மரணத்தை) குறிப்பது புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம்-கேட்டை-ரேவதி ஆகும். உலகில் உற்பத்தியின் ஆரம்பம் சுக்கிலமாகும்.

அதை குறிக்கும் சுக்கிரனின் நட்சத்திரங்கள் பரணி, பூரம் பூராடம் ஆகும். மேஷ மண்டலமானாலும், சிம்ம.மண்டலமானாலும் தனுர் மண்டலமானாலும் புதனின் நட்சத்திரத்திற்கும் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கும்

இடையில் தான் கேதுவின் நட்சத்திரங்கள் அமைந்திருக்கும். இதுவே நமக்கு பிறப்பின் மறுசுழற்சியை விளக்கும்.

ஒருவரிடமிருந்து ஒரு பொருளை நைச்சியமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது அதிரடியாக அபகரித்தும் கொள்ளலாம். கேது தான் இருக்கும் பாவத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தியும் (ஞான காரகன்) நம்மிடமிருந்து நீக்கிவிடுகிறார். தான் நின்ற மற்றும் பார்த்த பாவத்தை முற்றிலும் செயல்படாமல் செய்தும் நீக்கி விடுகிறார் (மோட்ச காரகர்). அவர் பக்தியையும் ஞானத்தையும் மட்டுமே கேட்காமலே வாரி வாரி

வழங்கிவிடுகிறார்.

காஞ்சி பெரியவரின் ஜாதகத்திலும் சீரடி சாய் பாபாவின் ஜாதகத்திலும் லக்னத்திற்க்கு இரண்டில் கேது சனியோடு சேர்ந்து நின்று குடும்ப ஸ்தானம், சுகஸ்தானம், மற்றும் அயன சயன போக ஸ்தானங்களுக்கு மோட்சத்தை அளித்து அவர்கள் சித்த புருஷருகளாக வாழந்தது கேதுவின் ஞான காரகத்திற்க்கு உதாரணமாகும். இந்த சிவராத்திரி நாளில் சிவனை வழிபடுவதால் கேதுவின் அருளும் பெற்று ஞானமும் மோக்ஷமும் பெற்று உய்வோமாக.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The festival of Mahashivaratri is celebrated on the 14th day of the dark fortnight of the month Magha. The Bhasma or Vibhuti that comes out of saints palms also contain the waves of Lord Shiva:

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more