For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாசி மகம், காரடையான் நோன்பு மார்ச் மாதத்தில் என்னென்ன விஷேசம் இருக்கு தெரியுமா

மார்ச் மாதம் மாசியும் பங்குனியும் இணைந்த மாதம். சூரியன் கும்பம் மற்றும் மீனம் ராசியில் சஞ்சரிப்பார். கும்ப மாதமும், மீனம் மாதமும் இணைந்த மார்ச் மாதத்தில் என்னென்ன முக்கிய பண்டிகைகள் விஷேச நாட்கள் இருக

Google Oneindia Tamil News

சென்னை: பனிக்காலம் முடிந்து வசந்த காலம் துவங்கப்போகிறது. மார்ச் மாதத்தில் மாசி மாதத்தின் பிற்பகுதியும், பங்குனி மாதத்தின் முற்பகுதியும் இணைகிறது. கும்பம் மாதமும் மீனம் மாதமும் இணைந்த இந்த மாதத்தில் மாசி மகம், காரடையான் நோன்பு உள்ளிட்ட பல முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன.

மாசிப்பௌர்ணமி அன்றுதான் அன்னை பரமேஸ்வரி காளிந்தி நதியில் தாமரை மலரில் சங்கு வடிவத்தில் தோன்றினாள். சிவ‌பக்தனான தட்சன் சங்கினைத் தொட்டவுடன் குழந்தையாக மாறி தாட்சாயிணி என்ற பெயரில் தட்சனின் மகளாக வளர்ந்தாள். எனவே மாசிபௌர்ணமி அன்று அன்னையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி, வாழ்வின் இன்பம் ஆகியவற்றைப் பெறலாம்.

March month important festival Days

மாசிப்பௌர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. பௌர்ணமிகளில் மாசிப் பௌர்ணமி அன்று மட்டும்தான் மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் நடத்தப்படுகிறது. வள்ளலாளன் என்ற திருவண்ணாமலை அரசனுக்கு அண்ணாமலையார் அரசனின் வேண்டுகோளின்படி மாசிபௌர்ணமி அன்றுதான் நீத்தார் கடன் செய்தார். அதனால் மாசி பௌர்ணமி அன்று பெரியோர்களுக்கு சிரார்த்தம் இன்றும் செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பு.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் வெகுசிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவே வடஇந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்நாளில் விரதமிருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது விசேஷம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும்

மாசி மாதம் மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர். சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின் நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். காரடையான் நோன்பு கொண்டாடப்படுவது மார்ச் மாதத்தில்தான். பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்ச் மாதத்தில் என்னென்ன விஷேச தினங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம். இதை மறக்காம உங்க டைரியில குறிச்சு வச்சிக்கங்க.

மார்ச் மாத முக்கிய விஷேச நாட்கள்

மார்ச் 1 ஞாயிறு கிழமை மாசி கிருத்திகை விரதம்
மார்ச் 5 வியாழக்கிழமை வாஸ்து நாள் வீடு வாஸ்து செய்ய நல்ல நாள்
மார்ச் 8 ஞாயிறு கிழமை மாசி மகம் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் ஆறு குளங்களில் தீர்த்தவாரி நடைபெறும்.
மார்ச் 9 திங்கட்கிழமை மாசி பவுர்ணமி காம தகனம் ஹோலிப்பண்டிகை
மார்ச்12 வியாழக்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம்
மார்ச் 13 வெள்ளிக்கிழமை ரங்க பஞ்சமி, கும்ப கிருஷ்ண பஞ்சமி
மார்ச் 14 சனிக்கிழமை காரடையான் நோன்பு கௌரி விரதம்
மார்ச் 16 ஞாயிறு கிழமை பானு சப்தமி சூரிய வழிபாடு செய்ய நல்ல நாள்
மார்ச் 21 சனிப்பிரதோஷம் சிவ ஆலயம் சென்று நந்தி தேவரை வழிபட நல்ல நாள்
மார்ச் 25 யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு வசந்த நவராத்திரி பூஜை ஆரம்பம்

English summary
March month important festival Days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X