For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவன்- மனைவி அந்நியோன்னியத்தை கூறும் மருதானி- ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: மருதாணியை விரும்பாத மங்கையர் உண்டா? மருதாணி இலைகள் பறித்து, அம்மியில் அரைத்து, சிறிது சிறிதாக எடுத்து, கை, கால்களில் இட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து, காலையில் கழுவிய பின், யாருக்கு அதிகம் சிவந்திருக்கின்றன என்று பார்க்க போட்டியே நடக்கும் அந்தக் காலத்தில். மருதானி இலைகள் அழகுக்காக மட்டுமே அல்லாமல், உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றன.

இந்த காலத்தில் ஒரு பெண் தான் மணக்க போகும் கணவனின் குணாதிசயங்களை அறிய பல வாய்ப்புகள் இருக்கின்றன. ஜாலியாக பழகலாம் வாங்க என டேட்டிங் என்ற பெயரில் சேர்ந்து பழகி பழகி திருமணத்திற்க்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்க்கு நாகரீகமூம் சுதந்திரமும் வளந்துவிட்டது. ஆனால் அந்த காலத்தில் பெண்கள் திருமணம் வரை கணவனை ஏறெடுத்தும் பார்க்காத காலத்தில் ஒரு பெண்ணிற்க்கு வரப்போகும் கணவனின் குணாதிசயங்களை இரண்டு விஷயங்களின் வாயிலாக அறிய முடியும் என நம் முன்னோர்கள் நம்பினார்கள். அவை:

maruthani-is a natural herbal plant used to paint the body which cures several skin diseases

1. ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளின் வாயிலாக அறிவது.

2. திருமணமாக இருக்கும் பெண்ணிற்க்கு மருதானி இடுவதன் மூலம் அறிவது.

ஒரு பெண்ணின் கையில் இடும் மருதானி விரைவில் சிவந்துவிட்டால் அவள் கணவன் அவள்மேல் அதிக காதலுடன் இரும்பான் என்றும் அதனால் தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என பெற்றோர் பெருமை படுவர். மருதானி சரியான நிறத்துடன் சிவந்தவர்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.

maruthani-is a natural herbal plant used to paint the body which cures several skin diseases

சிலருக்கு ஆரஞ்சு கலரைத் தாண்டாது. சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். மருதானி சிவக்காமல் மஞ்சள் குளித்தால் அது சீதள உடம்பை குறிப்பதாகும். அதிகம் கருத்துவிட்டாளோ அது பித்த உடம்பு என்கிறது. இரண்டு நிலைகளிலும் கருத்தரிப்பது தாமதமாகும் என்கிறது ஆயுர்வேதம். இன்றைய காலகட்டங்களில் பல இடங்களில் வழக்கொழிந்துவரும் நிலையில் உள்ளது மருதானி.

மருதானி தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப்போன்று மகாலக்ஷமி வாசம் செய்யும் மருத்துவ குணம் கொண்ட புதர்வகை செடியை சார்ந்ததாகும். மருதானிக்கு அசோகமரம் என்ற பெயரும் உண்டு. சீதையை சிறை வைத்திருந்த இடத்தில் மருதானி மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் அதற்க்கு அசோக வனம் என்ற பெயர் ஏற்ப்பட்டது. இராமாயணத்தில் சீதை லங்கையில் அசோக வணத்தில் இருக்கும்போது சீதைக்கு தனது கிளைகளின் அசைவால் ஆறுதல் கூறி வந்தது. சீதை இந்த மரத்திற்கு கொடுத்த வரம்; உன்னை பூஜிப்பவர்க்கு, தண்ணீர் ஊற்றுபவர்களுக்கு உன் இலைகளை சாப்பிடுபவர்களுக்கு,கையில் பூசி கொள்பவர்ககு துன்பம் வராது என்று. கல்யாணத்திற்கு முதல் நாள் மருதாணி பூசிக்கொள்ளூம் பழக்கம் இப்படியாக ஏற்பட்டது.

maruthani-is a natural herbal plant used to paint the body which cures several skin diseases

இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும், இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும். இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக வளர்கிறார்கள்

ஜோதிடமும் மருதானியும்:

மகாலக்ஷமி வாசம் செய்யும் மருதானியை சுக்கிரனின் அம்சம் என்கிறது ஜோதிடம். என்றாலும் அதன் பயன்களை பார்க்கும்போது சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையின் விளைவுகளாகவே விளங்குகிறது. இது உடம்பின் சூட்டை தனித்து குளுமையை ஏற்படுத்தும். மேலும் அழகு சம்மந்தபட்ட பொருட்களுக்கெல்லாம் சுக்கிரனே காரகர் ஆவார். ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை இருப்பவர்களுக்கெல்லாம் மருதானி நன்கு சிவந்து அழகை தரும். மருதானியின் காரக பாவம் கன்னி என்கிறது பாரம்பரிய ஜோதிடம். மருதானியை அதிகமாக பயன்படுத்தும் கையினை குறிக்கும் சந்திரனின் நக்ஷத்திரமான ஹஸ்தம் கன்னியில் இருப்பதால் இதை காரக பாவமாக குறித்தார்களா அல்லது கன்னிப்பெண்கள் மருதானியை அதிகமாக விரும்புவதால் வந்ததா என்பது இதுவரை புலப்படவில்லை.

maruthani-is a natural herbal plant used to paint the body which cures several skin diseases

சுக்கிர செவ்வாய் சேர்க்கை உள்ளவர்களுக்கு காமத்தில் அதிக ஆர்வம் இருக்கும் என ஜோதிடமும் மருதானி அழகாக சிவப்பவர்களெல்லாம் தங்கள் கணவன்மார்களை சந்தோஷபடுத்துவதில் சிறந்தவர்கள் என ஆயுர்வேத மருத்துவமும் கூறுகிறது.

மருதானியின் மருத்துவ பயன்கள்:

1.சுக்கிரனின் அம்சமான மருதா‌னி இலையை வெறு‌ம் அழகு‌க்காக மட்டும் பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கவல்லது.

2.மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். நகத்தின் காரகர் செவ்வாய் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நகசுத்தி வராமல் தடுக்கவும் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். (செவ்வாய் -சுக்கிர சேர்க்கை)

3.மருதானியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். சுகமான தூக்கத்தின் காரகர் சுக்கிரன் என்பதை நாம் நன்கு அறிவோம் அல்லவா!

maruthani-is a natural herbal plant used to paint the body which cures several skin diseases

4.இதன் இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். தொண்டை நோயின் காரகரும் சுக்கிரன் தானுங்க!

5.மருதானி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும். மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கருமையான நீண்ட கூந்தலுக்கு சுக்கிரபகவானின் அருள் வேணுமுங்கோ!

maruthani-is a natural herbal plant used to paint the body which cures several skin diseases

6. மருதானி இலையை மருதானி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேக நோய் இரண்டும் மேலும் பரவாமல் தடுக்கும். தோல் நோய்களுக்கு சுக்கிரனும் காரகர் என்கிறது மருத்துவ ஜோதிடம்

7. சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்தநெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து இருவேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம். ‌கிடை‌‌க்கு‌ம். பிறப்புறுப்பு நோய்களை குறிப்பது காலபுருஷனுக்கு ஏழாம் வீடான துலா ராசியும் அதன் அதிபதி சுக்கிரனும் ஆகும்.

8.மஹாலக்ஷமியின் அருள் நிறைந்த மருதானி இலைகளை கொண்டு மஹாலக்ஷமியை அர்ச்சித்தால் லக்ஷமி கடாக்ஷம் நிறையும் என்கிறது வேதம்.

9. ஸ்திரி தோஷம், சுமங்கலி தோஷம் போன்ற தோஷங்களை ஜாதகத்தில் பெற்றவர்கள் சுமங்கலி பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் உணவிட்டு மருதானியால் கைகள் மற்றும் கால்களில் நலங்கு இட்டு வணங்கி ஆசி பெற தோஷங்கள் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.

தகிக்கும் அக்னி நக்ஷத்திர வெயிலில் உடல் சூடு காரணமாக பல தோல் நோய்கள் வரும் நிலையில் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் மருதானியை கைகளிலும் உள்ளங்காலிலும் பயன்படுத்தினால் உடலின் சூடு தனிந்து வெம்மை நோயிலிருந்து விடுபடலாம்.

-அஸ்ட்ரோ சுந்தர ராஜன்

English summary
For centuries, mehndi—the art of henna painting on the body—has been practiced in India, Africa, and the Middle East, where the henna plant is believed to bring love and good fortune, and to protect against evil. Mehndi is traditionally practiced for wedding ceremonies, during important rites of passage, and in times of joyous celebration. A paste made from the crushed leaves of the henna plant is applied to the skin, and when removed several hours later, leaves beautiful markings on the skin that fade naturally over 1 to 3 weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X