• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருதானி இட்டுண்டு வந்தாலே மகராசி!

By Mayura Akilan
|

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: மருதானி தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப் போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் கொண்ட புதர்வகை செடியை சார்ந்ததாகும்.

ஒரு பெண்ணிற்கு வரப்போகும் கணவனின் குணாதிசயங்களை இரண்டு விஷயங்களின் வாயிலாக அறிய முடியும் என நம் முன்னோர்கள் நம்பினார்கள். அவை:

1. ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளின் வாயிலாக அறிவது.

2. திருமணத்திற்கு இருக்கும் இளம் பெண்ணிற்க்கு மருதானி இடுவதன் மூலம் அறிவது.

ஒரு பெண்ணின் கையில் இடும் மருதானி விரைவில் சிவந்துவிட்டால் அவள் கணவன் அவள்மேல் அதிக காதலுடன் இருப்பான் என்றும் அதனால் தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என பெற்றோர் பெருமை படுவர். கல்யாணத்திற்கு முதல் நாள் மருதாணி பூசிக்கொள்ளூம் பழக்கம் இப்படியாக ஏற்பட்டது.

Medical uses and benefits of maruthani

மருதானி சரியான நிறத்துடன் சிவந்தவர்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது. சிலருக்கு ஆரஞ்சு கலரைத் தாண்டாது. சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும்.

மருதானி சிவக்காமல் மஞ்சள் குளித்தால் அது சீதள உடம்பை குறிப்பதாகும். அதிகம் கருத்துவிட்டாளோ அது பித்த உடம்பு என்கிறது. இரண்டு நிலைகளிலும் கருத்தரிப்பது தாமதமாகும் என்கிறது ஆயுர்வேதம்.

இன்றைய காலகட்டங்களில் பல இடங்களில் வழக்கொழிந்துவரும் நிலையில் உள்ளது மருதானி.

மருதானி தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப்போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் கொண்ட புதர்வகை செடியை சார்ந்ததாகும். மருதானிக்கு அசோகமரம் என்ற பெயரும் உண்டு.

சீதையை சிறை வைத்திருந்த இடத்தில் மருதானி மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் அதற்கு அசோக வனம் என்ற பெயர் ஏற்பட்டது.

இராமாயணத்தில் சீதை இலங்கையில் அசோக வணத்தில் இருக்கும்போது சீதைக்கு தனது கிளைகளின் அசைவால் ஆறுதல் கூறி வந்தது. சீதை இந்த மரத்திற்கு கொடுத்த வரம்; உன்னை பூஜிப்பவர்க்கு, தண்ணீர் ஊற்றுபவர்களுக்கு உன் இலைகளை சாப்பிடுபவர்களுக்கு,கையில் பூசி கொள்பவர்க்கு துன்பம் வராது என்று.

ஜோதிடமும் மருதானியும்:

மகாலட்சுமி வாசம் செய்யும் மருதானியை சுக்கிரனின் அம்சம் என்கிறது ஜோதிடம். இது உடம்பின் சூட்டை தனித்து குளுமையை ஏற்படுத்தும். மேலும் அழகு சம்மந்தபட்ட பொருட்களுக்கெல்லாம் சுக்கிரனே காரகர் ஆவார்.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை

ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை இருப்பவர்களுக்கெல்லாம் மருதானி நன்கு சிவந்து அழகை தரும்.

சுக்கிர செவ்வாய் சேர்க்கை உள்ளவர்களுக்கு காமத்தில் அதிக ஆர்வம் இருக்கும் என ஜோதிடமும் மருதானி அழகாக சிவப்பவர்களெல்லாம் தங்கள் கணவன்மார்களை சந்தோஷபடுத்துவதில் சிறந்தவர்கள் என ஆயுர்வேத மருத்துவமும் கூறுகிறது.

யாருக்கு மருதானி என்ன நிறம்?

சுக்கிர செவ்வாய் சேர்கை பெற்றவர்களுக்கு மருதானி நன்கு சிவக்கும். சுக்கிரன்-சந்திரன், சுக்கிரன் புதன் சேர்க்கை கொண்டவர்களுக்கு மஞ்சள் அல்லது ஆரஞ்சு கலரில் சிவக்கும். சுக்கிரன்-செவ்வாயோடு ராகு, சனி பார்வை சேர்க்கை பெற்றவர்களுக்கு கருத்து விடும்.

மருதானியின் மருத்துவ பயன்கள்:

1. சுக்கிரனின் அம்சமான மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக மட்டும் பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது.

2. மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். நகத்தின் காரகர் செவ்வாய் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நகசுத்தி வராமல் தடுக்கவும் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். (செவ்வாய் -சுக்கிர சேர்க்கை)

3. மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த

தூக்கம் வரும். சுகமான தூக்கத்தின் காரகர் சுக்கிரன் என்பதை நாம் நன்கு அறிவோம் அல்லவா!

4. இதன் இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். தொண்டை நோயின் காரகரும் சுக்கிரன் தானுங்க!

5. மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும். மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை

ஏற்படுத்தும். கருமையான நீண்ட கூந்தலுக்கு சுக்கிரபகவானின் அருள் வேணுமுங்கோ!

6. மருதாணி இலையை மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு

பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேக நோய் இரண்டும் மேலும் பரவாமல் தடுக்கும். தோல் நோய்களுக்கு சுக்கிரனும் காரகர் என்கிறது மருத்துவ ஜோதிடம்

7. சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்தநெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து இருவேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம்

‌கிடை‌‌க்கு‌ம். பிறப்புறுப்பு நோய்களை குறிப்பது காலபுருஷனுக்கு ஏழாம் வீடான துலா ராசியும் அதன் அதிபதி சுக்கிரனும் ஆகும்.

8. மகாலட்சுமியின் அருள் நிறைந்த மருதானி இலைகளை கொண்டு மகாலட்சுமி அர்ச்சித்தால் லட்சுமி கடாட்சம் நிறையும் என்கிறது வேதம்.

9. ஸ்திரி தோஷம், சுமங்கலி தோஷம் போன்ற தோஷங்களை ஜாதகத்தில் பெற்றவர்கள் சுமங்கலி பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் உணவிட்டு மருதானியால் கைகள் மற்றும் கால்களில் நலங்கு இட்டு வணங்கி ஆசி பெற தோஷங்கள் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Henna or Maruthani is the evergreen plant which is well-known for its colouring properties. Benefits Of Henna For Hair Growth. Maintains Scalp Health. Henna can be quite cooling to the scalp.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more