For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மார்கழி திருவாதிரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனுர் மாத பூஜை - 19ல் ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாத திருவாதிரை தினமான 19ஆம் தேதி நள்ளிரவு முதல் 20ஆம்தேதி அதிகாலை வரை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மாணிக்கவாசகர் திருவெண்பா உற்சவம் நடைபெறுகிறது. தனுர் மாத திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 16ஆம்தேதி முதல் ஜனவரி மாதம் 13ஆம் தேதி வரை திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும்.

Markazhi Thiruvathirai: Arudra Darshan on the 19th at the Meenakshi Amman Temple in Madurai

இந்த நாட்களில் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை முடிந்து, பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜைகள் நடக்கும். இவை முடிந்த பின் 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

வரும் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. மேற்கண்ட நாட்களில் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில் உற்சவர் சன்னதியில் தைலக்காப்பு மற்றும் தீபாராதனை முடிந்த பின் சுவாமி-அம்பாள் 4 ஆடி வீதிகளில் வலம் வருவார்கள்.

18ஆம் தேதி கோ ரதத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஆடி வீதிகளில் புறப்பாடாவார். 19ஆம் தேதி கனக தண்டியலில் அம்மன் எழுந்தருள்கிறார். 20ஆம் தேதி திருவாதிரை அன்று பொன்னூஞ்சல் மண்டபத்தில் இருந்து சுவாமி ரி‌ஷப வாகனத்திலும், அம்மன் மர சிம்மாசனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருகிறர்கள்.

சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரை விழா 11ல் கொடியேற்றம் - 19ல் திருத்தேரோட்டம், 21ல் ஆருத்ரா தரிசனம் சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரை விழா 11ல் கொடியேற்றம் - 19ல் திருத்தேரோட்டம், 21ல் ஆருத்ரா தரிசனம்

11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மாணிக்க வாசகர் 100 கால் மண்டபம் நடராஜர் சன்னதி முன்பு உள்ள சவுக்கையில் எழுந்தருள்கிறார். அங்கு திருவெண்பா பாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 4 ஆடி வீதிகளில் வலம் வருகிறார்.

மார்கழி மாத திருவாதிரை தினமான 19ஆம் தேதி நள்ளிரவு முதல் 20ஆம்தேதி அதிகாலை வரை நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள் பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர பொருட்களை 19ஆம் தேதி மாலை 7 மணிக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Manikkavasagar Thiruvenpavai festival is held from the 11th to the 20th at the Meenakshi Amman Temple in Madurai. It has been announced that devotees will be allowed to perform darshan from 4.30 am onwards in view of the Tanur month festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X